போக்குவரத்து நெரிசல், பயணம் செய்பவர்கள் எவரும் விரும்பாதா ஒன்று. போக்குவரத்து
நெரிசலில் சிக்குவது என்பது அன்றைய ஒட்டுமொத்த நாளையே பதற்றம் நிறைந்த ஒன்றாக
ஆக்குவது. காலையில் கிளம்பி வேலைக்குச் செல்பவர்களே கூடப் போக்குவரத்து நெரிசலில்
சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அப்படியிருக்க நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கிட்டத்தட்ட
இரண்டு மணிநேரமாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்
மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஜோதி கவுட், நிறைமாத கர்ப்பிணி. கடந்த சனிக்கிழமை
மாலை அவர் பிரசவ வலியை உணர்ந்து இருக்கிறார். தான் வசிக்கும் சமன்யா ருக்ஞாலயா
பகுதியில் இருந்து தனது பெற்றோர்களுடன் கிளம்பி, மருத்துவமனை அமைந்திருக்கும் மல்வானி
பகுதிக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். இந்த இரண்டு இடத்திற்கும் இடையே 1 கிலோமீட்டர்
தொலைவு மட்டுமே. ஆனால் மும்பையின் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசலின் காரணமாக
குறித்த நேரத்திற்கு ஜோதியால் மருத்துவமனையைச் சென்றடைய முடியவில்லை.
இதன் காரணமாக தான் பயணம் செய்த ஆட்டோவிலேயே குழந்தையை பெற்றெடுத்தார் ஜோதி.
பிரசவம் ஆன கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை
அளிக்கப்பட்டது. தாயும் சேயும் தற்போது நலம்.
அந்தக் குழந்தைக்கு போக்குவரத்து நெரிசல் பற்றி யாரும் இனி சொல்லிக்கொடுக்க
தேவையில்லை.
Be the first to comment on "போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்"