கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்தே நடிகர் சிவக்குமாரின் அட்வைஸ் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டு இருக்கிறது. அவற்றில் கவனிக்கத் தக்க, கண்டிக்கத்தக்க ஒரு வீடியோ இன்னமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சு அது. அதை இப்போது கிளறிக்கொண்டு இருக்கிறார்கள். வாட்சப் சில சமயங்களில் நல்லதும் செய்கிறது.
எதோ ஒரு மகளிர் கல்லூரியில் நடிகர் சிவக்குமார் தனக்கே உரிய அட்வைஸ் பணியை ஆத்த போயிருக்கிறார். போனவர், பெண்கள் பல துறைகளில் கால்பதித்து சாதனை செய்ய வேண்டும், பெண்கள் நம் கண்கள், ஒரு பெண் படித்து உயர்ந்தால் அவளுடைய தலைமுறையே உயரும் போன்ற நல்ல கருத்துக்களை அட்வைஸாக கூறாமல் அவர்களை அச்சுறுத்தம் வகையில் ஐடி துறையில் சேராதீர்கள், ஆண் பெண்ணுடன் சரிசமமாகப் பழகாதீர்கள், படித்து முடிச்சதும் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு சமையலறையில் உங்கள் மகத்தான சேவையை ஆத்துங்கள் என்பது போல் உள்ளது அவருடைய பேச்சு.
எதோ ஒரு ஐடி நிறுவனத்தின் சாக்கடைக்குள் இருந்து இரண்டு டன் காண்டம் எடுத்ததாக கார்ப்பரேசன் ஆட்கள் தகவல் தெரிவித்ததாக அவர் கூறி இருக்கிறார். அதே போல எதோ ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்த பெண் ஒருவர் தன்னைப் பெண் பார்க்க வந்த ஒருவனிடம் ” நான் திருமணத்திற்கு முன்பு மூன்று ஆண்களுடன் வாழ்ந்தவள் ” என்று கூறினாராம். இவை எவ்வளவு பெரிய அபத்தமான சொற்கள். பெண்களை முன்னோக்கி வளரவிடாமல் பின்னோக்கி இழுக்கும் செயல்.
ஐடி துறையில் இரண்டு டன் காண்டம் என்பது தான் இப்போது டிரெண்டிங்காகப் போய்க்கொண்டு இருக்கிறது. இரண்டு டன் காண்டம் என்றால் அங்கு உள்ள ஆண், பெண் எல்லோரும் உடலுறவு மேற்கொள்வதையே முதன்மையான தொழிலாகக் கொண்டு உள்ளார்கள் என்பது போல் உள்ளது. விபச்சார விடுதியில் கூட அவ்வளவு காண்டம் கழிவாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் ஒரு காண்டத்தின் எடை என்பது மிகக் குறைவானது. ஏற்கனவே ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு நிறைய மன உளைச்சல் இருக்கிறது. எப்படா கம்பெனியைவிட்டு வெளியே வருவோம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டும் கண்டகண்ட நாய்களிடம் திட்டு வாங்கிக்கொண்டும் வீட்டிலும் வேலைக்காட்டிலும் “மெஷின்களாக” வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் சிவக்குமாரின் அப்போதைய பேச்சு அப்போதே பெரிய அளவில் கண்டிக்கத்தக்கது. ஆனால் கைதட்டி ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். இப்போது சமூகவலைத் தளங்களில், சினிமாவில்(தரமணி) நிறைய முற்போக்கு கருத்துக்கள் பேசப்படுவதால் இப்போது இது அலசப்பட்டு வருகிறது.
உண்மையில் அந்த இரண்டு டன் அளவு இருந்தவை காண்டம் இல்லையாம். எதோ வேறு ஒரு கம்பெனியில் வேலையாட்கள் தங்கள் கைகளில் காயம் ஏற்படாமல் இருக்க உபயோகிக்கும் கையுறையாம். அவர் பேசிய வீடியோவை யூடுப்பில் ஐடியில் வேலை செய்யும் பெண்களை திருமணம் செய்யாதீர்கள் என்ற தலைப்பிட்டு சில “அறிவாளிகள்” பதிவு செய்து இருக்கிறார்கள்.
Be the first to comment on "ஐடி துறையில் வேலை செய்யும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களாமே! – சொல்கிறார் அட்வைஸ் நடிகர்"