உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள்” இந்தியாவில் தான் இருக்கிறது!

ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் என செல்பி பைத்தியங்களுக்கு செக் வைத்து உள்ளது.  அந்த அளவுக்கு செல்பி மோகம் பிடித்தவர்களாக மாறிவிட்டோம். செல்பி எடுப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது ஒருபுறமிருக்க ஒரு நாளைக்கு அதிக தடவை செல்பி எடுப்பதால் அது அவர்களை அறியாமலே ஒரு மனநோயாக மாறிவிடுகிறது.

உலக அளவில் செல்பி எடுப்பதன் மூலம் உயிரிழப்பவர்களில் இந்தியர்கள் முதலிடம் பிடித்து உள்ளதாக pittsbergh university மற்றும் இந்திரபிரசாத் தகவல் தொழில்நுட்பம் இணைந்து நடத்திய ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது. கடந்த 2014 ம் ஆண்டு முதல் உலக அளவில் பலதரப்பினர் செல்பி மோகத்தால் உயிரழிப்பவர்களின் எண்ணிக்கையும் அதற்கான காரணத்தையும் ஆராய்ந்து வருகிறது.

அப்படி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உலகம் முழுக்க 213 இந்தியர்கள் உயிர் இழந்து உள்ளனர். அதில் 128 பேர் இந்தியர்கள். 2014 ல் 15 இந்தியர்கள், 2015 ல் 39 இந்தியர்கள், 2016 ல் 86% ஆக உயர்ந்து 2017 ல் 73% ஆக குறைந்து உள்ளது. இப்படி இந்தியா முதலிடம் பிடிக்க, பாகிஸ்தான் இரண்டாம் இடமும் அமெரிக்கா மூன்றாம் இடமும் பிடித்து உள்ளது.

அமெரிக்கன் சைக்காட்ரியக் அசோஷியேசன் இது குறித்து ஆய்வு நடத்தி இதனை ஒரு மனநோயாளி என்றும் அதற்கு செல்பிட்டிஸ் என்ற பெயரையும் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று செல்பி எடுப்பவர்கள் இந்த நோயின் தொடக்கத்தில் இருப்பவர்களாகவும் ஆறு செல்பி எடுப்பவர்கள் அதனை மறக்காமல் பேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் பெற விரும்புபவர்களையும் மனநோயாளி என்று அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

Related Articles

Vikatan Awards – Zee Awards –... Zee Cine Awards Tamil 2020Best actor - Dhanush (Asuran) Favourite actor - Vijay (Bigil) Sridevi inspiring woman of indian cinema award - N...
ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39... 2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்கு...
பெண்கள் அரசியலுக்கு வர தயங்குவது ஏன்? அர... பிரதீபா பாட்டில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் என்று தற்...
தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுக... தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அ...

Be the first to comment on "உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள்” இந்தியாவில் தான் இருக்கிறது!"

Leave a comment

Your email address will not be published.


*