எம்எல்ஏக்கள் என்ன விலை? வாக்களித்தவனுக்கு என்றுமே நடுத்தெரு தானா?

பக்கத்து மாநிலமான கர்நாடக அரசியலில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது. கடையை விரிக்கப் போவது நீயா இல்லை நானா என்று போட்டி போட்டு கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக் கொண்டு அலைந்து திரிகிறார்கள்.

இந்த தில்லாலங்கடி வேலைக்கு அடித்தளம் அமைத்தது தமிழக அரசியல் என்பதில் நாம் எல்லாம் பெருமை கொள்ள வேண்டும். தமிழக மக்கள் தான் ஏமார்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் கர்நாடக மக்கள் அதைவிட இருக்கிறார்கள். சமூக கட்டமைப்பு அப்படி உள்ளது. மக்களை அடிமைப் படுத்தியே வைத்து உள்ளது. அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்கிறது. அந்த அறியாமை தான் இன்னும் இந்திய மக்களை ஏமாளியாக வைத்து இருக்கிறது. இன்னும் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி வைத்து இருக்கிறது.

 

எம்எல்ஏக்கள் கதைக்கு வருவோம்?

மக்களிடம் வாக்கு சேகரிக்கப் போகும் போது என்ன என்ன சொல்லி இருப்பார்கள் இந்த எம்எல்ஏக்கள். தாங்கள் செய்த கொஞ்ச நெஞ்ச வேலைகளை சாதனைகளாக உருவகப் படுத்தி அதை பொது வெளியில் வைத்து பெரிய திரையில் காட்டி வாக்கு சேகரிக்கிறார்கள். எதிர்க் கட்சிகள் செய்த தவறுகளை தோண்டி எடுத்து மக்கள் முன் போட்டுக் கொடுத்து நீங்கள் அரிச்சந்திரனாகவும், உத்தம புத்திரர்களாகவும் காட்டிக் கொள்கிறீர்கள். மேலும் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வாக்குறுதி தந்து வாக்காளர்களை ஏமாற்றுகிறீர்கள். இவற்றை எல்லாம் நம்பி, உங்களுக்கு வாக்களிக்கிறான். தேர்தல் முடியும் வரை அவனை தெய்வமாக எண்ணி கொண்டாடிவிட்டு இப்போது தெருநாய் போல் நடத்துவது என்ன நியாயம்?

தேர்தல் முடிந்ததும் மற்றொரு கட்சி ஆட்சி அமைப்பதற்காக உங்கள் தலைக்கு நூறு கோடி ஐநூறு கோடி என்று பேரம் பேசுகிறது. நீங்களும் மனசாட்சி இல்லாமல் அவர்களுக்கு அடிபணிகிறீர்கள். பணத்திற்காக உங்கள் சுயலாபத்திற்காக உங்கள் வாக்கு உறுதிகளை பொய்யாக்கி வேறு ஒரு கட்சிக்கு தாவுவதற்குப் பெயர் ” தேசத் துரோகம் “. ஆனால் இந்த தேசத் துரோகிகளுக்கு எந்த தண்டனையும் வழங்கப் படுவதில்லை. மாறாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாக்கு உரிமை குறித்த விழிப்புணர்வு இந்திய மக்களுக்கு என்பதே உண்மை. அவற்றின் பயன்களை எல்லாம் முழுவதும் மக்களுக்கு தெரியாதபடி பொழப்பு நடத்துவதில் தான் அரசியல்வாதிகளின் திறமை இருக்கிறது. இனி வரும் தலைமுறை இதே போல் செயல்படாமல் கொஞ்சம் மாற்றி யோசித்தால் தேசம் நன்மை அடையும்.

தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாக்கு உரிமை குறித்த விழிப்புணர்வு இந்திய மக்களுக்கு என்பதே உண்மை. அவற்றின் பயன்களை எல்லாம் முழுவதும் மக்களுக்கு தெரியாதபடி பொழப்பு நடத்துவதில் தான் அரசியல்வாதிகளின் திறமை இருக்கிறது. இனி வரும் தலைமுறை இதே போல் செயல்படாமல் கொஞ்சம் மாற்றி யோசித்தால் தேசம் நன்மை அடையும். மீம்ஸ்கள், கட்டுரைகள், கார்டூன்கள் மூலமாக இன்றைய இளைஞர்கள் அரசியல் பேசுவது நம்பிக்கைக்கு உரிய விசியம் என்றாலும் அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவது அதைவிட அவசியம்.

Related Articles

உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை ... உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.சாம்சங் நிறுவனத்தி...
கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! ... காதலா காதலாஇயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்நடிகர்கள்: கமல், பிரபுதேவா(ஓவியர்), ரம்பா & சௌந்தர்யா(ஓவியக்கல்லூரி மாணவிகள்)கதை: ஒரு பொய் பல...
பேரன்பு பேராபத்தானதா? காதல் கொண்டேன் வின... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் காதல் கொண்டேன் வினோத் கதாபாத்திரம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதை பற்றி பேசிக்கொண்டே இருப்போம். தன...
மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச ... மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் கா...

Be the first to comment on "எம்எல்ஏக்கள் என்ன விலை? வாக்களித்தவனுக்கு என்றுமே நடுத்தெரு தானா?"

Leave a comment

Your email address will not be published.


*