இனி நீங்கள் போனில் உரையாட வேண்டியதில்லை. உங்களுக்காக அதைச் செய்ய வருகிறது கூகுள் டூப்ளக்ஸ்

வார இறுதியில் முடி திருத்த விரும்புகிறீர்கள், உங்களுக்கு விருப்பமான முடிதிருத்தகத்துக்கு திறன்பேசியில் அழைத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இது தான் காட்சி. என்ன செய்வீர்கள்?

 

ஸ்டேப் 1       :              திறன்பேசியை எடுக்க வேண்டும்

ஸ்டேப்  2        :               நீங்கள் வழக்கமாகச் செல்லும் முடிதிருத்தகத்தின் பெயரை      நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்

ஸ்டேப்  3        :               பின்பு ஸ்க்ரோல் செய்து சலூன் திறன்பேசி எண்ணைத் தேடி பிடித்து, டயல் செய்ய வேண்டும்

ஸ்டேப் 4       : அவர்களிடம் நீங்கள் யார், எத்தனை மணிக்கு வர விரும்புகிறீர்கள், முடி திருத்தமா அல்லது ஷேவிங்கா? இத்தனையும் பேசிப் புரிய வைத்து அப்பாயிண்ட்மெண்ட்  பெற வேண்டும்.

நாலு ஸ்டெப்பா என்று டயர்டாக இருக்கிறதா? கவலை வேண்டாம் இனி உங்களுக்காக, உங்கள் சார்பாக மற்றவர்களிடம் திறன்பேசியில் உரையாட இருக்கிறது கூகுள் டூப்ளக்ஸ் .

 

கூகுளின் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence ) மென்பொருள் – டூப்ளக்ஸ்

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் பெரிய அளவுக்கு முதலீடு செய்து வருகின்றன. மனித மூளையைப் போலவே சிந்தித்துச் செயல்படும் ஒரு சிஸ்டத்தை உருவாக்குவதே செயற்கை நுண்ணறிவின் நோக்கமாகும். அதன் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருளான டூப்ளக்ஸை அறிமுகம் செய்திருக்கிறது.

இதன் மூலம் உங்களுக்குத் தேவையான சேவைகள் எதுவாயினும், உங்கள் சார்பாக அந்தச் சேவையை வழங்குபவர்களிடம் கூகுள் உரையாடி அந்தச் சேவை தொடர்பான தகவல்களை பெற்றுத் தரும். அடுத்த வாரம் புதன்கிழமை ஏழு மணிக்கு ஒரு உணவகத்திற்கு உங்கள் நண்பர்கள் நாலு பேரோடு செல்ல விரும்புகிறீர்கள். முன்கூடியே உணவுமேஜை பதிவுசெய்து வைக்க வேண்டுமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள். கொஞ்சம் கேட்டு சொல் என்று டூப்ளக்ஸ்  மென்பொருளிடம் குரல் கட்டளையாகச்(Voice Command) சொல்லிவிட்டால் போதும். உங்களுக்குத் தேவையான அத்தனை தகவல்களையும் அந்த உணவகத்திடம் உங்கள் சார்பாக பேசி உங்களுக்குப் பெற்று தந்துவிடும் கூகுள் டூப்ளக்ஸ்.

சோதனை அடிப்படையில் இந்த மென்பொருளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது கூகுள்.

Related Articles

சாகித்திய அகாடமி விருது வெற்றியாளர் கேவி... 1. கேள்வி: கேரளாவுல பாலக்காட்டில் பிறந்திருந்தால் கூட இங்க வந்து ஒரு தமிழாசிரியரா இருக்கீங்க...  தமிழ் மீது அவ்வளவு ஈடுபாடு இருக்கு... தமிழ் சார்ந்த ம...
ஹாலிவுட் படத்தில் ஒல்லிப்பிச்சான்! ̵... இவனெல்லாம் ஒரு ஆளா என்று இளக்காரம் பேசிய மனிதர்களை அடேங்கப்பா என்று வியக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டிற்கு சென்ற தமிழ் நடிகர் என்றதும் அவரை ...
ஜிப்ஸினா மதம் பிடிக்காத மனுச சாதிங்க ... அட்டகத்தி தினேஷ் நடிப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ராஜூமுருகன் வெளியான அற்புதமான படம் குக்கூ. அதை தொடர்ந்து இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெ...
251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி த... நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்த...

Be the first to comment on "இனி நீங்கள் போனில் உரையாட வேண்டியதில்லை. உங்களுக்காக அதைச் செய்ய வருகிறது கூகுள் டூப்ளக்ஸ்"

Leave a comment

Your email address will not be published.


*