நாட்டின் இளைய மாநிலமான தெலங்கானா 2014ல் உருவானபோது மின்பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்தது, தற்போது மின்மிகை மாநிலமாக உருவெடுத்திட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் மாநிலம்
இருபத்து நாலு மணிநேரமும் இலவச மின்சாரத்தை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை தெலங்கானா பெற்றிருக்கிறது. மக்களுக்கான புத்தாண்டு பரிசாக இந்தத் திட்டத்தை புத்தாண்டிலிருந்து செயல்படும் வண்ணம் தெலுங்கனா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதன்மூலம் நாட்டிலுள்ள இருபத்து மூன்று லட்சம் பம்புகள், இருபத்து நாலு மணிநேரமும் செயல்படும்.
இந்தத் திட்டத்தால் விவசாயிகளின் விரக்தி களையப்பட்டு, வளர்ச்சிக்கான குறியீடான ‘தங்க தெலங்கானா’ என்று கனவை நோக்கிச் செல்ல விவசாயிகள் ஊக்குவிக்கப் படுவார்கள் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் உருவானபோது மிக அதிகளவில் மின் பற்றாக்குறை இருந்து வந்தது. ஆனால் அந்த நிலை மிக விரைவிலேயே சரிசெய்யப்பட்டு மின்தடை இல்லாத மாநிலமாக தெலங்கானா உருவானது. ஏற்கனவே ஒன்பது மணிநேரம் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்குத் தந்துவந்து அரசு, இப்போது அதை இருபத்து மணிநேரமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அம்மாநில முதல்வர் ராவ், மின்துறை அதிகாரிகளைப் பெரிதும் பாராட்டினார். ‘இவர்களின் அசாத்திய திறமையால், மின்பற்றாக்குறை கொண்ட மாநிலத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளனர்’ என்று பாராட்டினார். அவர்களது திறமையை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு சம்பளவு உயர்வையும் அறிவித்துள்ளார் தெலங்கானா முதல்வர்.
இப்போதைக்கு தெலங்கானா 14845 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரித்து வருகிறது, அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கூடுதலாக 13000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவிருக்கிறது. 2022 ஆண்டு வாக்கில் 22000 மெகா வாட் மின்சாரம் கொண்ட மாநிலமாக தெலங்கானா அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னது தமிழ்நாட்டிலும் இதே மாதிரியா? மூச்.
Be the first to comment on "விவசாயத்துக்கு இருபத்து நாலு மணிநேர இலவச மின்சாரத்தைத் தருகிறது தெலங்கானா அரசு"