பாகுபலி நாயகனின் “சாஹோ” படம் எப்படி இருக்கு? – சாஹோ திரைவிமர்சனம்!

Saaho movie review

படம் ரிலீசான அடுத்த நொடிகளில் இருந்து இந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டு இருந்தாலும்  பாகுபலி நாயகனின் படம் என்பதால் இந்தப் படம் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த மிகப் பெரிய ஓப்பனிங் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறதா உதவி செய்திருக்கிறதா… ரசிகர்களை ஏமாற்றமால் திருப்தி படுத்தியதா… திகைப்பில் ஆற்றியதா… என்றால் கேள்விக்குறி தான் பதிலாக கிடைக்கும். 

வழக்கமான கமர்சியல் அம்சங்களுடன் ஹீரோவின் எண்ட்ரி வருகிறது. அப்போது தியேட்டரில் உண்டான கரவோசைகளை விட அருண் விஜய் எண்ட்ரி ஆன போது தியேட்டரில் விசில் சத்தம் அதிகம் வருகிறது. அருண் விஜய் அடைந்திருக்கும் உயரம் வியக்க வைக்கிறது. இந்தப் படத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். சண்டைக் காட்சிகள் மிரட்டுகின்றன. சிறந்த சண்டை பிரிவில் தேசிய விருது வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஷ்ரத்தா கபூர் தன்னுடைய பங்கை சிறப்பாக ஆற்றி உள்ளார். 

ஹாலிவுட் படத்திற்கு நிகரான மேக்கிங் மனதை கவர்கிறது சில சமயம் மிரளவும் செய்கிறது. ஆனால் அடிக்கடி ஹாலிவுட் படம் ரசிகர்களுக்கு இந்தப் படம் இவ்ளவுதான என்ற சலிப்பையே உருவாக்கும். பின்னணி இசை பக்கா. பாடல்களும் நன்றாகவே உள்ளன. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் தான் சுமாரோ சுமார். ஒளிப்பதிவு மிரட்டல்! . ஒரு சில இடங்களில் பின்னணி இசையும் ஹீரோவுக்கான பில்டப்புகளும் கேஜிஎப் படத்தை மற்றும் ஹ்ரித்திக் ரோசனின் தூம் படத்தையும் நினைவூட்டியது. சில இடங்களில் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த அலெக்ஸ்பாண்டியன் பட காட்சிகளும் நினைவுக்கு வந்து செல்கின்றன. பிரபாசுக்கான தமிழ் டப்பிங் வாய்க்குள் பீடாவை வைத்துக் கொண்டு பேசுவது போல் உள்ளது. இடைவேளை டுவிஸ்ட் எதிர்பாராதது, படத்தின் மிகப் பெரிய லாஜிக் ஓட்டையும் அதுவே. பிரபாஸ் மலையில் இருந்து குதிக்கும் காட்சிக்கு தியேட்டரே சிரிக்கிறது. 

” உங்களுக்கு ரெண்டு ஆப்சன்ஸ்.., ஒன்னு அவன விட்றது… இன்னொன்னு உயிர விட்றது… “, ” காலிங் பெல் அடிச்சிட்டு வர அவன் கொரியர் பாய் இல்ல… கொலைகாரன்… “, ” நான் உன் தோல உரிச்சா… சிட்டில இருக்குற அத்தனை செருப்பு தைக்கறவங்க வந்தாலும் உன் தோல தைக்க முடியாது… “, ” லேட்டா தெரிஞ்சுக்க அவன் ஒன்னும் போலீஸ் இல்ல… திருடன்… எப்பவும் நம்மள விட ஒரு ஸ்டெப் முன்னாடி தான் இருப்பான்… “, ” இந்த சின்ன ரிங்கு குள்ள எவ்ளவு பெரிய காதல் இருக்கு தெரியுமா… “, ” திருடன் கூட சேர்ந்து உன் புத்தி கூர்மை ஆயிடுச்சு… “, ” டை ஹார்ட் பேன்ஸ்… சாகற வரைக்கும் விட மாட்டாங்க… “, ” புலியும் மானும் ஒரே காட்டுல இருக்குமே தவிர… ஒரே குகைல இருக்காது… “, ” நம்பிக்கை எங்க இருக்கோ அங்க பயமும் இருக்கும்…”, ” சந்துல எவன் வேணாலும் சிக்ஸ் அடிக்கலாம்… ஸ்டேடியம்ல சிக்ஸ் அடிக்க ஒரு கெத்து வேணும்டா… “, ” ஆம்பளைங்க உங்களுக்கு இவ்வளவு சுயநலம் இருக்கும்போது உங்கள பெத்த எங்களுக்கு எவ்வளவு இருக்கனும்…”, ” கஷ்டப்பட்டு காப்பாத்துவன் தான் ஈசியா கொல்லவும் செய்வான்…”   போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.  

காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை அள்ளி தெளித்திருக்கிறார்கள். ஆனால் அவை எந்தவித பூரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. தயாரிப்பாளர் வம்சி மற்றும் புரோமோத் 350 கோடி செலவு செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் பெயரை பார்த்த ரசிகர்கள் அவர்களை நோக்கி போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார்களோ, ஐயோ பாவம் என்று குரலெழுப்பி செல்கிறார்கள். வில்லு, அசல் போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் அடங்கும்.

 

Related Articles

ஜெயகாந்தனின் ” ஒரு மனிதன் ஒரு வீடு... கதாபாத்திரங்கள் : டிரைவர் துரைக்கண்ணு, தேவராஜன் -  கிருஷ்ணராஜபுரத்து ஆசிரியர், கிளீனர் பாண்டு, ஹென்றி, சின்னான் - கிருஷ்ணராஜபுரத்த...
கடந்த 5 ஆண்டுக ளில் 187 ஆணவ படுகொலைகள்! ... கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப்பில் சாதி ஆணவ படுகொலை வீடியோ தீயாக பரவியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வீடியோவில் இள...
மலம் அள்ளுபவர்களுக்கு எதற்கு மரியாதை? மல... "ராணுவத்தில் இறந்து போகிறவர்களை மரியாதையாக பார்க்கும் இந்த சமூகம் மல குழிக்குள் இறங்கி மரணம் அடைபவர்களை ஏன் கேவலமாக பார்க்கிறது கண்டுகொள்ளாமல் இருக்கி...
“நம்மள மாதிரி பசங்களாம் ஒவ்வொரு வா... தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்இசை : இமான்எடிட்டிங் : ரூபன்ஒளிப்பதிவு : நீரவ் ஷாகதை திரைக்கதை வசனம் இயக்கம் : பாண்டியராஜ்நடிகர்கள் : சிவ...

Be the first to comment on "பாகுபலி நாயகனின் “சாஹோ” படம் எப்படி இருக்கு? – சாஹோ திரைவிமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*