உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கி ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் . ஆறு பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு உன்னாவ் மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்னல் வெட்டியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று முதன்மை செயலாளர் அவினாஷ் அவஸ்தி தகவல் தெரிவித்தார்.
கான்பூர் மற்றும் ராய் பரேலியில் இடி தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீள்குடியேற்ற பணியை மேற்கொள்வதற்காகவும் , 24 மணிநேரத்தில் நிவாரணம் வழங்குவதற்காகவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அவினாஷ் அவஸ்தி தகவல் தெரிவித்தார்.
ஜார்கண்டின் பல்வேறு பகுதிகளில் இடியின் காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் மற்றும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் பெக்கா கிராமத்தில், பீகாரில் உள்ள கத்திஹர் பகுதியில், ஒரு குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் கடும் மழையின் காரணமாக மரம் விழுந்ததில் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
Be the first to comment on "உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகாரில் இடி மின்னலுக்கு 30 பேர் பலி"