ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலைக் கண்டுபிடிக்க உதவிய ரேடார்கள்

How radars unearthed 39 Indians killed in Iraq by ISIS

2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு
பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்குக்கும் சில
தகவல்கள் கிடைக்கின்றன. அதன்படி பதூஷ் நகரில் இரண்டு திட்டு போன்ற அமைப்புகள் காண
படுவதாகவும், அதில் ஏதோ புதையுண்ட நிலையில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

திட்டைத் தோண்டும் முயற்சி

ஈராக்கிய படைகள் உள்ளடக்கிய இந்திய அணிக்குத் தலைமை ஏற்ற அமைச்சர் சிங் அந்தத்
திட்டை தோண்ட முடிவு செய்தார். 2014 ஆம் ஆண்டு இராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகள்
ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அவர்கள் சிறைப்படுத்தி
வைத்திருந்தவர்களின் எச்சங்கள் கிடைக்கின்றனவா என்ற நோக்கில் திட்டு தோண்டப்பட்டது.

‘ஆரம்பத்தில் திட்டு தோண்டப்பட்ட போது ஆண்கள் கையில் அணியும் வளையமும் நீண்ட தலை
முடியும் கிடைத்தன. அதை முதன் முதலில் பார்த்த போது பஞ்சாபை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று ஊகித்தோம்’என்று அமைச்சர் சிங் தெரிவித்தார்.

மனித உடல்கள் தென்படுகின்றனவா என்பதை அறியத் தொடர்ந்து தோண்டும் படலம்
நடைபெற்றது. முதலில் கண்டெடுத்த இந்தியர் பஞ்சாபை சேர்ந்த சந்தீப் குமார் ஆவார்.
கைப்பற்றப்பட்ட எஞ்சியவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் அடையாளம்
காணப்பட்டது. பாக்தாத் நகரில் உள்ள தடயவியல் ஆய்வகங்கள் என்னும் இடத்தில் இந்தப்
பரிசோதனைகள் நடைபெற்றன. முன்னரே இந்திய அதிகாரிகள் தேடப்படும் இந்தியர்களின்
மாதிரிகளை அனுப்பி வைத்திருந்தனர். பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகே இறந்த
இந்தியர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 2014 ஆம் ஆண்டு, பஞ்சாபில் இருந்து கட்டுமான வேலைக்காக ஈராக்கிற்கு வந்த நாற்பது
தொழிலாளிகள் உடனான தொடர்பை ஈராக்கில் இருக்கும் இந்திய அதிகாரிகள் இழந்தனர்.
அவர்கள் அரசாங்க கட்டுமான திட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அவர்கள்
அனைவரையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் கடத்தி சென்றனர். அவர்களோடு சில
வங்கதேச தொழிலாளர்களையும் கடத்திச் சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட வங்கதேச
தொழிலாளர்கள் அனைவரையும் விடுவித்தது அந்த அமைப்பு. ஹர்ஜீத் மாசி என்ற இந்தியர்
ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு தகவல்
தெரிவித்தார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும், ஈராக்கிய படைகளுக்கும் இடையே நடந்த சண்டையின்
போது, பதூஷ் சிறைச்சாலை முழுவதும் அழிக்கப்பட்டது. பாக்தாத் அரசு சிறையில் யாரும்
இல்லை என்று அறிவித்தது. கடந்த ஆண்டு வரை அங்கிருந்த இந்தியர்களைப் பற்றி எந்தத்
தகவலும் ஈராக்கிய அரசிடம் இல்லை.அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது
கூட தெரியாமல் தான் இருந்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்கள்

பாதுஷ் நகரைப் பிடித்த உடன் இந்தியர்கள் அனைவருமே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத
அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலை தப்பித்து வந்த சுர்ஜித்
மாசி தெரிவித்தார். அப்போது அவர் கூற்றை இந்திய அரசாங்கம் ஏற்கவில்லை, ஏனெனில்
அப்போது இந்தியர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்ற தகவல் இந்திய அரசாங்கத்துக்கு
வந்து கொண்டிருந்தது.

பல இன்னல்களுக்குச் சகித்து கொண்டு, இறந்த இந்தியர்களை தங்களது தொடர் தேடுதலின்
மூலம் கண்டுபிடித்த அமைச்சர் சிங் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுக்கள்.

Related Articles

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குற... பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்...
ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால ச... இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்...
மருத்துவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட... " வா கங்காரு... " " கங்காரு இல்லடா... கங்கா தரன்... " * தரன் தரன் னு பேருல மட்டும் கங்கா தரன் காவிரி தரன்னு வச்சிக்கிட்டு கொடுத்த பணத...
மனிதாபமானமா? அப்படினா என்ன பாஸ்? – சமூகம... ஸ்பைடர் படத்தின் தாக்கத்திலிருந்து... அறிமுகமில்லாத மனிதனுக்கு எதிர்பார்ப்பில்லாமல் உதவி செய்வது தான் மனிதாபிமானம் என்ற கருத்தை சமீபத்தில் வெளியாகிய ...

Be the first to comment on "ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலைக் கண்டுபிடிக்க உதவிய ரேடார்கள்"

Leave a comment

Your email address will not be published.


*