முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தை உண்மையிலயே ஆட்சி
செய்பவர் எடப்பாடியைச் சார்ந்தவரா அல்லது குஜராத்தை சார்ந்தவரா என்பது தெரிந்தும்
தெரியாமலும் இருக்கிறது.
பல ஆண்டுகளாக வேறெந்த கட்சிகளும் தமிழகத்தில் நுழைந்திடாதபடி திராவிட கட்சிகள்
இவ்வளவு நாட்கள் பத்திரமாகப் பார்த்துக்கொண்டனர். இப்போது அந்தக் கட்சிகள் லேசான
பலவீனம் அடைந்தவுடன் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி தமிழகத்தில் தலை தூக்க
தொடங்குகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு முன்பு வரை கிடப்பில் போடப்பட்டிருந்த சில மத்திய அரசு
திட்டங்களை தற்போது துவக்கம் செய்துள்ளனர். இந்த திட்டங்களால் தங்களின் உடல் நலனுக்கு,
தங்களது அடுத்த தலைமுறைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த பொதுமக்கள் மத்திய
மாநில அரசுகளிடம் முறையாக மனு அளித்து பார்த்து பலன் இல்லாததால் பிறகு போராட்டத்தை
துவங்கினர்.
இவ்வளவு நாட்கள் இல்லாத தைரியம் இந்த மக்களுக்கு இப்போது எப்படி வந்தது என்று பேசி
செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார். ஏன் மக்கள் எல்லோரும் எதுவுமே பேசாமல் நீங்கள்
சொல்வதற்கெல்லாமல் தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்பி
இருந்தனர். எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் தான் ஆட்சியை பிடிக்கும் பொருட்டு மக்களை
உசுப்பேத்தி அவர்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார் என்று அவரை விமர்சிக்கப்போய்
தனக்குத் தானே ஆப்பு வைத்துக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து பல இடங்களில் பல முறை இதே போல பேசி சமூக வலைதளங்களில் வாங்கி
கட்டிக்கொண்டார். அதை அடுத்து, தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் மட்டுமே தமிழகத்துக்கு
காவிரி வரும் என்று மிரட்டிப் பார்த்தார். அப்படியென்றால் எளிதாக முடியக்கூட ஒரு காரியத்தை
தங்களது அரசியல் லாபத்திற்காக இது போன்ற சில அரசியல் கட்சிகள் கண்டுங்காணாமல் காலம் தள்ளுகிறது.
இப்போது சத்யராஜ் ஒரு மேடையில் ” நாங்கள் ராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டோம் ” என்று கூறியதை அடுத்து, “இராணுவம் வந்தால் பயப்படமாட்டீர்கள். ஐடி ரெய்டு வந்தால் பயப்படுவீர்கள் தானே… ” என்று கமெண்ட் அடித்தார். இந்த கமெண்ட் மூலம், இந்திய மக்கள் நாங்கள் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாமல் அடிமை போல் அனைத்தையும் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைப்பது தெளிவாகியுள்ளது.
இது போல யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் வீட்டுக்கு ஐடி ரெய்டு வரும் என்று மிரட்டுவது போல் பேசி நக்கல் மன்னனிடம் கலாய் வாங்கினார். சமூக வலைதளங்களிலும் வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Be the first to comment on "இந்தியாவில் நடப்பது சர்வதிகார ஆட்சி தான் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் தமிழிசை!"