அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு

H1B

H1B விசா காலம் முடிந்து, அமெரிக்காவில் நிரந்தரமாகத் குடியேறுவதற்கான  க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துக் காத்திருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற இருப்பதாகக் கடந்த வாரம் தகவல்கள் பரவின. டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அந்தத் தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளதால் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வெளியேற்றம் இல்லை

க்ரீன் கார்டுக்காக காத்திருப்பவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் H1B  விசா காலம் முடிந்த பின்னும், க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துக் காத்திருந்த அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அமெரிக்கா இழக்க நேரிடும்

கடந்த வாரம் பரப்பப்பட்ட தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது நிச்சயம் அந்நாட்டு அரசாங்கம் எடுத்த மிக மோசமான ஒரு முடிவாகவும், கொள்கையாகவும் இருந்திருக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்க நாட்டுக்காக உழைத்தவர்களையும், மிக அதிக திறன் பெற்றவர்களையும், நாட்டை விட்டு வெளியேற்றுவது அமெரிக்காவுக்குப் பேரிழப்பாக இருந்திருக்கக்கூடும்என்று அந்நாட்டின் வணிக சேம்பரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் இந்தக் கொள்கை செயல் வடிவம் பெற்றிருக்கும் பட்சத்தில், அது அமெரிக்காவின் பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கும் என்றும், மற்ற நாடுகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அவர் தெரிவித்தார்.

இது இறுதி முடிவல்ல

டொனால்டு ட்ரம்ப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர்கள், விசா நடைமுறைகளில் அவர் வருங்காலங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரத் தயங்க மாட்டார் என்கின்றனர். கடந்த ஜனவரி 2017 ஆம் ஆண்டு அவர் பதவி ஏற்றதிலிருந்து விசா நடைமுறைகளைக் கடுமையாக்கினார். அவரது அமெரிக்க வேலைவாய்ப்பு அமெரிக்கருக்கேஎன்ற பிரகடனம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் நிலை, மதில்மேல் பூனையாக இருந்து வருகிறது.

Related Articles

அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யா... மற்றவரின் புகழை வைத்து அரசியலை செய்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. எங்கள் ஆட்சி, அண்ணா ஆட்சி என்றும் , எம்.ஜி.ஆர் ஆட்சி என்றும், காமராசரை மிஞ்சிய ஆட்ச...
உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி ம... பணம்கொடுத்து அரசுப்பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, ட...
சு. தமிழ்ச்செல்வியின் கீதாரி புத்தக விமர... இயக்குனர் சமுத்திரக்கனியின் கிட்ணா படம் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை கதை என்று அங்கும் இங்குமாக அரசல்...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...

Be the first to comment on "அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு"

Leave a comment

Your email address will not be published.


*