தீபாவளிப் பண்டிகை – அறிந்ததும் அறியாததும்

Diwali Festival, Narakasura, lord krishna, Ramayana

தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதன் காரணம் – புராணப் பிண்ணனி, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

நரகாசுரன் என்ற அசுரனது கொடுமைகள் தாங்காமல் அனைவரும் கிருஷ்ண பாகவானிடம் முறையிடுகின்றனர். சத்தியபாமாவின் துணையுடன், கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்கிறார்.

நரகாசுரன் தன தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். இதனை அறிந்தே கிருஷ்ணர், சத்யபாமாவை தன்னுடன் அழைத்து வந்தார். நரகாசுரனுடன் போரிடும்போது அம்பு தாக்கி மயங்கி விழுவது போல் அவர் நடிக்க, கோபம் கொண்ட சத்யபாமா, நரகாசுரனுடன் போர் புரிந்தாள். அவள் அம்பிற்கு பலியாகி நரகாசுரன் விழுந்தான். சத்யபாமா, பவுமனின் அன்னை அல்லவா. தன தாய் கையாலேயே நரகாசுரன் மரணம் அடைந்தான்.

நரகாசுரன், தான் இறக்கும் தருவாயில், கிருஷ்ணரிடம், “தான் இறந்து போகும் இந்த நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்” என வரம் கேட்கிறான். அன்றிலிருந்து, மக்கள் நரகாசுரன் வதம் செய்யப்பட நாளை தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர். இது நாம் அறிந்த கதையே.

நரகாசுரன் கிருஷ்ணரின் மகன் –

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன், திருமால் வராக அவதாரம் எடுத்து, இரண்யக்ஷனை அழிக்க பூமியைத் துளைத்துச் சென்றபோது, அவரின் ஸ்பர்சத்தால், பூமா தேவிக்கு பிறந்தவனே பவுமன் என்னும் நரகாசுரன். அசுரனை வதம் செய்யப் போகும் சமயத்தில் பிறந்ததால், அசுர குணம் பெற்றான் பவுமன். “நரன்” என்றால் மனிதன் என்று பொருள். மனிதனாக இருந்தாலும், அசுர குணத்துடன் பிறந்ததால், அவன் நரகஅசுரன் என்று குறிப்பிட்டனர். அதுவே மருவி, நரகாசுரன் என்றாயிற்று.

தனது மகன் என்றும் பார்க்காமல், தவறு செய்த நரகாசுரனை கிருஷ்ணர் அழித்தார். இந்த செய்தியையே இந்த கதை எடுத்துக் காட்டுகிறது. தனக்கு வேண்டுபவர், வேண்டாதவர் என்று பாராமல் எவர் தீர்ப்பு அளிப்பரோ அவரே நீதிமான். அதனால் தான் நீதி தராசு சின்னம் தாங்கியுள்ளது. தராசுக்கோல் போன்று, விருப்பு வெறுப்பின்றி நீதி வழங்க வேண்டும் என்பதே இதன் கருத்து.

தீபாவளி கொண்டாடும் ஐப்பசி மாதத்திற்கு துலா மாதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தராசுக்கு துலாக்கோல்என்ற பெயரும் உள்ளதல்லவா! துலாக்கோல் போன்று நடுநிலைமையுடன் நின்று கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த மாதத்தை துலா மாதம் என்று அழைக்கப்பது மிகவும் பொருத்தமானது தானே!

வடமாநிலங்களில், ராமர் சீதா தேவியை மீட்டு  அயோத்தி திரும்பிய நாளை தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். வால்மீகி, ராமாயணத்தில் இந்த குறிப்பு உள்ளது. தீபங்களை வரிசையாக ஏற்றி அயோத்தியையே மக்கள் ஒளிமயமாக்கி ராமரின் வருகையினை மக்கள் வரவேற்றனர்.

பாற்கடலில் லக்ஷ்மியும், தன்வந்திரியும் தோன்றியதும் இந்த நாளே.

சிவன் அர்த்தநாரீஸ்வரர் வுருவமேடுத்ததும் தீபாவளி அன்று என்றும் ஒரு குறிப்பு உள்ளது.

இத்தகைய புராணச் சிறப்பு மிக்க தீபாவளி நன்நாளில் இறைவனை வணங்கி, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்வோம்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Related Articles

17 Years of துள்ளுவதோ இளமை... நடிகர் தனுஷ் அறிமுகமான படம். முதல் படமே A  சர்டிபிகேட் படம். ரிலீசாகி இன்றோடு ( மே 10, 2019 ) 17 வருடங்கள் ஆகிறது. இன்று தனுஷ் அடைந்திருக்கும் உயரமோ வ...
இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமு... கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து ...
மொய் வாங்க விருந்து வைக்கலாம், பரீட்சைக்... இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதைப் ப...
நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O! ̵... செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிகிறதா? இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லையே... இதை மையமாக வைத்து 500 கோடி போட்டு படம் எடுத்து வச்சிரு...

Be the first to comment on "தீபாவளிப் பண்டிகை – அறிந்ததும் அறியாததும்"

Leave a comment

Your email address will not be published.


*