ஆட்சியர் கோவிந்தராஜூக்கு பணிமாற்றம் வந்ததும் கரூரின் அடுத்த கலெக்டராக நியமிக்கப்பட்டார் ஆட்சியர் அன்பழகன். தற்போது அவருக்கு கொலைமிரட்டல் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த இரண்டு தினங்களாகவே கரூரில் ஆளுங்கட்சி ஆட்களுக்கும் எதிர்க்கட்சி ஆட்களுக்கும் சண்டை நடந்தவண்ணம் உள்ளது. இதையடுத்து திமுகவிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது என்று கலெக்டர் கூறியதும் திமுகவின் சார்பில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளருமான ஜோதிமணி கலெக்டருடன் போனில் உரையாடியதும் கேட்டபிறகு எங்கு தேர்தல் ரத்து ஆகிவிடுமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் மக்கள்.
திமுக சார்பில் கலெக்டரை யார் தேடிப் போனாலும் அவர்களை கலெக்டர் அலட்சியப் படுத்துவதாகவும் அதிமுக கட்சியினருக்கு மட்டும் கலெக்டர் சலுகை தருவதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஜோதிமணியும் கலெக்டரும் போனில் உரையாடிய பதினைந்து நிமிட ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவை கேட்ட பிறகு கலெக்டர் அன்பழகன் அதிமுக கட்சியினருக்கு விலை போய்ட்டார், அவர் அதிமுகவின் கைக்கூலி, ஜோதிமணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது அதனால் தான் ஜோதிமணியை வேண்டுமென்றே சிக்கலில் சிக்க வைக்க கலெக்டர் நாடகமாடி வருகிறார் என்று கமெண்ட் அடிக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். தேர்தல் அதிகாரி பொறுப்பையும் ஏற்றுள்ளார் மாவட்ட கலெக்டர். நேர்மையான அதிகாரி என்றபோதிலும் பணப்பட்டுவாடா அமோகமாக நடந்து முடிந்துள்ளது.
அதிமுக 500 , திமுக 300 – அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா!
ஏப்ரல் 18ம் தேதி இந்தியா முழுக்க வாக்களிப்பு நடக்க உள்ளது. அதை முன்னிட்டு எந்த பகுதியிலும் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா நடந்திடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கண்டிப்பாக உள்ளது. தேர்தல் பறக்கும் படையை பல இடங்களுக்கு நியமித்து உள்ளது. அப்படி இருந்தும் தமிழகத்தின் பல இடங்களில் ஓட்டுக்காக பணப்பட்டுவாடா செய்யும் வேலை நடந்து வருகிறது.
” ஓட்டுக்குப் பணம் ” இதற்குப் பெயர்போன தொகுதியான அரவக்குறிச்சியில் அத்தனை தேர்தல் படைகள் போட்ட போதிலும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேலை குறைந்தபாடில்லை. அதிமுக சார்பில் 500 ரூபாயும் திமுக சார்பில் 300 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
Be the first to comment on "அதிமுகவின் கைக்கூலியா கரூர் கலெக்டர்? கொலைமிரட்டல் விடுத்த திமுக?"