யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு ஜூலை 15 முதல் கொண்டாட்டம் தான்!

peranbu mammootty first look

யுவன் சங்கர் ராஜா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசை இயக்குனர். இருந்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்காமல் இருப்பது ஏனோ?

யுவன் சங்கர் ராஜாவுடன் சில இயக்குனர்கள் இணைந்து பணியாற்றும் போது வேற லெவல் பாடல்கள் அமைகிறது. யுவன் & செல்வராகவன் கூட்டணி, யுவன் & அமீர் கூட்டணி, யுவன் & ராம் கூட்டணி, யுவன் & வெங்கட் பிரபு கூட்டணி ஆகிய கூட்டணிகளில் உருவான பாடல்கள் அனைத்துமே ஹிட். எப்போதும் கொண்டாடக் கூடிய, ரசிக்க கூடிய பாடல்களாக அமையும்.

அந்த வகையில் வருகிற ஜூலை 15ம் தேதியில் இயக்குனர் ராம் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி இருக்கும் பேரன்பு திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது.

ஏற்கனவே ராம் மற்றும் யுவன் கூட்டணியில் வந்த பாடல்கள் பெரும்பாலான இசை ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இருப்பதால் இந்தப் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே சமயம் பேரன்பு படம் பல சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறது என்ற செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப் படுத்தியுள்ளது.

Related Articles

இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...
மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச ... மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் கா...
251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி த... நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்த...
உலகில் அதிகம் மாசுபட்ட 20 நகரங்கள் பட்டி... உலகச் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகில் அதிக அளவில் மாசுபட்ட 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்...

Be the first to comment on "யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு ஜூலை 15 முதல் கொண்டாட்டம் தான்!"

Leave a comment

Your email address will not be published.


*