வெக்கை நாவல் – புத்தக விமர்சனம்!

vekkai novel books review

இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் படைப்பு எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்.

முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியிலயே விழுகிறது வெட்டு! தெறிக்கிறது ரத்தம்! வெடிக்கிறது குண்டு! ஓடி மறைகிறது கால்கள்! இது போதாதா இது வெற்றிமாறனுக்கு உகந்த கதை என்று சொல்ல. ஏன் என்று தெரியவில்லை வன்முறை அதிகமுள்ள கதைகளத்தையே இயக்குனர் வெற்றிமாறன் தேர்ந்தெடுக்கிறார்!

சிதம்பரம் என்ற பதினைந்து வயது சிறுவன் வடக்கூரான் என்றவனின் கையை தெருமுக்கில் வைத்து வெட்டுகிறான். பின்னாடி துரத்தி வருபவர்கள் மீது குண்டை வீசுகிறான். அவன் வடக்கூரானின் கையை வெட்ட என்ன காரணம்? என்பதை விவரிக்கும் விதமாக நாவல் விரிகிறது.

இந்த நாவல் கொண்டுள்ள கருவை வைத்து இதற்குமுன் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளது என்றாலும் இது திரைப்படம் ஆக்கப்பட்டால் இயக்குனர் வசந்தபாலனின் வெயில் படமளவுக்கு பெயர் பெறும் என்பது மட்டும் உறுதி.

அண்ணனுடனே சுற்றித்திரிந்த சிதம்பரம், பல பஞ்சாயத்து பேசி தீர்ப்பு சொல்லும் நடுத்தர வர்க்கத்தில் ஒரு மாமா, பாசமிகுந்த அத்தை, கண்டிப்பான அய்யா, வம்பு இழுத்துக் கொண்டே திரியும் வடக்கூரான் இவர்கள் தான் நாவலின் மையக் கதாபாத்திரங்கள். இடையில் சானகி என்ற சிறுமி வந்து நம் கண்களை கலங்கடிக்கச் செய்கிறாள். குறிப்பாக சானகி, சிதம்பரம், அண்ணன் மூவரும் கோயிலுக்கு சென்று குகையில் உள்ள அய்யா – மகன் சிலையையும் அவர்ளுக்குள் உண்டான ஈகோவையும் குடல் மாலையையும் விவரிக்கும் இடம் மெய் சிலிர்த்து விடுகிறது.

அய்யா, சிதம்பரம், மாமா, அத்தை போன்றோர் வரும் இடமெல்லாம் குடும்ப பாசம் பொங்கி வழிகிறது. சிதம்பரம் இவர்களுக்கு கொடுத்த பிரச்சினையை அவர்கள் எப்படி சமாளித்தார்கள்? வடக்கூரான் இறுதியில் உயிரிழந்தானா என்பது மீதிக்கதை.

படமாக எடுத்தால் வெயில், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற ஈரமும் வீரமும் நிறைந்த படைப்பாக வெளிவர வாய்ப்புண்டு. அய்யாவும் சிதம்பரமும் வரும் இடத்தில் ஆடுகளம் படத்தின் பேட்டைக் காரன் மற்றும் கே. பி. காம்பினேசனும், சிதம்பரம் மற்றும் மாமா வரும் இடத்தில் ஆடுகளம் படத்தின் கிஷோர் குமார் மற்றும் கே. பி. காம்பினேசனும் நினைவுக்கு வந்து செல்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வட சென்னை படம் தேசிய விருதுகள் வெல்கிறதோ இல்லையோ வெக்கையை தழுவலாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் நிச்சயமாக விருதுகளை அள்ளும் என்பது உறுதி! படைப்பு அப்படி!

மொத்தம் 175 பக்கங்கள் உடைய இந்த நாவலை இரண்டு நாட்களில் முடித்துவிடலாம். ஆடுகளம் படம் பார்த்த பின் வெக்கை படியுங்கள் அல்லது வெக்கை படித்த பின் ஆடுகளம் பாருங்கள். மறக்க முடியாத நல்ல அனுபலமாக இருக்கும்!

Related Articles

உங்களுக்குத் தரப்படும் மருந்துகளில் 10% ... எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போன பிறகும் கூட ஒரு சாமானியன் சிறிய வைராக்கியத்துடன் சென்று சேரும் இடங்கள் இரண்டு. ஒன்று கோவில், அது ஒரு வழிப் பாதை. அங்க...
அப்பான்னா இப்படி இருக்கணும்! – சாத... இந்தி டிவி சீரியல், இந்திப் படங்கள், மணிரத்னம் படங்கள், கமல், சீமானுடன் படங்கள் என்று படிப்படியாக உயர்ந்த நடிகர் மாதவன் இந்திய சினிமா உலகில் தவிர்க்க...
தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள... சமீபத்தில் முகநூலில் ஒருவர், தனியார் பள்ளியில் வாத்தியார் வேலை பார்ப்பதற்கு பேசாமல் நாலு ஆடு மாடு வாங்கி மேய்க்கலாம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ப...
அன்பை பகிர்வோம் ! – மீம் கிரியேட்ட... சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவைப் பற்றி தி இந்து நடுப்பக்கத்தில் கட்டுரை எழுதி இருந்தார் நடிகர் சூர்ய...

Be the first to comment on "வெக்கை நாவல் – புத்தக விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*