சினிமா பிரபலங்களின் பளீச் பதில்கள்! – சினிமாவால் உண்டான சமூக மாற்றங்கள்! – சினிமாவில் காட்டப்படும் கொடூர தண்டனைகள்!

Answers of Cinema celebrities! - Social Changes made by Cinema! - Cruel punishments shown in cinema!

சினிமா பிரபலங்களின் பளீச் பதில்கள்!

சினிமா பிரபலங்களின் பேட்டிகளை பார்க்கும்போது நாமளும் ஒருநாள் இந்த மாதிரி பேட்டி கொடுக்கனும் என்ற ஆசை எல்லோர் மனதிற்குள்ளும் எழுவதுண்டு. ஆனால் எப்படிப்பட்ட கேள்விகளுக்கு எப்படிபட்ட பதில்களை அவர்கள் தருகிறார்கள் என்பதை நாம் இன்னும் நுணுக்கமாக கவனிக்கவில்லையோ என தோன்றுகிறது. பல சினிமா பிரபலங்களின் பேட்டியை நான் பார்த்துள்ளேன். அவற்றில் எனக்குப் பிடித்த சில பளீச் பதில்கள் பற்றி இங்கு எழுதுகிறேன். 

 1. நிரூபர்: உங்கள் வாழ்க்கையில் புத்தகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை?

மிஷ்கின்: புத்தகங்கள் இல்லையென்றால் நான் எப்பவோ தற்கொலை செய்திருப்பேன்

மிஷ்கின் இந்த பளீச் பதில் சூப்பர். புத்தகங்களின் மேன்மையை பற்றி பேசும் இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 1. நிரூபர்: நீங்கள் இயக்குனரா? அரசியல்வாதியா?

பா. ரஞ்சித்: நான் அரசியல்வாதி!

இது பா. ரஞ்சித்தை சீண்டுவதற்கென்றே கேட்கப்பட்ட கேள்வி. இருந்தாலும் அசராமல் நான் அரசியல்வாதி என்று சொன்ன பா. ரஞ்சித்தின் துணிச்சல் செம. 

 1. நிரூபர்: வேள்பாரியை படமாக எடுத்தால் அதில் நீங்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?

தனுஷ்: நான் வேள்பாரியா தான் நடிப்பேன்!

தன்னுடைய ஆசையை கூறுகிறார் என்பது ஒருபுறமிருக்க எந்த இடத்திலும் என்னை நான் தாழ்த்திக் கொள்ள மாட்டேன் என்ற தனுஷின் குணம் செம. 

 1. நிரூபர் (கேள்விக்கென்ன பதில் ரங்கராஜ் பாண்டே): கடவுள் நேரில் வந்து உங்களை சந்தித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கமல்: அவரை வைத்து கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி நடத்துவேன். 

கமலைப் போல புத்திசாலித்தனமாக பதிலளிக்க இன்னொருவர் பிறந்து தான் வர வேண்டும். 

 1. நிரூபர்: நீங்க ஏன் நாவல மையமா வச்சே படம் எடுக்குறிங்க?

வெற்றிமாறன்: ஏன்னா எனக்கு கற்பனை சக்தி குறைவு

தன்னுடைய பெருமைகளை மட்டுமே சொல்லும் பிரபலங்கள் மத்தியில் தன்னுடைய குறையையும் வெளிப்படையாக சொன்ன வெற்றிமாறனின் பதில் பளீச். 

 1. நிரூபர்: நீங்க ஏன் யுவன் சங்கர் ராஜா கூட மட்டுமே படம் பண்றிங்க? 

ராம்: ஏன்னா எனக்கு இசை தெரியாதுன்றது யுவனுக்குத் தெரியும்… அதனால…

தெரியாததை தெரியாது என ஒப்புக்கொள்வதே புத்திசாலித்தனம். ராம் புத்திசாலி!

 1. நிரூபர்: நீங்க ஏன் உங்க பேருக்குப் பின்னாடி ரத்னம்ங்கற பேர சேத்துக்கிட்டிங்க… 

மணிரத்னம்: இல்லனா மணின்ற  பேருக்குப் பின்னாடி சாதி பெயர சேத்துடுவாங்களே… 

அதனால தான்!

மணிரத்னம் படைப்புகள் மேட்டுக்குடி தனம் கொண்டவை என்று அவர் மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவருடைய இந்த சாதிப்பற்று இல்லாத பதில் அவர் மீதான மரியாதையை மேலும் அதிகரிக்க செய்கிறது. 

சினிமாவால் உண்டான சமூக மாற்றங்கள்!

சினிமாவை அதிகம் கொண்டாடும் சமூகத்தில் ஏற்படும் நல்ல மற்றும் கெட்ட மாற்றங்கள் இரண்டிலும் சினிமாவுக்கு அதிக பங்குண்டு. அப்படி சினிமாவால் நம் சமூகத்தில் ஏற்பட்ட சில நல்ல மாற்றங்களை பார்ப்போம். 

 1. முன்பை விட இப்போது காதல் திருமணங்கள் அதிகரித்து விட்டன. அதே போல முன்பை விட தற்போது காதல் தற்கொலைகள் குறைந்துவிட்டன. பிடிக்கவில்லை என்றால் பெண் முகத்தில் ஆசிட் அடிப்பது, அந்தப் பெண் பின்னாடியே துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற கோமாளித் தனங்கள் குறைந்துள்ளன.
 2. திருநங்கைகள், விபச்சாரிகள், ஓரின சேர்க்கையாளர், மாற்றுத்திறனாளிகளின் மீதான பார்வை கொஞ்சம் மாறி உள்ளது. படிக்காதவர்கள் இவர்களை இன்றும் கேலி செய்து கொண்டிருந்தாலும் படித்தவர்களில் சிலர் இவர்களிடம் இன்று மரியாதையுடன் நடந்து கொள்வதற்கு சினிமாவும் ஒரு வகையில் காரணம்.,
 3. பிறந்தநாள், நினைவு நாள், பண்டிகை நாள்கள் போன்ற தினங்களில் அனாதை ஆசிரமங்களுக்குச் சென்று உணவளிப்பது, அவர்களுக்கு துணி எடுத்து கொடுப்பது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. 
 4. ஆம்புலன்ஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஆகியுள்ளது. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் அனிச்சையாக ஒதுங்கிச் செல்வது, ஆம்புலன்சில் செல்பவர்க்காக சில நொடிகள் கண்மூடி பிரார்த்தனை செய்வது, யாராவது அடிபட்டு கிடந்தால் தாமதிக்காமல் ஆம்புலன்ஸை அழைப்பது போன்ற நல்ல பழக்கங்கள் நிறைய பேரிடம் அதிகரித்துள்ளது. 
 5. நிறைய இளைஞர்கள் தங்கள் லட்சியத்தை மிக நேசிக்கிறார்கள். லட்சியத்திலிருந்து விலகாமல் பிடித்த வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். பிடித்ததை சாதிக்கிறார்கள். 
 6. விவசாயத்தின் மீதான அக்கறை கொஞ்சம் அதிகரித்துள்ளது. நிறைய இளைஞர்கள் இன்று விவசாயம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். உணவை சேமித்தல் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் அதிகரித்துள்ளது. 
 7. உரிமை பறிப்பு ஏற்படும்போதெல்லாம் தனக்கான உரிமையை மக்கள் தைரியமாக கேட்க தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக ஒன்று சேர்ந்து போராட ஆரம்பித்துவிட்டார்கள். புயல், வெள்ளம் போன்ற சமயங்களில் சாதி மதம் பார்க்காது ஒருவரை ஒருவர் அனுசரித்து மனிதம் போற்ற தொடங்கி உள்ளனர். 
 8. பொது இடத்தில் நடக்கும் அநீதிகளை கேமிராவில் பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பரவவிட்டு நீதி கிடைக்க செய்யும் போராட்ட குணம் அதிகரித்துள்ளது. 
 9. ஆண் பெண் பாலின சமத்துவம் இப்போது ஓரளவுக்கு அதிகரித்துள்ளது. ஆண்களுக்கு பெண்கள் லிப்ட் கொடுக்கிறார்கள், பெண்களுக்கு ஆண்கள் எந்த முகச்சுளிவும் இல்லாமல் நாப்கின் வாங்கி தருகிறார்கள். 
 10. இரத்த தானம், உடல் உறுப்பு தானங்கள் முன்பை விட தமிழகத்தில் இப்போது அதிகரித்துள்ளது. அதிலும் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவிலயே முதலிடத்தில் உள்ளது. 

சினிமாவில் காட்டப்படும் கொடூர தண்டனைகள்!

சினிமாவில் காட்டப்படும் கொடூரமான தண்டனைகள் பார்வையாளர்களின் மனநிலையை என்ன செய்கிறது, படைப்பாளியின் மனநிலையை எப்படி பிரதிபலிக்கிறது என்பதை பற்றி பல நாட்கள் நான் யோசித்துள்ளேன். முதலில் சினிமாவில் காட்டப்படும் கொடூரமான தண்டனைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.  

குகைக்குள் தள்ளி எலிகளை விட்டு கடிக்க வைப்பது, எருமைகளை மிதிக்க வைத்து கொல்வது, பாம்புகளை கடிக்க வைத்து கொல்வது. விரலை மட்டும் வெட்டி அனுப்புவது, கோடாளியை வைத்து உடலை இரண்டாக வெட்டுவது, உடலை சங்கிலியால் கட்டிப்போட்டு உடல் மீது அட்டைப் பூச்சிகளை விட்டு கடிக்க விடுவது, ஆசிட் தார் போன்றவற்றை சொட்டு சொட்டாக விழச்செய்து கொடுமை படுத்துவது, கண்ணில் ஈயம் ஊற்றுவது, பாதத்தில் சூடான கம்பி வைப்பது, ஆணுறுப்பை அறுத்து நாய்க்கு காக்காய்க்கு போடுவது, நாக்கை அறுப்பது மூக்கை அறுப்பது காதை அறுப்பது, பெண்ணின் பிறப்பிறப்புற்குள் காய்ச்சிய கம்பியை நுழைப்பது, பிறப்புறுப்பிற்குள் கையை விட்டு இழுப்பது, மலத் துவாரத்தில் எதையாவது (கண்ணாடி பாட்டில், சூடான இரும்பு ராடு)  நுழைப்பது, உடலை இரு கார்களில் கட்டிப்போட்டு காரை ஸ்டார்ட் செய்து ஓட்டி உடலை இரண்டாகப் பிளப்பது, குரல்வளையை கடிப்பது, அம்மிக்கலை தலையில் தூக்கிப்போட்டு கொள்வது, அரிவாளால் கத்தியால் தலையை தனியாக வெட்டுவது, பெண்ணை கடத்தி வைத்து பல நாட்களாக பல பேர் அனுபவித்து பிறகு அந்தப் பெண்ணின் உடலை கண்டந்துண்டமாக வெட்டி பார்சல் செய்து பொது இடத்தில் வைப்பது என்று பல கொடூரமான தண்டனைகளை நாம் நம்ம ஊர் சினிமா அயல் சினிமா என்று பல சினிமாக்களில் பார்த்துள்ளோம். 

இது போன்ற காட்சிகளை அதிக முறை பார்க்கும்போதுபார்வையாளர்களாகிய  நம் மனம் இறுகிப் போகிறது என்பது ஒருபக்கம் இருக்க நமக்குள் இருக்கும் மிருகம் கொழுத்துவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சிறுவயது முதலே மீனின் தலையை கோழியின் தலையை ஆட்டின் தலையை துண்டாக  வெட்டி அதை கண்டந்துண்டமாக வெட்டுவதை நிஜத்தில் சில அடி ரத்த வாடையுடன் பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இந்த கொடூர தண்டனை காட்சிகள் மிகவும் பிடித்துப் போகிறது. அதற்காக சைவமாக மாற வேண்டும் என்று சொல்லவில்லை. எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும் மிருகம் அவர்கள் பார்க்கும் கொடூர தண்டனை காட்சிகளை பார்க்கும்போது இன்னும் ருசிகண்ட அரக்கனாக மாறிவிடுகிறது. இதனால் திரையரங்குகளில் இன்று கொடூர தண்டனை காட்சிகளுக்கு ரசிகர்கள் வியந்து போய் விசிலடிப்பதையும் அப்படி போடு சதக்… என கை தட்டுவதையும் பார்க்க முடிகிறது.

இதுபோன்ற காட்சிகள் படைப்பாளிகளின் வக்கிர புத்தியை காண்பிக்கிறது என்று சொன்னாலும் ரசிகர்கள் இந்த வக்கிர புத்தியை தான் விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை. 

 

Related Articles

பெருமாள் முருகன் எழுதிய பீக்கதைகள் சிறுக... வேக்காடு, பீ வாங்கியின் ஓலம், பீ, கடைசி இருக்கை, கருப்பணார் கிணறு, அத்தை வீட்டுக் கோடை, தோழர் பிஎம்மின் வெற்றி, வராக அவதாரம், கருதாம்பாளை, சந்தனச் சோப...
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் பெற்ற... கல்வியில் பின் தங்கிய நாடுகள் எப்பாடுபட்டாவது தங்கள் நாட்டுக் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்க பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்...
வலை தொடரில் (Web Series) ஜோடி சேர்கின்றன... மாதவன் நடிப்பில் வெளியான ப்ரீத் (Breathe) மற்றும் இன்சைட் எட்ஜ்(Inside Edge) போன்ற வலை தொடர்களின் வெற்றியைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் நிறையத் தென்ன...
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் ரம்யாகிர... முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிப் பார்க்கலாம்.  தன்னுடைய சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தில் சரியான வெற்றிப்படங்கள் அமைய...

Be the first to comment on "சினிமா பிரபலங்களின் பளீச் பதில்கள்! – சினிமாவால் உண்டான சமூக மாற்றங்கள்! – சினிமாவில் காட்டப்படும் கொடூர தண்டனைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*