சுதந்திர தான விழாவின் போதும் குடியரசு தின விழாவின் போதும் ஏகப்பட்ட பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது. அந்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அந்தக் கொடிகளால் விளையும் தீங்குகள் ஏகப்பட்டவை. அப்படி இருந்தும் பிளாஸ்டிக்கில் தேசியக்கொடிகள் தயாரிப்பதை ஒரு சில நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகிறது. அதற்கு அரசு சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டது போலும் தெரியவில்லை. இன்றும் சில இடங்களில் பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேசியக்கொடி தயாரிப்புகளுக்கான விதிமுறைகள் என்னென்ன?
தேசியக்கொடி காதியில் மட்டும் தாயாரிக்கப்படுகிறதே ஏன்? அதைத் தயாரிக்க கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தியா குடியரசான பின்பு 1951ஆம் ஆண்டு இந்தியத் தர நிர்ணயக் கழகம் BUREAU OF INDIAN STANDARD-BIS நிறுவப்பட்டது.
அது தேசியக்கொடியின் அளவு, பயன்படுத்தப்படும் வண்ணங்களின் பொலிவு, அசோகச்சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கை, போன்றவற்றிற்குச் சில வரையறைகளை நிறுவியுள்ளது. இந்த விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு இதற்கு தகுந்தாற்போல மட்டுமே தேசியக்கொடியை தயாரிக்க வேண்டும். ஆகவே தனியார் நிறுவனங்களுக்கு தேசியக்கொடியை தயாரிக்கும் உரிமம் வழங்கப்படுவது இல்லை.
விதிமுறைகள் என்னென்ன?
இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களின் போது தனியார் நிறுவனம் ஒன்று ஹுப்ளியில் உள்ள காதி பவனிடம் நாடு முழுவதும் விநியோகிக்க பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தேசியக்கொடிகளை உற்பத்தி செய்து தருமாறு விண்ணப்பித்து இருந்தது. அப்போது அதன் தலைவராய் பணிபுரிந்த பி.எஸ்.பாட்டில் அவர்கள் இக்கோரிக்கையை நிராகரித்தார்.
ஏனெனில் கதர், கதர்பட்டு, அல்லது கம்பளி இழைகள் செறிவூட்டப்பட்ட கதர்த்துணி, இவைகளால் மட்டுமே தேசியக்கொடிகள் உருவாக்கலாம். பிளாஸ்டிக், பாலிதீன், நைலான், பாலியெஸ்டர், ரெக்ஸின் போன்ற செயற்கை இழைகளைக் கொண்டு தேசியக்கொடியை உருவாக்கக்கூடாது என்பது சட்டமாகும்.
தேசியக்கொடியை உருவாக்கத் தேவையான கதர்த் துணிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் என்ற இடத்தில் அதிக கவனத்துடன் நெய்யப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அவை வண்ணம் ஏற்றப்படுகின்றன.
அவ்வாறு வண்ணம் ஏற்றப்பட்ட துணிகள் இந்திய தர நிர்ணய சங்கத்திற்கு தரப்பரிசோதனைக்காக அனுப்பப்படுக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக ஹுப்ளியில் உள்ள காதி கிராமோத்யோக சங்கத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. அவை இந்தியத்தர நிர்ணயக்கழகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அளவில் வெட்டப்பட்டு தைக்கப்படுகின்றன. பின்னர் தேசியக்கொடியின் மையத்தில் அசோகச் சக்கரம் தனியாகப் பொறிக்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமர் வரை இந்தியர்கள் பயன்படுத்தும் தேசியக்கொடியை இந்த ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
அப்போது பிளாஸ்டிக் தேசியக் கொடியைபயன்படுத்தினால் 3 ஆண்டு சிறை மத்திய உள்துறையின்பொதுப்பிரிவு இயக்குனர் சியாமளாமோகன் இது தொடர் பாகஎல்லா மாநிலங்களுக்கும் ஒருகடிதம் எழுதியுள்ளார். அதில்அவர் கூறியிருப்பதாவது:
அரசு மற்றும் தனியார் நடத்தும் முக்கிய விழாக்களில் பேப்பர் தேசியக் கொடிக்கு பதிலாகபிளாஸ்டிக்கில் தயாராகும் தேசியக் கொடிகளை பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் எளிதில் மக்காது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாதிப்பு ஏற்படும்.மேலும் பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை கவுரவமான முறையில் அகற்றுவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
எனவே அனைத்து விழாக்களிலும்பிளாஸ்டிக் தேசியக் கொடிக ளைபயன்படுத்த மாநில அரசு கள்அனுமதிக்க கூடாது.பேப்பர் தேசியக் கொடிகளைபயன்படுத்த மக்களிடம் மாநிலஅரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் தேசியக்கொடியை விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது தேசிய கவுரவம் இழிவு படுத்தப்படுவதை தடுக்கும் சட்டம்-1971ன் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் பிளாஸ்டிக்தேசிய கொடியை பயன்படுத்துபவர்கள் மீது 3 ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனைவிதித்து நடவடிக்கை எடுக்கமுடியும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அனுமதி இல்லாமல்:
பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் தயாரிப்பது குறித்த அறிவிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. முகநூல், டுவிட்டர் போன்ற பல தளங்களில் இந்த அறிவிப்பு செய்திகள் ஏற்கனவே வலம் வந்தவை தான். அப்படி இருந்தும் எதுவும் மாறவில்லை. பிளாஸ்டிக் தேசியக்கொடி அணிந்துகொண்டு ஜெய்ஹிந்த் என்று உரக்க கத்துவதில் எந்தப் பயனும் இல்லை. தேசப்பற்று என்ற பெயரில் பிளாஸ்டிக் தேசியக்கொடி அணிந்துகொண்டு தேசத்துரோகம் செய்து வருகிறோம்.
தேசியக்கொடிகள் அளவு குறித்த தகவல்கள் அறிந்து LMES என்ற யூடியூப் பக்கத்தில் ஆசிரியர் பிரேமானந்த் அவர்களின் காணொளியைக் காண்பதன் மூலம் தேசியக்கொடிகள் தயாரிப்பதில் என்னென்ன ஊழல்கள் நடக்கிறது என்பதை இன்னும் சற்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
Be the first to comment on "பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்! – தேசியக்கொடி தயாரிப்பில் நடக்கும் ஊழல்கள் என்னென்ன?"