நான்கு மாதங்கள் கோமாவில் இருந்த பெண், பாப் பாடல் கேட்டு எழுந்தமர்ந்த அதிசயம்

இசை ஒரு சிகிச்சை சக்தி என்பதை வாழ்வின் பல தருணங்களில் நாம் உணர்ந்தே வந்திருப்போம். நம்மை அழவைப்பது முதல் தூங்கவைப்பது வரை இசை நம்மை தன்வயப்படுத்தி இருக்கிறது. இதையெல்லாம் விஞ்சும் விதமாக ஒரு நிகழ்வு சீனாவில் நடந்திருக்கிறது. நான்கு மாதங்கள் கோமாவில் இருந்த 24 வயது சீன பெண் ஒருவர், தைவான் பாப் நட்சத்திரம் ஜே சௌவ்(Jay Chou) பாடிய பாடலை கேட்டு கோமாவில் இருந்து கண் விழித்திருக்கிறார்.

 

ரோஸ்மேரி நிகழ்த்திக்காட்டிய அதிசயம்

ஆக்சிஜன் செல்லாத காரணத்தால் மூளை குறைபாட்டுடன் நான்கு மாதங்கள் கோமாவில் இருந்தார் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர். அந்தப் பெண்ணின் அருகில் இருந்து அவரைப் பார்த்துக்கொண்ட ஆண் தாதி, தொடர்ந்து அவரைக் குணப்படுத்தும் வகையில் நகைச்சுவையாகப் பேசுவது, பொழுதுபோக்கு செய்திகளை வாசித்துக் காட்டுவது மற்றும் அவருக்கு பிடித்தமான பாடல்களை இசைக்கச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

தைவான் பாப் நட்சத்திரம் ஜே சௌவ் பாடிய பாடல்களை இசைக்கச்செய்த போது அவரிடத்தில் அசைவுகளைக் காண நேர்ந்தது. அதனால் ஜே சௌவ் பாடிய பாடல்களைத் தொடர்ந்து இசைக்கச்செய்ய முடிவுசெய்தேன் என்று குறிப்பிடுகிறார் தாதி.

ஜே சௌவ் பாடிய பாடல்களைக் கேட்டு அசையும் கோமா பெண்ணைப் பார்த்து மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். தொடர்ந்து பாடல்கள் கேட்ட அவர் மெல்ல மெல்லத் தனது நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்தார். கடந்த மார்ச் மாதம் முழுவதுமாக குணமடைந்த அவர் கண்விழித்தபோது 2006 ஆம் வெளிவந்த , ஜே சௌவ் பாடிய மிகப் பிரபலமான ரோஸ்மேரி பாடல் பாடிக்கொண்டிருந்தது.

அவர் கண்விழித்ததும், கை கால்களை அசைப்பது, விரலால் சுட்டுவது போன்ற எளிய அறிவுறுத்தல்களைப் பிழையின்றி செய்து முடித்திருக்கிறார்.

தகவல் அறிந்து அவரது படுக்கைக்கு மருத்துவர்கள் விரைந்து வந்த போது ரோஸ்மேரி பாடலை தாதி அவருக்குப் பாடி காட்டியிருக்கிறார். தாதி ‘நான் எப்படிப் பாடுகிறேன்’ என்று கேட்டபோது, அவர் பரவாயில்லை’ என்று பதிலளித்தாராம்.

Related Articles

பூனை நம்மை கடித்து விட்டால் உடனடியாக நாம... ஏதாவது ஒரு விலங்கினை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது உலகம் முழுக்க உள்ள மனிதர்களின் நற்பண்பாக இருக்கிறது. அந்த வகையில் மனிதர்கள் நாய்களை பூனைகளை ...
“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்தத... பிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம்? எங்க படிக்க வைக்கலாம்? என்ற கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ...
தமிழ் சினிமாவும் பறவைகளும்! – தமிழ... தமிழ் சினிமாவில் இதுவரை, "பறவைகளை" இரண்டு காதலர்கள் கைகோர்த்துக்கொண்டு  ஓடித்திரியும் காட்சிக்கு உவமையாக காட்டியிருக்கிறார்கள்.   நாயகிகள் கிளி, புறா,...
ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...

Be the first to comment on "நான்கு மாதங்கள் கோமாவில் இருந்த பெண், பாப் பாடல் கேட்டு எழுந்தமர்ந்த அதிசயம்"

Leave a comment

Your email address will not be published.


*