கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரம் இருக்கும் ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை புரிந்திருக்கிறான் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன். தனது பயிற்சியாளருடன் சேர்ந்து சிகரத்தின் உச்சியில் மூவர்ண கொடியை பறக்க விட்டிருக்கிறார் சாமன்யு பொத்துராஜு.
‘கிளிமாஞ்சாரோவில் ட்ரெக்கிங் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பனி எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மலையேறி போது மிகவும் பனியாக இருந்தது. அவ்வப்போது மழையும் பெய்தது. என் பாதையில் மிகப் பெரிய பாறைகளும் குறுக்கிட்டன. எனக்குச் சோர்வாக இருந்த போதிலும் பனியைப் பார்க்கும் ஆர்வத்தில் நான் தொடர்ந்து பயணித்தேன். பவன் கல்யாண், எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன். நான் உலக சாதனை புரிந்தால், அவரைக் காண அழைத்துச் செல்வதாக அம்மா தெரிவித்து இருந்தார். நான் அவரைக் காண ஆர்வமாக இருக்கிறேன். அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சிகரங்களில் ஏற இருக்கிறேன். இப்போது நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன், கணினி எனக்கு மிகவும் பிடித்த பாடம். எனது இந்த முயற்சிகளுக்காக ஒரு போதும் நான் படிப்பை கைவிட மாட்டேன்’ என்று சாமன்யு பொத்துராஜு தெரிவித்து இருக்கிறார்.
Be the first to comment on "ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறிய ஏழு வயது ஹைதராபாத் சிறுவன்"