கருப்பு சட்டை காரர்களையும் கருப்பு நிற மனிதர்களையும் அதிகமாக விரும்பும் இந்தக் கால இளம் பெண்கள்!

கருப்பு – அழகு:

கருப்பு நிறம் பெண்களுக்கு ஏன் அவ்வளவு பிடித்திருக்கிறது என்று பெண்களிடம் கேள்வி எழுப்பினால் இதற்கெல்லாம் சரியான பதில் சொல்ல முடியாது பிடித்திருக்கிறது அவ்வளவுதான் என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.  இப்படிப்பட்ட அந்த கருப்பு நிற உடையை அவர்கள் ஆசையாக அணிந்து கொள்ளும் போது எப்படி இருக்கிறார்கள் என்பதை சினிமா காட்சிகளை வைத்து பார்ப்போம். முதல் படம் மரியான். இந்த படத்தில் தனுஷின் கருப்பு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு வீட்டு கதவை  திறந்தபடி கெத்தாக போஸ் கொடுப்பார் பார்வதி. அதேபோல நெடுநல்வாடை படம் எடுத்துக்கொள்வோம். அந்த படத்தில்  துப்பட்டா இல்லாத கருப்பு நிற மேலாடையில் அந்த நாயகி  கிராமத்து தேவதையாக தெரிவார்.  இதுபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சின்னத்திரை நடிகை விஜே சித்ரா அவர்களை எடுத்துக் கொள்வோம். அவர் தொடர்ந்து முக நூலில் தனது புகைப்படங்களை பதிவிட்டு கொண்டே இருப்பார். அவற்றில் பெரும்பாலும் எல்லா புகைப்படங்களும் ஆயிரம் லைக்குகள் 1500 லைக்குகள் பெறும். ஆனால் ஒரு முறை மஞ்சள் நிற வெளிச்சத்தில் கருப்பு முழுக்கை டி ஷர்ட் போட்டுகொண்டு அவர் போஸ் கொடுத்த போட்டோ ஒன்று  6 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றது. காரணம் அவர் அந்த கருப்பு நிற உடையில் அவ்வளவு அழகாக இருந்தார். இதேபோல நடிகை ஆண்ட்ரியாவை எடுத்துக் கொள்வோம்.  அவர் துப்பறிவாளன் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தன. குறிப்பாக ஒரு பெரிய கட்டிடம் ஒன்றில் கருப்பு நிற சட்டையும் பேண்டும் அணிந்துகொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செம ஸ்டைலாக நடந்து வரும் காட்சியை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். 

கருப்பு – எதிர்ப்பு: 

இப்படி கருப்பு நிற உடைகள் பெண்களை அழகு படுத்துகிறது என்ற ரீதியில் சினிமாக்களில் காட்சிகள் வந்துள்ளன. இப்போது பெண்கள் அணியும் கருப்பு நிற உடை அவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்புக்கான அடையாளம் என்பதை சுட்டும் காட்சிகளை பார்ப்போம். முதலில் தரமணி படத்தைப் பார்ப்போம். இந்த படத்தில் ஆண்ட்ரியாவை காதலிக்கும் நாயகன், “நீ என் கூட படுக்கிறாயா”  என்று கேட்ட போதும், “நீ யார் கூட படுத்த உண்மையை சொல்லு” என்று மிரட்டும் போதும் ஆண்ட்ரியா கருப்பு நிற உடைகள்தான் அணிந்திருக்கிறார். அப்போது அவர் நாயகனை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் துரத்தி அடிக்கிறார். அதேபோல மகளிர் மட்டும் படத்தை எடுத்துக்கொள்வோம். அந்த படத்தில் ஜோதிகா ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாக நடித்திருப்பார். “மகளிர் மட்டும்” படத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான காட்சிகளில் ஜோதிகா கருப்பு நிற சட்டை அணிந்திருப்பார். காரணம் அவர் இந்த சமூகத்தில் பெண்கள் மீது திணிக்கப்படும் சில வன்முறைகளை ஆதிக்கத்தை எதிர்க்கும் குணாதிசயம் கொண்டவராக இருப்பார். அவருடைய அந்த குணத்திற்கும் அவருடைய கருப்பு உடைக்கும் உண்மையில் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பது அந்தக் காட்சிகளை பார்க்கும் போது புரியும்.  இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா படத்தின் கிளைமாக்சில் நானா படேகர் வந்து தாராவி மண்ணை கையில் எடுப்பார். அப்போது அவருக்கு முதல் ஆளாக எதிர்ப்புத் தெரிவிக்க கருப்பு நிற உடையணிந்த ஒரு சிறுமி தன் கைகளில் கருப்பு நிற பொடிகளை அள்ளி நானா படேகர் முகத்தில் வீசுவாள். இப்படி பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்க  கருப்பு உடை அணியும் பழக்கம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. திடீரென ஒருநாள் இந்த ஆண்கள் செய்யும் தவறுக்கு எதிராக போராடும்  உணர்வுடன் ஒட்டுமொத்த பெண்களும் கருப்பு நிற உடை அணிந்தபடி ஊர்வலமோ அல்லது போராட்டமோ நடத்தினால் இந்த உலகம் தாங்குமா? கிட்டத்திட்ட ஆண்களின் உடலில் நெருப்பு பற்றிக் கொண்டு எரிவது போல் இருக்கும். 

கருப்பு – அன்பு: 

கருப்பு நிற மனிதர்களை விரும்பக்கூடிய வகையில் அவர்களின் கருப்பு நிறத்தின் சிறப்புகளை விவரிக்கும் வகையில் தமிழ் சினிமாவில் சில பாடல்களும் சில காட்சிகளும் வந்துள்ளன.  முதலில் அந்தப் பாடல்கள் என்னென்ன என்று பார்ப்போம். கருவாப்பையா, கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, கருத்த மச்சான், கருவா கருவா பயலே, கருவக்காட்டு கருவாயா என்று ஆண்களின் கருப்பு நிறத்தை கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்கள் வந்துள்ளது. பெண்களின் கருப்பு நிறத்தை சிறப்பிக்கும் வகையில் “கொம்பன்” படத்திலிருந்து “கருப்பு நிறத்தழகி” என்கிற பாடலும் வெளிவந்துள்ளது. அதே சமயம் இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆண்களின் கருப்பு நிறத்தை கொண்டாடக்கூடிய பாடல்கள் தமிழ் சினிமாவில் இவ்வளவு வந்திருக்கின்றன. ஆனால் பெண்ணின் கருப்பு நிறத்தை கொண்டாடக்கூடிய பாடல் மிக குறைவாகவே வந்துள்ளன. இவை கவனிக்கத்தக்க ஒன்று. பா.ரஞ்சித்தின் “கபாலி” படத்தில் ராதிகா ஆப்தே ரஜினியை பார்த்து உன்னுடைய கருப்பு நிறத்தை அப்படியே அள்ளி என் மேல பூசிக்கனும் என்று பேசுவார். அதேபோல இயக்குனர் சங்கரின் சிவாஜி படத்தில் ரஜினியை கருப்பாக இருக்கிறார் என்று ஸ்ரேயா சொல்ல அதற்கு விவேக், கருப்பு நிறத்தின் சிறப்பு அம்சங்களை விளக்குவார். தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்திலும் அதே மாதிரி ஒரு காட்சி வர, வெளிநாட்டுக்காரர்கள் உடலில் எண்ணெயை பூசிக்கொண்டு வெயிலில் படுத்துக் கொண்டே இருக்கிறார்கள் கருப்பாவதற்காக என்று கருப்பு நிறத்தின் சிறப்பை கூறியிருப்பார். 

இப்படி சினிமாவில் கருப்பு நிற மனிதர்களின் கருப்பு நிறத்தின் சிறப்புகளை காமெடியாகவும் பாடல்களாகவும் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.  அதேபோல நிஜ உலகிலும்  நிறைய இளைஞர்களுக்கு இளைஞிகளுக்கு கருப்பு உடை மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் கருப்பு வெள்ளை புகைப்படத்தை தான் அதிகம் விரும்புகின்றனர். அதேபோல முகநூல்களில் பயன்படுத்தும் ஹார்டின்களில் கூட கருப்பு ஹார்டீன்களை தான் அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். 

கருப்பு நிற கணவன்கள்: 

நிறைய யுவதிகள் இன்று கருப்பு-வெள்ளை, பொருளாதாரம், படிப்பறிவு, இவையெல்லாம் பார்க்காமல் வெறும் மனசை மட்டும் பார்க்கக்கூடிய நபர்களாக உண்மையில் இருக்கிறார்கள். அவர்கள் அந்த காலத்து பெண்கள் போல் எனக்கு வரக்கூடிய கணவன் அரவிந்த்சாமி மாதிரி,  அஜித் மாதிரி இருக்க வேண்டும் என்றெல்லாம் கனவு காணாமல் அவன் சாதாரண மனிதனாக அன்பானவனாக இருந்தாலே போதும்  என்ற மனநிலையுடன் உண்மையில் நிறைய பெண்கள் நிறங்களை எல்லாம் பார்க்காமல் காதலிக்கிறார்கள். அந்த மாதிரி கருப்பு நிற மனிதர்களாக இருந்தாலும் பரவாயில்லை, அன்பானவனாக பண்பானவனாக இருக்கிறான் என்கிற ஒரே காரணத்திற்காக  தோழிகளின் அறிவுரைகள் உறவினர்களின் எதிர்ப்புகள் போன்றவற்றை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட சில பிரபலங்களை பார்ப்போம். 

முதலில் சன் டிவி செய்தி தொகுப்பாளர் அனிதா சம்பத் அவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு புடவையில் அவ்வளவு அழகாக நிலவு போல தெரிந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலானது.  இந்நிலையில் சமீபத்தில் அவருடைய திருமணம் நடந்தது. அவருடைய கணவரை பார்த்த பலர் நீங்க எப்படி கருப்பா இருக்கிற மாப்பிள்ளையா ஒத்துக்கிட்டீங்க உங்க கலருக்கும் அவருக்கும் சமந்தமே இல்லை என்பது போன்ற கேள்விகளை தொடர்ந்து அவர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர் சில ரசிகர்கள். அதற்கு அவர்கள் கருப்பு வெள்ளை இதில் என்ன இருக்கிறது? ஒரு மனிதனுடைய நற்பண்புகள் தான் அவனை அழகாக பிரதிபலிக்கிறது…  என்பது போல் பதில் அளித்து இருந்தார்கள். 

அதே போல இயக்குனர் அட்லி மற்றும் பிரியா இவர்களுடைய திருமண புகைப்படங்கள் அல்லது இருவரும் ஜோடியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வந்தால் நிறைய பேர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள். இவ்வளவு கருப்பா இருக்கான் இவனுக்குப் போயி இந்த மாதிரி ஒரு பிள்ளை கிடைச்சிருக்கே, உண்மையாலுமே அந்த கருவாயன் கொடுத்து வைத்தவன்தான்… என்றும்,  இந்த கரிச் சட்டி தலயனக்கு கெடச்ச வாழ்க்கையை பார்த்தியா என்று புலம்புகிறார்கள். நிறத்தை வைத்து கேலி செய்கிறார்கள். அப்படிப்பட்ட கேலி கிண்டல்கள் குறித்து அட்லியும் சரி, பிரியாவும் சரி துளி அளவு கூட கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அவர்களை கலாய்த்துக் கொண்டு இருப்பவன் தொடர்ந்து நேரத்தை விரையம் செய்து கொண்டு கலாய்த்துக் கொண்டு இருக்கிறான். அட்லியும் பிரியாவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அனிதா சம்பத்தும் சரி, பிரியா அட்லியும் சரி… உங்கள் கணவர் கருப்பாக இருக்கிறாரே அது பிரச்சினையாக தெரியவில்லையா என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினால், அவர்கள் கருப்பு சிவப்பு என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, அதை இவ்வளவு தூரம் பெரிதாக்கி அதை வைத்து கேலி செய்வது அதை வைத்து அனுதாபம் பார்ப்பது போன்ற செயல்களெல்லாம் முட்டாள்தனம் என்பது போல தான் அவர்கள் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்கள். இப்படி கருப்பு நிறம் குறித்த முட்டாள்தனமான மூடத்தனமான கருத்துக்கள் இளம் பெண்களிடம் செல்லுபடியாகாமல் இருக்கிறது. அந்த அளவுக்கு இன்றைய பெண்கள் நிறத்தை பற்றி கவலைப்படாமல்  மன நிம்மதியுடன் வாழ்ந்தால் போதும் என்பதை மட்டும் மையமாக வைத்து காதலர்களை கணவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி இருக்கிறார்களா?  என்ற கேள்வி எழுப்பினால் பெரும்பாலும் இல்லை என்றுதான் வரும். ஆண்களை பொருத்த வரை சினிமாவில் காட்டப்படுவது போல ஆபாச படங்களில் காட்டப்படுவது போல நல்லா பளபளவென்று தகதகவென்று மின்னும் ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பெண்கள் நிறைய விஷயங்களில் ரொம்ப தொலைநோக்குப் பார்வையுடன் முன்னோக்கி சென்று கொண்டிருக்க ஆண்கள் இன்னும் பின்தங்கிய பார்வையிலேயே இருக்கிறார்கள் என்பது உண்மை. 

இதனால் தான் ஒரு பெண் குழந்தை கண்டிப்பாக சிவப்பாக பிறக்க வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் எல்லோரும் பிரசவ அறைக்கு முன்பு நின்று கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெண் குழந்தை சிவப்பாகப் இறந்துவிட்டால் அப்பாடா எப்படியோ பிள்ள சிவப்பா பொறந்துருச்சு இனி எந்த கவலையும் இல்லை என்று சந்தோஷமாக கூடிய பெற்றோர்கள் இன்றைய காலத்திலும் இருக்கிறார்கள். அவர்களின் வேண்டுதலை மீறி ஒருவேளை அந்தப் பெண் குழந்தை கருப்பாக பிறந்து விட்டால் உடனே அந்தக் குழந்தையின் நிறத்தை மாற்றுகிறேன் என்று கண்ட கண்ட பொருள்களையெல்லாம் அந்த குழந்தையின் உடலில் மீது தேய்த்து சொரிந்து கடைசியில் அந்த குழந்தையை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறார்கள். 

Related Articles

125 விருதுகளை வென்ற தமிழ் குறும்படம் ... சில தினங்களுக்கு முன்பு திருச்சியை கதைக்களமாகக் கொண்டு சுற்றுப்புறத் தூய்மையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "முதலிடம் நோக்கி" என்ற குறும்படம் சமூக வலைதளங...
விரல் அளவு கூட இல்ல! இதுல ஒருவிரல் புரட்... கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜயின் தீவிர ரசிகர் ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கும் அந்த சி...
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர்கள்... ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தர் கருத்து. அந்தக் கருத்திற்கு ஏற்றார்போல தமிழ் சினிமாவில் தங்களுக்குப் பிடித்த துறையில் கொடிகட்டி பறந்தவர்கள் ...
திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இ... முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும் அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில...

Be the first to comment on "கருப்பு சட்டை காரர்களையும் கருப்பு நிற மனிதர்களையும் அதிகமாக விரும்பும் இந்தக் கால இளம் பெண்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*