விவசாயத்துக்கு இருபத்து நாலு மணிநேர இலவச மின்சாரத்தைத் தருகிறது தெலங்கானா அரசு

agriculture

நாட்டின் இளைய மாநிலமான தெலங்கானா 2014ல் உருவானபோது மின்பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்தது, தற்போது மின்மிகை மாநிலமாக உருவெடுத்திட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் மாநிலம்

இருபத்து நாலு மணிநேரமும் இலவச மின்சாரத்தை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை தெலங்கானா பெற்றிருக்கிறது. மக்களுக்கான புத்தாண்டு பரிசாக இந்தத் திட்டத்தை புத்தாண்டிலிருந்து செயல்படும் வண்ணம் தெலுங்கனா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதன்மூலம் நாட்டிலுள்ள  இருபத்து மூன்று லட்சம் பம்புகள், இருபத்து நாலு மணிநேரமும் செயல்படும்.

இந்தத் திட்டத்தால் விவசாயிகளின் விரக்தி களையப்பட்டு, வளர்ச்சிக்கான குறியீடான ‘தங்க தெலங்கானா’ என்று கனவை நோக்கிச் செல்ல விவசாயிகள் ஊக்குவிக்கப் படுவார்கள் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் உருவானபோது மிக அதிகளவில் மின் பற்றாக்குறை இருந்து வந்தது. ஆனால் அந்த நிலை மிக விரைவிலேயே சரிசெய்யப்பட்டு மின்தடை இல்லாத மாநிலமாக தெலங்கானா உருவானது. ஏற்கனவே ஒன்பது மணிநேரம் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்குத் தந்துவந்து அரசு, இப்போது அதை இருபத்து மணிநேரமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அம்மாநில முதல்வர் ராவ், மின்துறை அதிகாரிகளைப் பெரிதும் பாராட்டினார். ‘இவர்களின் அசாத்திய திறமையால், மின்பற்றாக்குறை கொண்ட மாநிலத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளனர்’ என்று பாராட்டினார். அவர்களது திறமையை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு சம்பளவு உயர்வையும் அறிவித்துள்ளார் தெலங்கானா முதல்வர்.

இப்போதைக்கு தெலங்கானா 14845  மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரித்து வருகிறது, அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கூடுதலாக 13000  மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவிருக்கிறது. 2022 ஆண்டு  வாக்கில் 22000 மெகா வாட் மின்சாரம் கொண்ட மாநிலமாக தெலங்கானா அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னது தமிழ்நாட்டிலும் இதே மாதிரியா? மூச்.

Related Articles

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குற... பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்...
ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கரு... கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து ...
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2018 ஐபிஎல் ...  வரிசை எண் போட்டி எண் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 1 07-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை...
இரண்டு மாதங்களில் 106 சிறுத்தைப்புலிகளை ... வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 106 புலிகள் இறந்துள்ளன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிக...

Be the first to comment on "விவசாயத்துக்கு இருபத்து நாலு மணிநேர இலவச மின்சாரத்தைத் தருகிறது தெலங்கானா அரசு"

Leave a comment

Your email address will not be published.


*