வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த பாஜக எம்பி

வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த பாஜக எம்பி

அரசியல்வாதிகளின் கரங்கள் கறை படியாதிருத்தல் அறம். ஆனால் மற்றுமொரு அரசியல்வாதியின் கரங்களில் கறை பட்டிருக்கிறது. இம்முறை நேர்மறையாக. மத்திய பிரதேசம் ரேவா தொகுதி பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா எந்தவொரு உபகரணங்களும் இல்லாமல் தனது தொகுதிக்கு உட்பட்டிருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றின் கழிப்பறையை சுத்தம் செய்துள்ளார். மண் அடைப்பால்  பல நாட்கள் பயன்பாடின்றி இருந்த அந்தக் கழிப்பறையை ஜனார்தன் சுத்தம் செய்த காணொளி செய்தி ஊட்டங்களில் வெளிவந்து மிக வேகமாகப் பரவி வருகிறது. டிவிட்டரில்  வெளியான சில மணி நேரங்களிலேயே 30000 பார்த்துள்ளனர், 3000 பேர் விருப்ப குறி இட்டிருக்கின்றனர் . 1600 முறை மறு ட்வீட்  செய்யப்பட்டிருக்கிறது. பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் தீவிர ஆதரவாளர் ஜனார்தன் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

அடுத்த “அஞ்சான்” படமா சாமி2 ... இது டிரெய்லர் காலம் போல. ஒவ்வொரு  நாளுக்கும் எதாவது ஒரு டிரெய்லர் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கோலிசோடா2, சண்டக்கோழி2, தமிழ்படம் 2, சாமி2 என...
ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! ... காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந...
முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் கால... இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு ஒளிப்பதிவ...
இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி குறித்து நெ... ஈசியா ஜெயிச்சுடலாம்னு நம்பிக்கையோடு தூங்கப் போனோம்!கடைசில இப்படி ஆகிடுச்சே! 2018 ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றின்...

Be the first to comment on "வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த பாஜக எம்பி"

Leave a comment

Your email address will not be published.


*