தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான முறையில் விதிகளைப் பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி பொதுமக்களில் சிலரை ஸ்நைப்பர் வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டுத்தள்ளி பேரதிர்ச்சி கொடுத்தது சர்வதிகார அரசு.

 

இதனால் பத்துக்கும் மேற்பட்டோர் அநியாயமாக உயிரிழந்தனர். அவர்களில் சிலர் இருபது வயதுகள் உடைய இளம் வயதினர். அவர்கள் இப்போது தான் வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டிருக்க ஆரம்பித்திருப்பார்கள். அதற்குள் அவர்களுடைய வாழ்க்கையை வலுக்கட்டாயமாக முடிப்பது எந்த விதத்தில் நியாயம். உடனே தமிழகம் முழுக்க கலவரமும் ஆர்ப்பாட்டமும் வேலைநிறுத்தமும் கடையடைப்பும் நடத்திய பிறகே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.

 

இதனை மக்கள் போராட்டமாகத் தொடங்குவதற்கு முன்பே தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் வேடிக்கை பார்த்துவிட்டு காலம் கழித்துக் கொண்டு இருந்தது. குரல்கள் பல மடங்காக ஒலிக்கவே நிரந்தர தீர்வு கிடைத்து உள்ளது. இருப்பினும் போராட்டக் களத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு பதில் என்ன? லட்சக் கணக்கில் உயிரிழப்புத் தொகை கொடுத்தால் மட்டும் போதுமா? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

 

அவர்களுக்கு நீதி வேண்டி பல குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நீதிமன்றங்கள் ஊழல் குற்றவாளி என அறிவித்த முன்னாள் முதல்வருக்கு கோடிக் கணக்கில் ஆடம்பரமாக செலவு செய்து நினைவகங்கள் அமைப்பது இருக்கட்டும். இந்த சாமான்யர்களுக்கு அரசு தனது சொந்த செலவில் நிச்சயமாக நினைவகம் அமைத்து தர வேண்டும் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

Related Articles

“நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு ச... இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் சிவாஜி. அதில் அனைத்தையும் ரஜினி இழந்த பிறகு நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...
நடிக்க தெரியாத நடிகர் சிம்பு! –  இ... நடிகர் சிம்புவின் படங்கள் எப்போது தொடங்கும் எப்போது முடியும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத சூழல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.  அப்படியிருந்த...
” கடவுள் ஒரு சில்றபையன் ” &#... எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.பசுபதி, சிங்கப் பெருமா...

Be the first to comment on "தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்?"

Leave a comment

Your email address will not be published.


*