ரயில் நிலையங்களுக்கும் இனி ரேங்க் கார்ட்

Tiruchi railway junction

எண்பதுகளின் இறுதியில் வந்த நிறையத் தமிழ் திரைப்படங்கள் ரயிலை மையமாக வைத்து வெளிவந்தன. அப்போது ரயில் என்பது ஒரு ஆச்சரியம். புதிய நட்புகள் உருவாகும் இடம். ரயிலில் பயணிப்பதே ஒரு அனுபவமாக அப்போது பார்க்கப்பட்டது. இப்போதும் அப்படித்தானா?

நிறைய மாற்றம் வேண்டும்        

நிலைமை இப்போது அப்படியில்லை. ரயில் பயணங்களில் நிறைய அசௌகரியங்கள் வந்து சேர்ந்துவிட்டன. குறிப்பாகப் பெண்களுக்கு. முறையாகப் பராமரிக்கப்படும் கழிவறை இல்லாமை, பாதுகாப்பு இல்லாதது. இரவில் தங்கள் நிறுத்தத்தைத் தெரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்.

அடிக்கடி நாளிதழ்களில் வெளியிடப்படும் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை செய்திகளில் பெரும்பாலானவை ரயிலிலேயே நிகழ்த்தப்படுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து ரயில் பயணங்களை ஒரு அனுபவமாக அல்லாமல், வேறு வழியே இல்லாமல் மேற்கொள்ளப்படும் அசௌகரியமாகவே மாற்றியிருக்கின்றன.

ரயில்வே அமைச்சகத்தின் முயற்சிகள்

பயணிகளின் இந்த அசௌகரியத்தைக் களைய ரயில்வே அமைச்சகமும் நிறையத் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ரயில்வே நிலையங்களுக்குத் தர மதிப்பீடு தரும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு பச்சை மதிப்பீட்டிற்காக தெற்கு ரயில்வேயால் முன்மொழியப்பட்டு இருக்கிறது. பச்சை மதிப்பீடு என்பது தெற்கு ரயில்வேயால் தரப்படும் உயர் A வகை மதிப்பீடாகும்.

எப்படி யாரால் இந்த மதிப்பீடு தரப்படுகிறது?

ரயில்வே வாரியத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மேலாண்மை இயக்குநரகம் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க இந்திய தொழில் கூட்டமைப்பு இந்த மதிப்பீட்டை வழங்குகிறது. திருச்சியைப் போலவே மேலும் சில நகர ரயில்வே நிலையங்களும் தர மதிப்பீட்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தென் மேற்கு ரயில்வேயின் செகந்திராபாத் , வட மேற்கு ரயில்வேயின் ஜெய்ப்பூர் போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையம் வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் என்று மூன்று விதமாகத் தர மதிப்பீடு செய்யப்படும். வெள்ளி மதிப்பீடு பெற ஒரு ரயில் நிலையம் 60 முதல் 69 புள்ளிகள் வரை பெற வேண்டும்.தங்கத்திற்கு 70 முதல் 79 புள்ளிகள் வரை. அதேபோல பிளாட்டினத்திற்கு 80 முதல் 100 வரை.

அதிக புள்ளிகள் பெற ரயில்வே அதிகாரிகள் நிறைய முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து ஆலோசனைகள் வழங்க நிறுவனங்களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.முன்மொழியப்படும் அந்நிறுவனம் ஐந்து முக்கியமான பகுதிகளில் தங்கள் கவனத்தை செலுத்தும். அவை முறையே பயணிகளின் வசதிகள், சுத்தம், சுகாதாரமான கழிவறைகள், போதுமான தண்ணீர் வசதி, ஆற்றல் திறன் மற்றும் சுகாதார சீர்கேடு அற்ற பொருட்களை பயன்படுத்துவது என்ற அடிப்படையில் அமையும்.

திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு பச்சை மதிப்பீட்டைப் பெறுவதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதன் அதிகாரிகள் தங்கள் ரயில் நிலையத்தின் பலம், பலவீனங்கள் குறித்தும், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் நிறுவனங்களை ஈடுபடுத்த முன்மொழிந்திருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி ஜனவரியில் நடக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்திடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. ‘அந்த டாய்லெட்டுல எப்போ சார் பக்கெட்டு வெப்பீங்க?’

Related Articles

01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட... தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த சில மாதங்களுக்கு ...
UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்... பால் ஆதார் என்றால் ? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற...
வேலையில்லா பட்டதாரி மகன்களின் அம்மாக்களி... வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தமிழ் சினிமா காட்டியதை பார்ப்போம்.  வேலையில்லா பட்டதாரி என்ற வார்த்தையை கேட்டால...
நொந்து போன Aircel பயனாளர்கள் – திவ... கடந்த சில நாட்களாகவே ஏர்செல் நிறுவனத்தை பற்றி அரசல்புரசலாக செய்தி வெளியானது. அதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது ஏர்செல் சிக்னல் கிடைக்காமல...

Be the first to comment on "ரயில் நிலையங்களுக்கும் இனி ரேங்க் கார்ட்"

Leave a comment

Your email address will not be published.


*