நாலு பேருக்கு ஒரு தட்டு சாப்பாடு எப்படி சார் பத்தும்! – “யார் இவர்கள்” பட டீசர் வெளியானது!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் பாலாஜி சக்திவேல். சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண்18/9 என்று அவர் இயக்கிய படங்கள் அத்தனையும் முத்தான படைப்புகள். அது மட்டுமின்றி அவருடைய கூட்டாளி ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம். அதனாலயே படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது.

 

இன்று (ஜூன்7) யார் இவர்கள் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. யார் இவர்கள் என்ற தலைப்புக்கு ஏற்றபடியே வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்த பெச்சிட் விற்கும் உள்நாட்டு அகதிகளைப் பற்றி பேசுகின்ற படமாக இருக்கும் போல. ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று எந்த தனிநபர் அடையாளமும் இல்லாமல் வாழுபவர்கள் மீது பொய் வழக்கு தொடுத்து ஏமாற்றும் நயவஞ்சக உலகப்பற்றிய இன்னொரு படம். தமிழ்சினிமாவில் இதற்கு முன் இன்னொரு படம் வந்து உள்ளது. அது ஆந்திராவுக்கு பஞ்சம் பிழைக்கப் போன தமிழர்கள் பற்றிய படம். நீங்கள் யூகிப்பது சரிதான். விசாரணை படத்தைப் போல் பெரிய அளவில் பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். காரணம், சிறைக்குள் நால்வரை அடைத்து வைத்து ஒரு தட்டு சாப்பாட்டை அவர்கள் முன் விசிறி விடுகிறார்கள். அவர்களோ ” சார்… நாலு பேருக்கு ஒரு தட்டு சாப்பாடு எப்படி சார் பத்தும்… ” என்று கேட்கிறார்கள். விசாரணை படத்தின் மூலக்கதை எழுதிய மு.சந்திரகுமாரின் லாக்கப் நாவல் படித்தவர்களுக்கு விசாரணையுடன் யார் இவர்கள் படத்திற்கு உள்ள தொடர்பு புரிய வரும்.

Related Articles

உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள... ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் என செல்பி பைத்தியங்களுக்கு செக் வைத்து உள்ளது.  அந்த அளவுக்கு செல்பி மோகம் பிடித்தவர்களாக மாறிவி...
48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்... கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ...
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196... தமிழகத்தில் நீட் தேர்வு வந்த பிறகு, பல குளறுபடிகள் நடந்து உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு எழுத்துப்பிழைகள் காரணமா...
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பற்றிய சில ச... காமராஜ் - ஈஸ்வரி என்ற தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தார். தாய் தந்தை இருவரும் யூனியன் டிஸ்பென்ஸரியில் நர்சிங் அசிஸ்டென்டாக வேலை பார்த்தவர்கள்....

Be the first to comment on "நாலு பேருக்கு ஒரு தட்டு சாப்பாடு எப்படி சார் பத்தும்! – “யார் இவர்கள்” பட டீசர் வெளியானது!"

Leave a comment

Your email address will not be published.


*