தமிழகத்தில் நீட் தேர்வு வந்த பிறகு, பல குளறுபடிகள் நடந்து உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு எழுத்துப்பிழைகள் காரணமாக மிகப் பெரிய குளறுபடி உண்டாகி இருந்தது.
இது தமிழ் மாணவர்களுக்கு வேண்டுமென்றே அளிக்கப்பட்ட அநீதி என்று பலர் குரல் கொடுக்க, சிலர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து அதற்கான நீதியை தற்போது பெற்றிருக்கிறார்கள்.
மதுரை நீதிமன்றம் அளித்த இந்த உத்தரவால் பல மாணவர்களின் கனவுகள் நிறைவேற வாய்ப்பு இருப்பதால் இந்த உத்தரவை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.
மதுரை நீதிமன்றத்தின் உத்தரவால், மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியல் மீண்டும் வெளியிடும் சூழல் உருவாகி உள்ளது.
புதிய பட்டியல் உருவானால், இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு இது பலன் அளிக்கும். ஏற்கனவவே கல்லூரிகளில் பணம் கட்டி சேர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தப் புதிய பட்டியலின் காரணமாக பலன் அடைவார்களா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் இந்தக் குளறுபடிகள் மாணவர்களின் வாழ்க்கையை நாசம் செய்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. எத்தனை அலைச்சல், எத்தனை குளறுபடிகள் என்று மாணவர்களின் வயித்தெரிச்சலை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது அலட்சியம் நிறைந்த அரசு.
Be the first to comment on "தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலா வழங்க மதுரை நீதிமன்றம் உத்தரவு! – வரவேற்ற அரசியல் தலைவர்கள்!"