சென்னைக்கு அருகே சேட்டிலைட் நகரம் உருவாக்க திட்டம்

புனே மற்றும் கொல்கத்தாவில் அமைந்திருப்பது போல சேட்டிலைட் நகரம் ஒன்றை சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் உருவாக்க மாநில திட்டமிடல் துறை திட்டமிட்டு இருக்கிறது. சென்னை பெருநகர அபிவிருத்தி அதிகாரசபை, சேட்டிலைட் நகரத்தை உருவாக்கும் திட்டத்திற்கான வரைவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 500 முதல் 1000 ஹெக்டேர் அளவுக்கு சேட்டிலைட் நகரை உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

விரிவான நகர்ப்புற திட்டமிடலுக்காக மக்களிடமிருந்து பெருமளவுக்கு நில அளவை மாநில அரசால் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இந்த நில அளவையானது 2012 – 2013 ஆம் ஆண்டில் நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரைகளின் படி கையகப்படுத்தப்படும். அதன்படி நிலத்தை வழங்கும் பொது மக்களும் இந்த திட்டப்பணியில் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ள படுவார்கள்.

அரசு நிறுவனம் , பெரு நிறுவனம் அல்லது நம்பிக்கையான முன்மாதிரிகளிடம் ஒப்படைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு சிந்தித்து வருகிறது. நில பற்றாக்குறை பெருமளவில் இருப்பதால் விவசாயிகளோடும், நில உரிமையாளர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் பங்குதாரர்களாக இணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலக்கப்படும்.

 

சேட்டிலைட் நகரம் என்றால் என்ன?

பெருநகரங்களின் நெரிசலைக் குறைப்பதற்காக, அதன் அருகிலேயே தன்னிறைவுள்ள மற்றுமொரு சிறிய நகரை உருவாக்குவதே சேட்டிலைட் நகரம் ஆகும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1972ல், 178 ஏக்கர் பரப்பளவில் சேட்டிலைட் நகரம் ஒன்றை மறைமலை நகருக்கு அருகே உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டதால் அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. அதே போல தொன்னூறுகளில் வட சென்னை அருகே ஒரு சேட்டிலைட் நகரம் உருவாக்கும் திட்டமும் எந்த காரணமும் சொல்லாமல் கைவிடப்பட்டது.

தமிழக அரசு சென்னையில் இரண்டாவது விமான நிலையை ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய இடங்களில் ஒன்றைத் தேர்வுசெய்ய அரசு உத்தேசித்துள்ளது.

Related Articles

நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கி... உத்தர பிரதேசம் மாநிலம் பங்காரமு என்ற டவுன் பகுதியில் இருப்பவர் ராஜேந்திர யாதவ் . தனது வண்டியில் கிளம்பி கிராமம் கிராமமாக சென்று மருத்துவம் பார்ப்பதே அ...
நாம் யாரை சப்பை என்கிறோமோ அவர்களே சாதிக்... பொல்லாதவன் படத்தில் தனுஷின் அப்பாவை காலில் வெட்டி விடுவார்கள். அப்போது ஹாஸ்பிட்டலுக்கு தனுஷின் அப்பாவைப் பார்க்க வரும் செல்வாவிடம், "நான் சப்பைதான... ...
தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுதோறும் 8.2... உலக சுகாதார தினம் வருடந்தோறும் ஏப்ரல் ஏழாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டபிள்யூஎச்ஓ - யுனிசெப் அமைப்புகளின் சார்...
புற்றுநோயை உண்டாக்கும் பால் பாட்டில்கள்!... குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்த படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்க கூடிய அபாயம் உடைய பிஸ்பினா ஏ என்ற மூலப...

Be the first to comment on "சென்னைக்கு அருகே சேட்டிலைட் நகரம் உருவாக்க திட்டம்"

Leave a comment

Your email address will not be published.


*