ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்றத்தில் வைக்கலாமா கூடாதா?

ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்றத்தில் வைக்கலாமா கூடாதா?

சட்ட சபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்த காலத்திலிருந்தே அது குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பியது. ஆனால், யார் என்ன பேசினாலும் சரி நாங்கள் எங்க இஷ்டத்துக்கு தான் இருப்போம் என்ற கணக்கில் அவருடைய உருவபடத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் திறந்துவைத்துள்ளது இன்றைய ஆளுமைகள்.

ஊழல் குற்றவாளி என்பதால் திறந்தது தவறு

ஆட்சியில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போன இந்தியாவிலயே முதல் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா. அவர் ஊழல் குற்றவாளி தான் என்பதை உச்சநீதிமன்றம் அவர் இறந்தபிறகும் கூட உறுதிபடுத்தியுள்ளது. இருந்தபோதிலும் அவருடைய உருவப்படத்தை அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராசர், அண்ணா, மகாத்மா காந்தியடிகள் போன்ற கலங்கமில்லாத தியாக தலைவர்களின் படங்களுக்கு அருகே இவர் உருவப்படத்தை வைப்பது கண்டனதுக்குரியது என்றும், இவர் உயிருடன் இருந்திருந்தால் சொத்துகுவிப்பு வழக்கில் இந்நேரம் தண்டனைக்குரிய குற்றவாளியாக வாழ்ந்திருப்பார், அவர் இறந்துவிட்டதால்  அவர் செய்த தப்பு சரியென்று ஆகிவிடாது, ஹிட்லர் கூட தான் இறந்துவிட்டார் அதற்காக அவர் செய்த தவறுகளை தவறு இல்லை என்று கூறமுடியுமா என்றும் இது தவறான முன்னுதாரணம் என்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த பெண் ஆளுமை என்பதால் திறந்தது மிகச்சரியே

தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கான தனி ஆளுமைக்குணமும் வெகுஜன ஆதரவும் கொண்ட ஒரே பெண் தலைவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவரை கடுமையாக சாடுபவர்கள் கூட எதையும் எதிர்த்து நிற்கும் அவருடைய துணிச்சலை கண்டு வியந்து பாராட்டிய தருணங்களும் உண்டு. ஆதலால் துணிச்சல் மிகுந்த ஒரு பெண் ஆளுமையின் உருவபடத்தை சட்டசபையில் திறக்காமல் இருந்தால் தான் தவறு என்றும், இதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கக்கூடாது என்றும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டத்தை பொறுத்த வரை இது தவறு தான். மெரினா கடற்கரையில் “அரசின் செலவில்” ஜெயலலிதாவுக்கு சமாதி அமைக்க, அவருடைய இல்லத்தை நினைவு இல்லமாக்க, அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவருடைய உருவப்படத்தை திறக்க திட்டம் வகுத்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வராமல் இருக்கிறது. ஆனால் அதற்குள் சட்டசபையில் அவருடைய உருவபடத்தை திறந்து வைத்திருப்பது ஆகச்சிறந்த விதிமீறல். ஜனநாயக நாட்டில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மதிப்பில்லாமல் போவதை என்னவென்று சொல்வது?

Related Articles

K – 13 படம் எப்படி இருக்கு?... இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் K-13. நாயகன் திரைப்பட இயக்குனர், நாயகி எழுத்தாளர்(காட்சிப் பிழை என்ற புத்தகம் எழுதியுள்ளா...
மும்பை இந்தியர்கள் (MI) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி மும்பை இந்தியர்கள் போட்டிகள் நேரம் இடம்1 1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 7...
அவளுக்காக எத்தனை கொலை வேணாலும் பண்ணுவேன்... இந்தியா பாகிஸ்தான், காளி, எமன், சைத்தான், திமிரு புடிச்சவன் இப்படி தொடர் தோல்வியில் இருந்த விஜய் ஆண்டனிக்கு நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது கொலைகா...
புற்றுநோயை உண்டாக்கும் பால் பாட்டில்கள்!... குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்த படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்க கூடிய அபாயம் உடைய பிஸ்பினா ஏ என்ற மூலப...

Be the first to comment on "ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்றத்தில் வைக்கலாமா கூடாதா?"

Leave a comment

Your email address will not be published.


*