தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சில படங்களையும் தமிழக அரசியலின் சில தவிர்க்க முடியாத சம்பவங்களையும் கலந்து கட்டி கலாய்த்து தள்ளி இருக்கும் தமிழ்ப்படம் பாகம் இரண்டு படத்தின் முதல் ப்ரோமோவுக்கு கீழே ஒருவர் போட்டிருந்த கமெண்ட் தான் ” ஒரே ஒரு தமிழ்படம் தான்… ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் க்ளோஸ்… ” என்பது.
அந்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது இந்தப்படம். வரும் வெள்ளிக்கிழமை இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்து உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு தமிழ்ப்படம் பாகம் ஒன்று ரிலீஸ் ஆனது. அதில் வெறும் சினிமா நடிகர்களை மட்டுமே கலாய்த்து தள்ளி இருந்தார்கள். அப்போதே அந்தப் படம் சக்கை போடு போட்டது. இப்போது செல்லூர் ராஜூ முதல் டொனால்ட் ட்ரம்ப் வரை பல அரசியல்வாதிகளையும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள் என்பதால் தியேட்டருக்கு பெரும்பாலான ரசிகர்களை அழைத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Be the first to comment on "ஒரே ஒரு தமிழ்படம் (2) தான், ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் க்ளோஸ்!"