தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் மற்றும் தமிழக மலைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

Know about Tamil Nadu Development Administration and Tamil Nadu Hills

மதராஸ் மாகாணம் 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அப்படி பெயர் மாற்றம் செய்தவர் அப்போதைய முதல்வர் சி என் அண்ணாதுரை. ஆங்கிலேய ஆட்சியின்போது இந்தியா நிர்வாக காரணத்திற்காகவும் ராணுவ காரணத்திற்காகவும் மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. மதராஸ் மாகாணம், பம்பாய் மாகாணம், கல்கத்தா மாகாணம் ஆகியவைதான் அந்த மூன்று மாகாணங்கள். மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.  ஆங்கிலேயர் ஆட்சியின்போது மதராஸ் மாகாணத்தின் பகுதிகளாக தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா ஒடிசா போன்ற பகுதிகள் இருந்தன. 

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை முப்பத்தி எட்டு கடைசியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து 38வது மாவட்டமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை முப்பத்தி எட்டு கடைசியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து 38வது மாவட்டமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை ஆகும். 

தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள பகுதி குமரி முனை ஆகும். தமிழகத்தின் வடகோடியில் அமைந்துள்ள பகுதி பழவேற்காடு ஏரி. தமிழகத்தின் மேற்குக் கோடியில் அமைந்துள்ள பகுதி ஆனைமலை. கிழக்குக் கோடியில் அமைந்துள்ள பகுதி கோடியக்கரை. பரப்பளவின் அடிப்படையில் தமிழகம் இந்திய அளவில் பதினோராவது இடத்தில் அமைந்துள்ளது. சதவீதம் அடிப்படையில் இந்திய அளவில் 4% தமிழகம் உள்ளது. தமிழகத்தின் மொத்த பரப்பளவு 130058 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்தியாவில் நீளமான கடற்கரையை கொண்டுள்ள மாநிலம் குஜராத் மாநிலம் ஆகும். தமிழ்நாடு மூன்றாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் இரண்டாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 18 மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டில் மக்களவை மாநிலங்களவை சட்டமன்ற இடங்கள் மொத்தம் எத்தனை என்று பார்த்தால் மாநிலங்களவை 18 இடங்கள், மக்களவை 39 இடங்கள், சட்டமன்ற இடங்கள் 234 கொண்டுள்ளன. 

தமிழ்நாடு தக்காண பீடபூமி என்கிற தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ளது. தமிழ்நாடு நிலத் தோற்றத்தின் அடிப்படையில் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், பீடபூமிகள், கடற்கரை சமவெளிகள் உள்நாட்டு சமவெளிகள் என்பவைதான் அந்த ஐந்து வகைகள் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கணவாய்கள்… பாலக்காட்டுக் கணவாய், செங்கோட்டை கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய், அச்சன்கோவில் கணவாய் என்பதுதான் அந்த கணவாய்கள். நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா ஆகும். இதன் அளவு 2637 மீட்டர் உயரம் ஆகும். அதேபோல ஊட்டி குன்னூர் போன்ற மலை வாழிடங்கள் நீலகிரி மலையில் அமைந்துள்ளது. காடம்பாறை நீர்மின் நிலையம் ஆனை மலையில் அமைந்துள்ளது. 

ஆனைமலை தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் பாலக்காட்டுக் கணவாய் தெற்கே அமைந்துள்ளது.  இம்மலையில் ஆனைமலை புலிகள் காப்பகம், ஆழியாறு பாதுகாக்கப்பட்டு காடுகள், வால்பாறை மலை வாழிடம் போன்றவை அமைந்துள்ளது. ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணையில் இம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. வந்தாராவ் சிகரம் பழனி மலையில் அமைந்துள்ளது.  இதன் உயரம் 2533 மீட்டர் ஆகும். பழனி மலையில் அமைந்துள்ள மலை வாழிடம் கொடைக்கானல் ஆகும்.  பழனி மலை மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி ஆகும். பழனி மலையின் மேற்குப் பகுதியை தவிர மற்ற அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  ஏல மலை குன்றுகள் என்று அழைக்கப்படும் மலை ஏலக்காய் மலை ஆகும். ஏலக்காய் மலை வடமேற்கில் ஆனை மலையோடும் வடகிழக்கில் பழனி மலையோடும் தென்கிழக்கில் ஆண்டிபட்டி மற்றும் வருஷநாடு குன்றுகளோடும் இணைகின்றன. இங்கு மிளகு மற்றும் காபி ஏலக்காய் முக்கிய பயிர்கள் ஆகும். 

மேற்கு தொடர்ச்சி மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும். இதன் உயரம் 2637 மீட்டராகும்.  மேற்கு தொடர்ச்சி மலையின் இரண்டாவது உயரமான சிகரம் முக்குருத்தி ஆகும். இதன் உயரம் 2554 மீட்டர் ஆகும். வேம்படி சோலை சிகரம் 2505 மீட்டர். பெருமாள்மலை 2234 மீட்டர். பாசுர சிகரத்தின் உயரம் 1918 மீட்டர். கோட்டைமலை சிகரத்தின் உயரம் 2019 மீட்டர். மருதமலை கோவை மாவட்டத்தில் உள்ளது. ஸ்ரீவல்லிபுத்தூர் மலை அணில் சரணாலயம் வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலை குன்றுகள் அருகே 1989ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 480 சதுர கிலோ மீட்டர்.  விருதுநகர் மதுரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 

வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலை குன்றுகளில் உற்பத்தியாகும்  ஆறு வைகை ஆறு. வைகை ஆற்றின் துணை ஆறுகளும் இந்த வருசநாடு ஆண்டிபட்டி மலைகளில்தான் உற்பத்தியாகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சி வருஷநாடு மற்றும் ஆண்டிபாடி மலைக்குன்றுகள் ஆகும். இங்கு மேகமலை, கழுகுமலை, குரங்கணி மலை மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சி உள்ளது. 

அகத்தியர் மலை என்று அழைக்கப்படும் மலை பொதிகை மலை. இதன் மற்ற பெயர்கள் சிவஜோதி பர்வத் தெற்கு கைலாயம் ஆகும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பொதிகை மலையில் அமைந்துள்ளது. 

Related Articles

மனித தன்மை மட்டும் மாறாது! – கோமாள... சின்ன வயது கதாபாத்திரத்துக்காக உடலை குறைத்துள்ளார் ஜெயம் ரவி. மிக அழகாக உள்ளது அந்த தோற்றம். மூன்று செம்மொழிகள் கூறு என்று ஆசிரியை கேட்டதும்  தேன்மொழி...
ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்! ... மக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் முறை தான் தேர்தல். இந்த மக்கள் தான் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கொடுத்து சட்டசபைக்...
பொன்னீலனின் பொட்டல் கதைகள் ஒரு பார்வை!... சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் கதை தொகுப்பு தான் " பொட்டல் கதைகள் " புத்தகம்.ஆதிகாலத்து உரல்,மாற்றம், இஞ்சியும் சுக்...
இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவ... பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் எழுதியுள்ள இரண்டாவது புத்தகம் மறக்கவே நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பே ஆனந்த விகடனில் தொடர...

Be the first to comment on "தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் மற்றும் தமிழக மலைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*