பாலகுமாரன் எழுதிய பாட்ஷா வசனங்கள்!

Baasha dialogues
  1. ” மாட்ட விலை பேசி விக்குற மாதிரி மாப்பிளைய விலை பேசி விக்குறதுக்கு பேருதான் வரதட்சணை! “
  2. ” கடன் வாங்கறதும் தப்பு… கடன் கொடுக்கறதும் தப்பு… “
  3. ” ஜப்பான்காரன் வேல செய்லன்னா செத்துப் போயிடுவான்… சீனாக்காரன் சூதாடலன்னா செத்துப் போயிடுவான்… இங்கிலீஸ்காரன் தன்ன பெருமயா நினைக்கலன்னா செத்துப் போயிடுவான்… இந்தியாக்காரன் பேசலன்னா செத்துப் போயிடுவான்… “
    ” நல்லா பேசுறிங்க… “
    ” இந்தியனாச்சே… “
  4. ” பொன்னு… பெண்ணு… புகழ்… இதுங்களுக்குப் பின்னாடி ஆம்பளைங்க போகக் கூடாதுங்க… ஆம்பளைங்க பின்னாடி இதெல்லாம் வரனும்… “
  5. ” சேத்துல கல்ல தூக்கிப் போட்டா சேறு நம்ப மேலத் தான் தெளிக்கும்… காலம் ரொம்ப கெட்டுப் போயிருக்கு… எந்த வம்புக்கும் போகக்கூடாது… “
  6. ” நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி… “
  7. ” மன்னிச்சு விட்றதுக்கு நான் ஒன்னும் பாட்ஷா இல்லடா… ஆண்டனி… மார்க் ஆண்டனி… “
  8. ” சண்டைன்னா பயமா… “
    ” ஆமாங்க… சண்டைன்னா ரொம்ப பயம்ங்க… அது சரியில்லைங்க… ரொம்ப தப்புங்க… “
  9. ” ஐய்யா… என் பேரு மாணிக்கம்… எனக்கு இன்னொரு பேரு இருக்கு… “
  10. ” உனக்கு சீட்டு கிடைச்சாச்சு… “
    ” தேங்க் யூ ணெ… ஆமா நீங்க இவர்ட்ட என்ன பேசுனிங்க… என்ன சொன்னிங்க… “
    ” உண்மைய சொன்னேன்… “
  11. ” பையனுக்கும் பொண்ணுக்கும் வாலிபத்துல ஏற்பட்ற முத காதல  அவிங்க வாழ்க்க பூரா மறக்கமாட்டாங்க… எவ்ளோ பெரிய இடத்துல எப்பேர்பட்ட ஆள கல்யாணம் பண்ணிட்டாக்கூட அந்த முதல் காதல அவிங்க இதயத்துல இருந்து எடுக்க முடியாது…  அது ஒரு முள்ளா மாறி அவிங்க வாழ்நாள் பூரா குத்திட்டே இருக்கும்… “
  12. ” ஏழைங்கன்னா பணத்துக்காக எது வேணாலும் செய்றவங்கன்னு தான் நான் நினைச்சேன்… ஆனா பணத்த விட அவிங்களுக்கு குடும்ப மானம் தான் முக்கியமுன்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டேன்… “
  13. ” இன்னொரு தடவ உன்ன இந்த இடத்துல பாத்தேன்… பாத்த இடத்துலயே குழி தோண்டி புதைச்சிடுவேன்… “
  14. ” தமிழ்நாட்ல தான் ஒருத்தனுக்கு ஒருத்தன் தமிழனுக்குள்ளயே அடிச்சிக்கிறான்… வெளிலயாவது ஒன்னா இருப்போம்டா… ”
  15. ” பயந்துட்டானா… ”
    ” அவன் பயந்தத இது வரைக்கும் நான் பாத்ததே இல்ல… “
  16. ” அவன் சொல்ல மாட்டான்… சொன்னா செஞ்சுடுவான்… “
  17. ” எண்ணி ஏழே நாளுக்குள்ள உன் கதைய முடிச்சிட்றேன்… ”
    ” என்ன சொன்ன… ஏழு நாளுக்குள்ள என்ன நீ முடிக்கிறியா… எண்ணி ஏழே செகண்ட்க்குள்ள உன் கதைய நான் முடிக்குறேன்… கொஞ்சம் அங்க பாரு… “
    ” கொஞ்சம் அங்க பாரு கண்ணா… “
  18. ” ஒன்னு சொல்றன் நல்லா தெரிஞ்சிக்கு…  நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்… ஆனா கைவுட்ற மாட்டான்… கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்… ஆனா கைவுட்றுவான்… ”

Related Articles

பொத்துக்கிட்டு வரதுக்குப் பேருதாண்டா ரௌத...  "என்னைய்யா பயந்துட்டிங்களா..."தப்பு பண்ணவனே பயப்படுல... எதுத்து கேக்கறவன் எதுக்குப் பயப்படனும்... "  " ஒரு தடவ தான் சாவு...
SC பசங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வராத! &#... "இப்பலாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..." என்று கேட்பவர்கள் இருக்கும் இதே காலத்தில் தான் " நீங்க என்ன ஆளுங்க... " என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ந...
கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!... 40 ஆண்டுகளில் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றம் செய்துள்ளார்.  மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அண்ணாமலை, வாசூல்ராஜா எம்பிபிஎஸ் ப...
ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக... அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடை...

Be the first to comment on "பாலகுமாரன் எழுதிய பாட்ஷா வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*