உலகில் அதிகம் மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பிடித்தன

உலகச் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகில் அதிக அளவில் மாசுபட்ட 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில் அதிக அளவு மாசுபட்ட நகரங்களாக டெல்லியும், வாரணாசியும் இருக்கிறது. இந்தத் தரவுகள் காற்றின் தரத்தை அளவிடும் பிஎம் 2.5(PM 2.5) என்ற அளவுகோலின் படி வெளியிடப்பட்டுள்ளது. உலகில் வசிக்கும் பத்தில் ஒன்பது பேர் மாசுபட்ட காற்றையே சுவாசிக்க வேண்டிய நிலை இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கான்பூர், ஃபரிதாபாத், கயா, பாட்னா, லக்னோ, ஆக்ரா, முசாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்ப்பூர், பாட்டியாலா மற்றும் ஜோத்பூர் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மற்ற இந்திய நகரங்கள் ஆகும். குவைத்தில் அலி சுபா அல் சேலம் மற்றும் சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ள ஒரு சில நகரங்கள்.இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 

பிஎம் 10 அளவீடு

பிஎம் 10 அளவீட்டின் படி, மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் ௧௩ இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. தென்கிழக்கு ஆசியா பகுதியில் காற்று மாசுபாடு பிரச்னையைச் சீர் செய்யப் போதுமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு உலகச் சுகாதார அமைப்பில் உறுப்பினர் அங்கம் வகிக்கும் நாடுகளை உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிகழும் 7 மில்லியன் முதிரா இறப்புகளில் கிட்டத்தட்ட 2.4 மில்லியன் அளவுக்கு உட்புற மற்றும் வெளிப்புற காற்று மாசுபாடு காரணம் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் உள்ள தெற்காசியாவில் அதிகஅளவு காற்று மாசு ஏற்படுகிறது. உலக அளவில் 34 சதவீத காற்று மாசு இந்த பகுதியில்தான் காணப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 24 லட்சம் பேர் மாசு காரணமாக இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தெற்காசிய பகுதியை சேர்ந்தவர்கள்.

பி.எம் 2.5-ல் குறியீட்டில் மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, சல்பேட், நைட்ரேட், பிளாக் கார்பன் ஆகியவை அடங்கியுள்ளன, இவை மனித உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியவை. தொற்றா நோய்களான மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. காற்று மாசை குறைக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே பாதிப்புகளை தடுக்க முடியும்

 

புதிதாகச் சேர்ந்த 1000 நகரங்கள்

2016 ஆம் ஆண்டில் இருந்து, 1000 கூடுதல் நகரங்கள் உலகச் சுகாதார நிறுவன தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன,முன்னர் இருந்ததை விடக் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்குப் பல நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதையே காட்டுகின்றது.

மாசுபட்ட காற்றின் துகள்கள் நுரையீரல் மற்றும் இதய அமைப்பின் ஆழத்திற்குள் நுழைவதால் இருதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நோய்த்தாக்கம் ,நுரையீரல் நோய்கள் மற்றும் சுவாச தொற்றுநோய்கள் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்று உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.

உலகச் சுகாதார நிறுவனத்தின் இந்த எச்சரிக்கையைக் காதில் வாங்கிக் கொள்ளாவிட்டால் இந்தியர்கள் தங்கள் முதுகுகளில் ஆகிசிஜன் சிலிண்டர்கள் சுமந்துகொண்டு திரியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Related Articles

சார்பட்டா வசனங்கள் – உங்களுக்கு பி... பாத்ரூம்லயே பாக்ஸிங் பண்ணா யாரு மேன் உன்ன நம்புவா... ஸ்டேஜ்ல வந்து பாக்ஸிங் பண்ணு...  "யாருக்காக ஆடுற...""சார்பட்டா பரம்பரைக்காக ஆடுறேன் ...
பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இரண்ட... பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வருவதுண்டு. கடந்த சில வருடங்களில் அருவி, தரமணி, காதலும் கடந்து போகும் போன்ற நல்ல...
தேவராட்டம் மட்டுமல்ல எல்லா படத்தலயும் சா... புதிய தலைமுறையின் பொருள் புதிது நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா கேள்வி கேட்ட மதன் ரவிச்சந்திரன்கேள்வி 1 : தேவராட்டம் படம் எப்படி வந்திருக்கு...???...
தனியார் கல்வி நிறுவனங்களிடம் பேரம் பேசும... அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? கடவுளுக்கு தரும் கல்வியைவிட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி மேலானது என்றார் புரட்சியாளர் அம்பேத்க...

Be the first to comment on "உலகில் அதிகம் மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பிடித்தன"

Leave a comment

Your email address will not be published.


*