பெங்களூரு விமான நிலைய பேருந்துகளில் இனி செக் இன் செய்யலாம்

Web Check-in Kiosk in Bengalaru Airport Buses Helps Skipping Long Queues at Airline Counters

பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) சார்பில் பல்வேறு வழித்தடங்களில் விமான நிலையத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளின் எண்ணிக்கையைக் கூட்டும் விதமாக நிறைய புதிய வசதிகளை பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விமான நிலையம் செல்லும் பயண நேரத்தில் பேருந்தில் இருந்தே விமான பயணிகள் செக் இன் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இணைய அடிப்படையிலான கியாஸ்க்(Web based Kiosk)

கியாஸ்க் என்பது இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு தற்போது எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து விமான நிலையம் செல்லும் பேருந்துகளில் மட்டும் நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த கியாஸ்க் அமைப்பின் மூலமாகப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே, விமானத்தில் பயணிக்க தேவைப்படும் அனுமதிச் சீட்டினை பயணிகள் அச்செடுத்துக்கொள்ள (Print Out) முடியும். இதன் மூலம் விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது. சுமை அதிகம் இல்லாமல், வெறுமனே ஒரு கை பையுடன் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி சிறந்த முறையில் பயனளிக்கும்.

சோதனை முயற்சியாக இரண்டாவது தடவையாக எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து விமான நிலையம் செல்லும் பேருந்துகளில் இந்த வசதி நிறுவப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு இந்த வசதி மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் பேருந்துகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

‘இந்தத் திட்டம் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு இதே வசதி இருபது நாட்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட போது அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. கொஞ்சக் கொஞ்சமாக இந்தத் திட்டத்தினை அனைத்து வழித்தடங்களுக்கும் விரிவு படுத்த இருக்கிறோம்’ என்று பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகத்தில் பிரதேச கட்டுப்பாட்டாளராக வேலை செய்யும் ரமேஷ் தெரிவித்தார்.

‘சராசரியாக எந்தவொரு வழித்தடத்தில் இருந்தும் விமான நிலையம் செல்ல ஒரு மணி நேரம் ஆகும். ஆகவே பயணிகள் பேருந்தில் இருந்து கொண்டே அனுமதிச் சீட்டை பெறுவதின் மூலம் பெருமளவுக்கு நேரம் மிச்சப்படுத்தப்படும். அனுமதிச் சீட்டு பெறும் நடைமுறையில் பேருந்து நடத்துநர்கள் பயணிகளுக்கு உதவுவார்கள்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தற்போதைக்கு இந்த வசதி ஐந்து நிறுவனங்களின் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அவை முறையே ஏர் ஆசியா(Air Asis) , கோ ஏர்(Go Air) , இன்டிகோ(Indigo), ஜெட் ஏர்வேஸ்(Jet Airways) மற்றும் ஸ்பைஸ்ஜெட்(Spice Jet) ஆகும்.

பயணிகளின் பைகளை பேருந்தில் இருந்து கொண்டு செல்லப் பாதையை உருவாக்குவது பற்றியும் விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி வருவதாக பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்துள்ளனர். ஓலா மற்றும் உப்பர் போன்ற நிறுவனங்களின் போட்டி காரணமாக விமான நிலைய பேருந்துகளால் அதிக அளவுக்குப் பயணிகளை ஈர்க்க முடியாமல் இருந்தது. இதனால் பேருந்து கட்டணத்தை 37% வரைக்கும் குறைத்து பார்த்தனர். இதையடுத்து பயணிகளின் எண்ணிக்கை அடுத்த 15 நாட்களில் 43% அளவுக்கு அதிகரித்தது.

Related Articles

மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்ப... பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக பல்வேறு மொழிகளில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், சினிமா ரசனை ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைச் செய்தது. மறக்கவே முடியாத...
தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடா? அவர... ஆன்மீகத்தில் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறதா? இவர் எழுதிய புத்தகத்தை படியுங்கள்! ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண...
டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் ம... டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டுக்கு செல்லும் அதிவேக சாலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. 149 கிலோ மீட்டர்கள் தொலைவு உள்ள இந்த இ...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) 2018 ஐபிஎல்...  வரிசை எண் போட்டி எண் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 3 8-ஏப்ரல் கொல்கத்தா vs பெங்களூர் 8:00 PM கொல்கத...

Be the first to comment on "பெங்களூரு விமான நிலைய பேருந்துகளில் இனி செக் இன் செய்யலாம்"

Leave a comment

Your email address will not be published.


*