நேர்கொண்ட பார்வை படம் இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் உருவான பிங்க் படத்தின் ரீமேக் தான் ளன்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்படத்தை பற்றிய மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள்.
இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் ஜீ நெட்வொர்க் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சார்பில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்டு 10 சனிக்கிழமை என்று தீர்மானிக்க பட்டது.
ஆனால் அஜித்தோ சாய் பாபா பக்தர். இதற்கு முந்தைய அஜித் படங்கள் சில வியாழன் அன்றே ரிலீஸ் ஆனது. ஆகையால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் ஆகஸ்ட் 8 அன்று வியாழன் கிழமைக்கு மாற்றி அமைக்கப் பட்டது. இந்த படத்தில் விக்ரம் வேதா புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பிக்பாஸ் புகழ் அபிராமி நடித்துள்ளனர்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இந்தப் படத்தை இயக்கி உள்ளார் ஹெச் வினோத். இவரே தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.
கிட்டத்தட்ட நான்கு ஐந்து படங்களுக்குப் பிறகு அஜீத் மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து உள்ளார்.
இந்தியில் அமிதாப் பச்சனுக்கு ப்ளாஸ்பேக் எதுவும் கிடையாது. ஆனால் தமிழில் அஜித்துக்குப் பிளாஸ்பேக் உள்ளது.
இந்தப் படத்திற்காக அஜீத் இருபது நாட்களுக்கு மட்டுமே கால்ஷீட் தந்துள்ளார்.
விஸ்வாசம் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்ஸ் 45 கோடிக்கு விற்பனை ஆனது. நேர்கொண்ட பார்வையும் அதே விலை சொல்கிறது நேர்கொண்ட பார்வை தயாரிப்பு குழு.
இந்த விலையால் விநியோகஸ்தர்கள் கவலையில் உள்ளனர். இதனால் தயாரிப்பு நிறுவனமே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
Related Articles
சர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிக... அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்)
இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்...
நெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது ம... யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது தான் நமது பாரத பிரதமர் மோடியின் பொழுதுபோக்கு. அது மக்கள...
சுஜித்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்...
நடிகர் விவேக் : கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எ...
Be the first to commenton "நேர்கொண்ட பார்வை படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!"
Be the first to comment on "நேர்கொண்ட பார்வை படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!"