ஓட்டு போடாதவர்களும் நோட்டாவுக்கு ஓட்டு போட்டவர்களும் எவ்வளவு பெரிய முட்டாள்கள்? 

கவுண்டமணி தான் ஹீரோவாக நடித்த 490 படத்தில், நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்கள், ஓட்டே போடாமல் இருப்பவர்கள், இந்திய தேசம் சாமானிய மக்கள் வாழ்வதற்கான தேசம் இல்லை என்று புலம்பி திர்பவர்கள் என்று சொல்பவர்கள் அனைவரையும் எலக்சனில் நில்லுங்கள் என்று வலியுறுத்தி இருப்பார்.

உலக நாடுகளில் சில நாடுகள் ராணுவத்தின் ஆட்சியின் கீழ் அல்லது மன்னராட்சின் கீழ், தீவிரவாதிகளின் கீழ் இருக்கின்றன. ஒரு நாடு நாட்டு மக்கள் யாருடைய ஆட்சியின் கீழ் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? உண்மையில் அந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிக்கிறார்களா? அல்லது  மேல் நிலையில் உள்ள மக்கள் தீர்மானிக்கிறார்களா? 

இந்திய நாட்டில் நடைமுறையில் உள்ளது போல, “இந்தக் கட்சிகளின் கொள்கைகள் என்னுடைய வாழ்க்கை முறைக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதால் நான் இந்தக் கட்சி என்னை ஆளட்டும் என்று தேர்ந்தெடுக்கிறேன்” என்பது போன்ற சுதந்திர நிலையை எல்லா நாட்டு மக்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் இந்தியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் இந்திய மக்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாக்களிக்கும் உரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்களா?  2000ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலின் போதும் கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை என்று கணிப்பு சொல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட தீவிர தேர்தல் பிரசாரத்தின் காரணமாகவும், ஓட்டு போடுவதற்கு நாங்க தான் காசு கொடுக்கறமே அப்படியிருந்தும்கூட ஏன் வந்து ஓட்டுப் போட மாட்டேங்கிறீங்க என்று அரசியல் கட்சிகளின் மிரட்டலாலும் வாக்குப்பதிவு சதவீதம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. 

இருந்தாலும் இன்று வரை 100 சதவீத வாக்குபதிவு என்ற நிலையை இந்திய தேசம் எட்டவில்லை. ஒரு சில தேசங்களில் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுங்கள் என்று தெருவில் இறங்கி பாலின பேதம் இல்லாமல் நேரம் காலம் பார்க்காமல் போராடி வருகின்றனர். அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு, நேபாளத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் வாக்குரிமை இருந்தபோதிலும் நாங்கள் ஏன் ஓட்டு போடவில்லை என்பதற்கு சில காரணங்கள் கூறுகின்றனர் அந்தக் காரணங்களைப் பார்ப்போம்: 

இந்தியாவில் பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கும் தொகுதிகளில் பெரிய பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த தொகுதிகளில் கூட 40 சதவீதத்துக்கும் மேலான மக்கள் வாக்களிப்பது இல்லை. சாலை வசதி முறையான பேருந்து வசதி மின்சார வசதி இலவச கல்வி வசதி என்று சாமானிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு முறையானதாக இல்லை. இப்படி அரசாங்கத்தை நம்பி இருக்கும் அப்பாவி மக்களை விரக்தி மன நிலைக்குத் தள்ளி விட்ட பிறகு அவர்களுக்கு எப்படி ஓட்டு போடணும் என்கிற எண்ணம் வரும். 

 

பெரிய பெரிய அரசியல் தலைவர்களுக்கு நம் நாட்டில் முறையான பாதுகாப்பு இல்லை அப்படிப்பட்ட நாட்டில் வாழும் சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். அப்புறம் எதற்கு அந்த சாமானியன் ஓட்டு போட வேண்டும். இந்திய தேசத்தில் பல தரப்பு மக்கள் பல சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் வாழும் தேசத்தில் இட ஒதுக்கீடு குறித்த சரியான புரிதலுடன் எந்த அரசியல் கட்சியும் செயல்படவில்லை. சாமானிய மக்கள் வைக்கும் கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் நிறைவேற்றாத போது சாமானிய மக்களுக்கு போய் ஓட்டு போட வேண்டும் என்கிற கேள்வி அவர்களின் மனற்குள் கனலாய் எரிந்துகொண்டே இருக்கிறது. 

ஓட்டு போட விரும்பாதவர்கள் அதிகமாக 49-O என்ற பட்டணை பயன்படுத்துகிறார்கள்.  அவர்களுக்கு இந்த தேசத்தை ஆளும் அதிகாரிகள் மீது அரசியல்வாதிகள் மீது அதிருப்தி இருப்பதே அதற்கான காரணம்.  இந்திய அரசியல் அமைப்பு முறையில் நிறைய பிழைகள் உள்ளன. ஒரு அரசாங்கத்தையே தேர்ந்தெடுக்கும் அந்த ஏழை மக்கள் என்னவோ தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். ஒரு சில கிராமங்கள் முன்னேற விட்டால் இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களும் (80%) முன்னேறிவிட்டது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?  ஏழைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எல்லா ஏழைகளுக்கும் ஞாயமான ஆட்சியை தருகிறதா?

இந்தியர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாக்குரிமையை முழுக்க முழுக்க பயன்படுத்தவேண்டும் என்று கூறுவதற்கான காரணங்கள்: 

சாமானிய மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நாடு என்று இந்தியாவை முழுக்க முழுக்க குற்றம் சாட்டி விட முடியாது. பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய நிகழ்ச்சிகளில், பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கக்கூடிய வாக்குச்சாவடிகளில் முறையான பாதுகாப்புகள் அமைக்கப் படுகிறது. இந்தியா சாமானிய மக்கள் வாழ்வதற்கு உகந்த நாடு அல்ல என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்காக இந்தியா மிகச் சிறந்த நாடு என்று சொல்லவில்லை. இந்தியாவில் அவ்வப்போது சில அவல சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்போது வரை இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அரசியல் அமைப்பு முறையில் குளறுபடிகள் உள்ளது. அரசியல்வாதிகள் சரியான அடிப்படை வசதிகளை தரவில்லை தேர்தல் அமைப்பு முறை சரியாக செயல்படவில்லை என்று சொல்லும் இந்த மக்கள் ஏன் அவர்களை தேர்தலில் நிறுத்தி கொள்வதில்லை தேர்தலில் நின்றால் அப்பணம் தேவைப்படும் என்கிறார்கள் எம்எல்ஏ எம்பி போன்ற பெரிய பெரிய பதவிகளுக்கு தான் பணம் தேவை உள்ளாட்சி அமைப்பு பஞ்சாயத்து தலைவர் நம்பர் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் நிற்க பணம் தேவையில்லை. இந்தியா என்பது ஒரு முழுமையான ஜனநாயக நாடு கிடையாது  என்று சொல்பவர்கள் நம் நாட்டில் கிடைத்திருக்கும் வாக்குரிமையை வாக்காளராக பயன்படுத்த வேண்டும் அல்லது வேட்பாளராக பயன்படுத்த வேண்டும். 

ஏன் 2020இல் உன் கூட நான் ஓட்டு போட விரும்பவில்லை? ஏன் 2020லும் நீங்கள் கண்டிப்பாக ஓட்டு போட்டு ஆகவேண்டும்? என்று கேள்வி எழுப்பினால் அதற்கு தீர்வாக அமைவது “நாம் தான் இந்திய நாடு”. இந்த நாட்டுடைய  மண்ணை இயற்கை வளங்களை மொழியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் நாம்.  இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், அவ்வப்போது செய்த சில நற் காரியங்களால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உண்மையிலேயே படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா வளர்ந்திருக்கிறது. இந்தியா அப்படி சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல திட்டங்களையும் பல சலுகைகளையும் அறிவித்து வந்து கொண்டுதான் இருக்கிறது.  அப்படிப்பட்ட அரசை தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் ஏழை மக்கள்தான். ஆனால் ஏழைகளுக்காக இது உருவாக்கப்பட்ட திட்டம், சலுகைகள் என்று சொல்லப்படும் அத்தனை அரசின் நடவடிக்கைகளுமே  பெரும்பாலும் ஏற்கனவே பணக்காரராக யார் இருக்கிறார்களோ அவர்களைத்தான் மென்மேலும் வளர்த்து விடுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஏழைகளால் உருவாக்கப்பட்ட திட்டத்தை அனுபவித்துக் கொண்டு சிலர் அந்த அரசாங்கம் நடத்தும் தேர்தலில் வாக்களிக்க மறுக்கின்றனர் என்று கூறுகின்றனர். 

உண்மையில் யோசித்து பார்த்தால் யார் ஓட்டு போடாமல் இருக்கிறார்களோ அவர்கள் சொல்லும் கருத்துக்கள் முற்றிலும் ஏற்கக் கூடியதாக இருக்கின்றன.  ஒரு சில இளைஞர்கள், தேர்தல் வாக்களிக்கும் அந்த விடுமுறை நாளில்… நாங்கள் ஜாலியாக ஊர் சுற்றுவோம், ஜாலியாக வீட்டில் இருப்போம் என்று சொல்கின்றனர். ஆனால் உண்மையான சமூக அக்கறையுடன் இருப்பவர்கள் தேர்தலை புறக்கணிப்பதே இந்த சமூகத்துக்கு செய்யும் நல்ல காரியம் என்று நம்புகின்றனர். அப்படியே ஓட்டு போட மறுப்பவர்கள் மற்ற மக்களை மடைமாற்றும் முயற்சியில் நிச்சயமாக இறங்கவில்லை. அவர்களெல்லாம் தேர்தலை அவ்வளவு வெறுக்க காரணம், அவர்கள் அந்தத் தேர்தலை நம்பி அவ்வளவு ஈடுபாட்டுடன் ஒரு காலத்தில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பதே. எடுத்ததும் அவர்கள் எம்எல்ஏ ஆகவேண்டும் எம்பி ஆகவேண்டும் என்று பணம் செலவழித்து பெரிய அரசியல்வாதி ஆக வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர்கள் தேர்தலில் களமிறங்கவில்லை.  அவர்கள்  முடிந்தவரை நம்மைச் சுற்றி இருக்கும் இந்த குறுகிய வட்ட சமூகமாவது ஓரளவுக்கு நல்ல பகுதியாக இருக்கட்டும் என்ற உண்மையான நோக்கத்துடன்தான் கிராமப்புற தேர்தல்களில் நிற்கிறார்கள். 

இன்றைய இளைஞர்களுக்கு இந்த சமூகத்தின் மீது அக்கறை இல்லை,  தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்பது குறித்து அந்த மாவட்டத்தின் எம்எல்ஏ யார் என்பது குறித்து இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்பது குறித்து எந்த அறிவும் இல்லாமல் வெறுமனே பொழுது போக்கு என்பதை மட்டுமே வாழ்க்கையாக கொண்டிருக்கின்றனர் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நிறைய இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு சினிமாவை எடுத்துக்கொள்வோம். ஆயுத எழுத்து படத்தில் சூர்யா அரசியலில் இறங்க வேண்டும் என்று தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு அரசியலில் இறங்கி கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி படிப்படியாக அரசியலுக்குள் நுழைவார். 

அதேபோல கிராமப்புற தேர்தல்கள், மாநில அளவிலான தேர்தல்கள்,  மத்திய அளவிலான தேர்தல்கள் இந்த மூன்று தேர்தல்களில் இளைஞர்கள் வேட்பாளராக நின்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அப்படி உண்மையான நோக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் இளைஞர்களை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது? 

யாருடா இவன் கோமாளி என்பது போல் பார்க்கிறார்கள். ஆர்வத்தோடு தேர்தலில் நிற்கும் அந்த இளைஞர்களுக்கு அவர்களுடைய நண்பர்களே குடும்ப உறவினர்களே சொந்தக்காரர்களே கூட துணை நிற்பது இல்லை. அப்படிப்பட்ட சூழலில் அந்த இளைஞர்கள் தாங்கள் ஏதோ தனி ஒரு பாதையில் தவறான பாதையில் செல்வது போல குழம்பி விடுகிறார்கள். யார் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் தன்னுடைய ஜாதி இன மக்களை உயர்த்தி விடலாம் என்ற நோக்கத்துடனும் ஆடம்பரமாக பிரச்சாரம் செய்துகொண்டு தேர்தலில் சுற்றி அலைகிறனோ அவனைத் தான்  பிரமிப்பாய் பார்க்கிறார்களே ஒழிய உண்மையான மனதுடன் தேர்தலில் நிற்கும் அந்த இளைஞர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. கடந்த தேர்தலின்போது ஒரு இளைஞர்,  “கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தேர்தலில் நின்று வருகிறேன், இந்த முறை தேர்தலில் ஜெயித்து விடுவேன் என்று நம்பினேன்… ஆனால் இந்த முறையும் நான் ஜெயிக்கவில்லை… சத்தியமா நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நம்பவில்லை…” என்று போஸ்டர் அடித்து ஒட்டினார். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆனது. அப்படி உண்மையான நோக்கத்துடன் சமூக உணர்வுடன் அரசியலில் களம் இறங்கும் இளைஞர்களை அந்த கிராம பகுதி வார்டு மெம்பராக கிராம பஞ்சாயத்து தலைவராக கூட இந்த சமூகம் தேர்ந்தெடுக்கப்படாத போது, வணிகமயமான தேர்தல் அமைப்பு முறையை அவர்கள் நிராகரிப்பது நியாயம்தானே.  அவர்களிடம் போய் நீ எதற்கு  ஓட்டு போடவில்லை என்று கேட்பதில் கூட ஞாயம் இருக்கிறது. ஆனால் நீ ஏன் நோட்டாவுக்கு ஓட்டு போடுகிறாய் என்று கேள்வி கேட்பதற்கு எந்த அதிகாரமும் உரிமையும் யாருக்கும் இல்லை.  இனிவரும் காலங்களில் நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்களின் சதவிகிதம் அதிகரிக்குமே தவிர துளி அளவும் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. 

Related Articles

Vikatan Awards – Zee Awards –... Zee Cine Awards Tamil 2020Best actor - Dhanush (Asuran) Favourite actor - Vijay (Bigil) Sridevi inspiring woman of indian cinema award - N...
விந்து நிறைத்த பலூன் தாக்குதல்களை எதிர்த...  கொண்டாட்டங்கள் எல்லை மீறச் செல்லும் போது அவை பெரும்பாலும் குற்றச் செயல்களிலேயே முடிகிறது. ஹோலி பண்டிகையின் போது நிகழும் கொண்டாட்டங்கள் சில ச...
கரூரில் பிகில் படம் ரிலீஸ் ஆகாது! –... கல்பாத்தி எஸ் அகோரமின் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். நயன்தாரா, ஏ ஆர் ரகுமான் எ...
தல அஜீத்தை பற்றி அட்லீ என்ன சொன்னார்? &#... அக்டோபர் 24ம் தேதி மாலையில் #askatlee என்று டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார் அட்லீ. அப்போது ரஜினி...

Be the first to comment on "ஓட்டு போடாதவர்களும் நோட்டாவுக்கு ஓட்டு போட்டவர்களும் எவ்வளவு பெரிய முட்டாள்கள்? "

Leave a comment

Your email address will not be published.


*