குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

குடியுரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனுவால் ஆகியோரது கொடும்பாவிகளை எரித்து அஸ்ஸாம் போராட்ட குழுவினர் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அஸ்ஸாம் ஜாடியாதபடி  யுவா சத்ரா பரிஷத் அமைப்பினர் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சட்ட திருத்தத்திற்கு எதிராகப் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

 

குடியுரிமை சட்டத்திருத்தம் 2016 என்ன சொல்கிறது?

இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் வழிசெய்கிறது. ஆறு ஆண்டுகள் முதல் பதினோரு ஆண்டுகள் வரை இந்தியாவில் குடியிருப்பவர்கள் இந்தச் சலுகையை பெறலாம்.

 

எதற்காகப் போராடுகிறார்கள்?

உள்ளூர் பழங்குடி மக்களின் இன, கலாச்சாரம், மொழி ஆகியவற்றை அழிக்கும் நடவடிக்கையாகவே இந்தக் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அச்சாம் மக்கள் கருதுகிறார்கள். எனவே அதற்கு எதிராக தங்கள் போராட்டத்தைப் பெரிய அளவில் முன்னெடுக்கிறார்கள்.

அனைத்து அஸ்ஸாம் மாணவர் தொழிற்சங்கத்தின் ஆலோசகர் சாமுஜல் பட்டாச்சார்யா இது குறித்து பேசும் போது ‘ “சட்ட மசோதாவுக்கு எதிரான ஒரு தொடர்ச்சியான மக்கள் இயக்கமும், அஸ்ஸாமின்  அரசியல் எதிர்காலம் மற்றும் அதன் பழங்குடி மக்களின் உயிர், அவர்களின் அடையாளங்கள், கலாச்சாரம் மற்றும் நிலம் ஆகியவற்றிற்கு பெரும் சேதம் ஏற்படுத்தும் போன்ற காரணங்களால் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோர் முன்னின்று இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்’ என்றார்.

Related Articles

டாடா பஞ்ச் EV (TATA Punch EV): ஒரு சிறிய... இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் டாடா பஞ்ச் EV (TATA Punch EV) ஒரு சுவாரசியமான சேர்க்கையாகும். இந்த சிறிய SUV பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் செயல...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...
ஒரு படம் எப்படி இருக்கனும் எப்படி இருக்க... வேற்று மொழி படங்களை ரீமேக் செய்யும்போது தமிழுக்கு (ரீமேக் செய்யப்படும் மொழி பேசும் மக்கள் ரசனைக்கு) தகுந்தாற்போல சில மாறுதல்கள் செய்ய வேண்டும். ...
ஒரு இந்தியா மூன்று அமெரிக்காவுக்கு சமம்!... ஒரு திரைப்படம் பார்த்தால் அதில் நாம் கற்றுக்கொண்ட விசியங்கள் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தன்னுடைய படங்களின் மூலமாக புதிய தகவல்களை பார்...

Be the first to comment on "குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன"

Leave a comment

Your email address will not be published.


*