“இந்தக் காலத்துல காசு இருக்குற எல்லாருமே ராஜா தான்…” – “சிவகுமாரின் சபதம்” திரைப்பட விமர்சனம்!

Sivakumarin Sabadham movie review

நிறைகள்: 

  1. கிளப்புல மப்புல பாடல் பாடியது என் தப்பு என்று கூறும் ஆதி மனசாட்சிக்கு நேர்மையாக இப்போது பாடிய சிவக்குமார் பொண்டாட்டி” பாடலையும் தப்பான பாடல் புரியாத பாடல் என்கிறார். அவருடைய புரிதல் வரவேற்க கூடிய விஷயம். 
  2. நிஜ உலகில் தொணதொணவென பேசி நம்மை படாதபாடு படுத்தும் விஜே பார்வதி இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அளவாகப் பேசி சிறப்பாக நடித்துள்ளார்.  தன்னை யூடியூப் உலகின் மியா கலீபா என்று விமர்சிப்பவர்களுக்கு இந்த படம் நல்ல பதிலடி. உங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் பாரு.
  3. படத்தின் இரண்டாவது பாடலாக ஒலிக்கும் சிவக்குமார் பொண்டாட்டி பாடல் செம துள்ளல்… செம கலர்புல்… ஆனால் பாடல் வரிகளை மட்டும் இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமானதாக இருந்து இருக்கலாம். 
  4. பாகுபலிக்கு ஒரு கட்டப்பா… அது போல தான் எங்க சித்தப்பா… பாடலின் இசை பின்னணி இசையாக ஒலிக்கும்போது அதை கேட்க நன்றாக இருக்கிறது. மொட்டை மாடியில் வரும் வாழ்க்கைனா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும்எண்ணம்போல வாழ்க்கைபாகுபலிக்கு ஒரு கட்டப்பாஅது போல தான் எங்க சித்தப்பா…” பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்தப் பாடலில் உள்ள வரிகள் பெரியவர்கள் முதல் கொண்டு எல்லோருமே ரசிக்கும்படி தத்துவ வரிகள் போல் நன்றாக உள்ளது. நடன அசைவுகளும் நன்றாக இருக்கின்றன
  5. படத்தின் கிளைமேக்ஸில் ஒலித்த சேத்து வச்ச சொத்து சொகம்என்ற வரியில் ஒரே புன்னகை என்ற வரிகளால் ஒலிக்கும் பாடல் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது
  6. கதிர் நன்றாக காமெடி செய்கிறார். அதே சமயம் அவர் பேசும் நிறைய வசனங்கள் தொணதொணவென பேசி கிச்சு கிச்சு மூட்டுவது போல் உள்ளது. இன்னும் கொஞ்சம் முயன்றால் அவரால் பார்வையாளர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்க முடியும்.  
  7. சித்தப்பா மீசையை பிடுங்கும் காட்சியில் கதிர் அதகளம் செய்துள்ளார். சித்தப்பா எங்கு தற்கொலை செய்துகொள்வாரோ என்று கதிர் பதறும் காட்சியில் கொஞ்சம் சிரிக்க முடிந்தது
  8. நேசமே பாடலை கேட்கும்போது சிலிர்த்துவிட்டது. இந்தப் படத்தில் உள்ள நல்ல விஷயங்களில் உருப்படியான விஷயங்களில் ஒன்று இந்த நேசமே பாடல்
  9. தொழில் தொடங்கும் முன் பணம் திரட்டுவதற்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கும் காட்சியில் வரும் நாணயம்குறித்த வசனம் வாக்கு சுத்தம்உண்மையான தொழில் பக்தியை குறிக்கிறது. எவ்வளவு ஆட்டம் போட்டாலும் தொழிலுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்ற கற்பித்தல் காட்சி பாராட்ட வைக்கிறது
  10. சந்துரு வீட்டில் வரதராஜ தாத்தாவும் சிவக்குமாரும் சேர்ந்துகொண்டு சபதம் எடுக்கும் காட்சியில் சிரிப்பு வந்தது

குறைகள்: 

  1. ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை எல்லாமே ஓகே ரகம். ஒரு படம் ஹிட் ஆக வேண்டும் என்றால் கதை எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு டெக்னிக்கலாகவும் வலுவாக இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங்! 
  2. ஹீரோ என்ட்ரி பாடலாக ஒலிக்கும் மிடில் கிளாஸ் பாடலில் உள்ள வரிகள் மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை முறையை நன்கு பிரதிபலிக்கிறது. ஆனால் அந்தப் பாடல் கேட்பதற்கு பேரிரைச்சலாக இருக்கிறது. பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஒரு ஹீரோவின் என்ட்ரி பாடலை இவ்வளவு மொக்கையாகவா படமாக்குவது? 
  3. ராஜபட்டு என்கிற பலநூறு வருச பாரம்பரிய பட்டு  சேலையை பற்றிய கருத்து புதுமை. ஆனால் அந்தப் பட்டு குறித்து இன்னும் தீவிரமாக ஆராய்ச்சி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த பட்டுக்கு என்று தனியாக பிளாஸ்பேக் வைத்து இருக்கலாம்… (ஹெச் வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அந்த கொள்ளையர்களை பற்றி ஓவியத்தில் விவரித்து இருப்பார்களே… அந்த மாதிரி விவரித்து இருக்கலாம்…
  4. ஆதிக்கு நன்றாக நடனம் வருகிறது. அதே போல நடிப்பிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நடிப்பில் நிறைய இடங்களில் சொதப்பி இருக்கிறார். குறிப்பாக வருந்துவது, அழுவது போன்ற காட்சிகள் அவருக்கு செட்டாகவில்லை. 
  5. ஹிப்ஹாப் ஆதி வைத்திருக்கும் ஹேர்ஸ்டைலுக்கு பட்டர்பிளை மண்டையன் என்று பெயரா…? நன்றாக இருக்கிறது. கலர் ஹேர் ஸ்டைல் அடித்த தலையை வானவில் மண்டையன், கலர் கோழி தலையன் என்கிற பெயரை உச்சரிக்கிறார்கள். இதெல்லாம் கவுண்டமணி காலத்து காமெடிங்க… உருவக்கேலி செய்யாம புதுசா எதாவது யோசிச்சு காமெடி பண்ணுங்க…
  6. போலீஸ் ஸ்டேசன் காட்சியில் வரதராஜ தாத்தாவுக்கு பில்டப் கொடுத்து மாஸ் காட்டிவிட்டு பிறகு அதே காட்சியில் அவரை டம்மி ஆக்குகிறார்கள். இது போன்ற காட்சிகள் டிலிட்டட் சீன் பட்டியலில் வந்திருக்க வேண்டியவை. 
  7. பார் ஒன்றில் வரும் சண்டைக்காட்சி எதற்கு? சண்டைக்காட்சியில் எதற்காக ஆதி ஆடிக் கொண்டே இருக்கிறார். இந்த மாதிரியான காட்சிகள் மாஸ் காட்சிகள் அல்ல… லூஸ்தனமான காட்சிகள்… 
  8. பர்ஸ்ட் ஆஃபில் மட்டும் நான்கு பாடல்கள்… அந்த நான்காவது பாடலை கேட்கும்போது தியேட்டரில் உள்ள பலர் உஸ் என்றனர். எதற்கு இத்தனை பாடல்கள்? நேசமே”, “சேத்து வச்ச சொத்து சுகம்”, “பாகுபலிக்கு ஒரு கட்டப்பா” என்ற மூன்று பாடல்களை மட்டும் வைத்து இருந்தால் படம் அளவாக அழகாக இருந்திருக்கும். 
  9. ப்ராங்ஸ்டர் ராகுல் செய்யும் நிறைய ப்ராங்  வீடியோக்கள் பெரும்பாலும் எரிச்சல் ஊட்டுவது போல் தான் இருக்கும். படத்தில் அவருடைய நடிப்பும் பெரும்பாலான இடங்களில் சிரிக்க வைக்கவில்லை. அவர் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்காமல் சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்கலாம். மொட்டை மாடியில் காப்பர் குடத்தில் சரக்கு ஊற்றி குடித்துவிட்டு தன் மனக்குறையை அப்பாவிடம் வெளிப்படையாக பேசும் காட்சியில்ராகுல் நன்றாக நடித்துள்ளார். மற்ற சீன்கள் எல்லாவற்றிலும் ஓவர் ஆக்டிங் தான்… 
  10. சந்துருவாக நடித்தவர் நன்றாக நடித்துள்ளார். ஆனால் வில்லனுக்கான கெத்து இன்னும் சரவர வரவில்லை. 
  11. பப்புள்காம் காட்சியை அப்படியே கொத்தாக தூக்கி இருக்கலாம்… அதுவும் குறிப்பாக பேரன் தன் காதலியோடு ரொமான்ஸ் செய்யும் காட்சியை தாத்தாவும் அவருடைய நண்பர்களும் ஒளிந்து பார்க்கும் காட்சி காமெடி காட்சியாம்… சகிக்க முடியவில்லை அந்த காட்சியை… வ்வாக் என்று இருக்கிறது. 
  12. அந்தப் புள்ள வயித்துல புள்ள பூச்சி உண்டாச்சாடா? ஆம்பளையாடா நீ… நீலாம் வாட்சுமேன் வேலைக்கு கூட லாய்க்கு இல்ல… என்று மாமனார் திட்டியதும் சித்தப்பா வருத்தப்படுவது போல் கதறி அழுவது போல் காட்சிகள் வருகிறது. ஆனா அந்தக் காட்சியில் ப்ராங்க்ஸ்டார் ராகுல் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார் என்றே தோன்றுகிறது. சித்தப்பா கதாபாத்திரத்தை வலிந்து திணித்து இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. காமெடிக்காக எழுதப்பட்ட அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே கொத்தாக நீக்கிவிட்டு அதற்கு பதில் வரதராஜ தாத்தாவின் இளம் வயது காதல், தொழில் கஷ்டம், நெசவாளர்களின் பிரச்சினை என்று முழுக்க முழுக்க நெசவு தொழில் பற்றி படமாக எடுத்து இருந்தால் ஹிப்ஹாப் ஆதியை தாராளமாக பாராட்டி இருக்கலாம்… 
  13. என்னடி என்னடி இவ்வளவு பண்ணுறபாடல் எதற்கு படத்தில் வருகிறதுஹீரோயின் ஒதுங்கி போக போக அவரை துரத்தியபடியே ஆடிப்பாடும் பாடல்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் வரும்இந்தப் பாடலில் உள்ள வரிகள் கேட்பதற்கு காமெடியாக இருக்கிறது
  14. பட்டாணி மூஞ்சி என்பது என்ன வார்த்தை? இது போன்று உருவக் கேலி செய்வது தவறு என்று எத்தனை முறை இந்த காமெடியர்களுக்கு சொல்வதுசமீபத்தில் டிக்கிலோனா படத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரை சைடு ஸ்டாண்டு என்று கேலி செய்து திட்டு வாங்கியது அந்தப் படக்குழு. இப்போது ஆதியும் அதே தவறை செய்திருக்கிறார். படத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் இடத்தில் எல்லாம் சென்சார் போர்டு மியூட் பண்ண சொல்வது போல் இனி உருவக் கேலி செய்யும் வார்த்தைகள் படத்தில் இடம்பெறும் போதெல்லாம் மியூட் செய்ய வேண்டும் என்று விதி உருவானால் நன்றாக இருக்கும்

கவனம் பெற்ற வசனங்கள்

  1. “நம்மள சுத்தி இருக்கறவங்கள நாம பாத்துக்கிட்டா… நம்மள ஆண்டவன் பாத்துப்பான்…”,  
  2. “இந்தக் காலத்துல காசு இருக்குற எல்லாருமே ராஜா தான்…”,
  3. “தப்பா ஒன்னும் அடிக்கலயா… தப்பானவன தான் அடிச்சிருக்குறான்… “, 
  4. “தொழில் கத்துக்குறானோ இல்லையோ ஒழுக்கத்த கத்துக்கட்டும்…”,  
  5. காதல்ல ஏமாறலாம்ஆனா அதையே காரணமா வச்சுக்கிட்டு வாழ்க்கைல ஏமாற கூடாது…”, 
  6. பப்புக்கு வந்துட்டு பத்தினி மாதிரி பேசுற…” “லைப்ல ஒன்னவிட ஒன்னு சிறப்பா தான் இருக்கும்நமக்குத் தான தெரியும் எது பெஸ்ட்டுனுஅத பத்திரமா பாத்துக்கனும்…”,
  7. அடிக்க போறாங்கன்னு சொன்னாஅறிஞர் அண்ணா மாதிரி கைகாட்டிட்டு இருக்குற…”
  8. சிட்டி ரோபோவுக்கு கூட கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கும்டா…”
  9. நம்பிக்கையை விட பவர்புல்லான வெப்பன் ஒன்னு கிடையாது…” 
  10. பயத்துக்கும் மரியாதைக்கும் உள்ள வித்தியாசத்த தெரிஞ்சுக்குங்க…”
  11. நான் உன் லைப் பார்ட்னர் தான்நான் உன் லைப் கிடையாது…”
  12. உன்ன சுத்தி உண்மையான நாலு நல்ல மனுசனுங்கள சேத்துக்குஅதான் உண்மையான சொத்து…” 
  13. காசு வரும் போவும்எப்பவும் நம்மள சுத்தி நாலு பேரு இருக்கற மாதிரி வாழனும்… ” 
  14. அடுத்தவன் பொழைப்புல மண்ணு அள்ளி போடனும்னு நினைக்கறவன் எவனும் உருப்பட மாட்டான்… “

நெசவாளர்களுக்கான உயரிய விருது: 

இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் வரதராஜ தாத்தா சிறந்த நெசவாளர்களுக்கான தேசிய விருதை மத்திய அரசிடம் இருந்து பெறுவது போல் காட்சி அமைந்துள்ளது. சிறந்த நெசவாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது பற்றி சில வார்த்தைகள்… 

நெசவாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சந்த் கபீர்” விருது கருதப் படுகிறது. இந்த விருதுக்கு நெசவாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு காஞ்சிபுரம் நாகரீஸ்வரர் பகுதியில் உள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நெசவாளர் நற்பணி மன்றத்திடம் உள்ளது. 

இந்த மையம் ஆண்டுதோறும் பட்டுச்சேலை நெசவில் சிறந்து விளங்கும் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது வென்றவர்களுக்கு 15000 மதிப்புள்ள ஸ்மார்ட் போன்… பெயர் பொறிக்கப்பட்ட தாமிர பத்திரம்… 10000 ரூபாய் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை போன்றவை வழங்கப்படும். 

குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக பெண்கள் ஆண்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்து மகிழ செம ஜாலியான படம் எடுக்க வேண்டும்அதில் கொஞ்சம் இளைஞர்களுக்கான அறிவுரையை சேர்த்து வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆதி இந்த “சிவகுமாரின் சபதம்” படத்தை எடுத்து உள்ளார். ஆனால் அதற்காக அவர் இன்னும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும்… என்றே தோன்றுகிறது.

Related Articles

H1B விசா வைத்திருப்பவர்களை இந்தியா அன்ப... சென்னை ஜெமினி சர்க்கிளில் ஒரு காட்சி. பல லகரங்கள் மதிக்கப்படும் ஒரு உயர்தர காரில் இருந்து அந்தப் பெண் இறங்கினார். கையில் தனது திருமண ஆல்பத்தை கொண்டிரு...
சித்தார்த் ஜீவி பிரகாஷ் நடித்த “சி... பூ, பிச்சைக்காரன் போன்ற அருமையான திரைப்படங்கள் தந்த இயக்குனர் சசியின் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ஜீவி பைக் ரேசராக நடிக்க சித்தார்த் டிராபிக் போ...
ரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்... பூந்தமல்லி அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் வினு என்ற ரவுடியின் பிறந்தநாள் விழாவிற்காக ஒன்றுகூடிய 120 ரவுடிகளில் 72 பேரை போலீஸ் கொத்தாக கைது செய்துள...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் க... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அண...

Be the first to comment on "“இந்தக் காலத்துல காசு இருக்குற எல்லாருமே ராஜா தான்…” – “சிவகுமாரின் சபதம்” திரைப்பட விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*