மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தினம்! ஊடக சுதந்திரத்தில் 138வது இடத்தில் இந்தியா!

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் ஏன்?

மனித உரிமைகள் சாசனம் பகுதி பத்தொன்பதில் உள்ள பேச்சு உரிமை மற்றும் கருத்து உரிமை ஆகியவற்றை நினைவூட்ட 1993 ம் ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகள் சபையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் தேதி உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப் படும் என்று அறிவித்தது.

 

தேசிய சுதந்திர தினம்

இந்தியாவில் பிரஸ் கவுன்சில் இந்தியா கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது.

 

இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எப்படி?

மிக மோசமான நிலைமையில் உள்ளது என்றே சொல்லலாம். சமீபத்தில் 2018ம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திரப் பட்டியலை ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் வெளியிட்டிருக்கிறது. அதில் உலகின் நூற்று எண்பது நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா நூற்றி முப்பத்தி எட்டாவது இடத்தில் இருக்கிறது. 2017ம் ஆண்டில் நூற்றி முப்பத்தி ஐந்தாவது இடத்தில் இருந்து இந்த ஆண்டு மூன்று இடங்கள் பின்னுக்குச் சென்று உள்ளது. ஊடக சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை நார்வே பிடித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஸ்வீடன், நெதர்லாந்து, பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜமாய்க்கா, பெல்ஜியம், நியூசிலாந்து, டென்மார்க், கோஸ்டாரிக்கா போன்ற நாடுகள்  அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து இருக்கின்றன. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 139வது இடத்திலும் வங்க தேசம் 146வது இடத்திலும், நேபாளம் 106 வது இடத்திலும், சீனா 175 வது இடத்திலும் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.

இவ்வளவு பின் தங்கி இருக்கிறது நம் தேசம்.  கடந்த ஆண்டு மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை படுகொலை செய்து தேசத்தை அதிரச் செய்தது இந்த வன்முறை நிறைந்த தேசம். கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது சர்வதிகார ஆட்சி. பெண் பத்திரிக்கையாளரை பார்த்து ” நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க… உங்க ஸ்பெக்ஸ் நல்லா இருக்கு… ” என்று நக்கல் அடிக்கிறார் அமைச்சர். அமைச்சரை விட ஒரு படி மேலே போய், கன்னத்தை தடவுகிறார் ஆளுநர். பாஜக கட்சியை சேர்ந்தவரோ பெண்கள் தவறான வழியில் தான் பத்திரிக்கையாளர் வேலையை வாங்குகிறார்கள் என்ற பேஸ்புக் பதிவை பதிவிடுகிறிர். அயோக்கிய தனங்கள் நிறைந்த நாட்டில் அயோக்கிய ஊடகங்கள் ஜால்ட்ரா அடித்து நல்ல காசு பார்த்தால் நேர்மையான உண்மையான செய்திகள் எப்படி வெளியே தெரியும். நம் நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம்  என்பது இவ்வளவு தான்.

 

Related Articles

நண்பர்களோடு பார்க்க வேண்டிய படம்! –... இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குனர் கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நட்பே துணை.மீசைய ...
ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
165 தமிழர்கள் என்ன ஆனார்கள்? ஒட்டுமொத்த ... தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? பல்வேறு நாடுகளில் தமிழர்கள், தமிழ் வம்சாவளிகள் முக்கிய பதவியில் இருந்தாலும் அந்நாடுகளில் வாழும் சாமான்யனின் நிலை...
திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இ... முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும் அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில...

Be the first to comment on "மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தினம்! ஊடக சுதந்திரத்தில் 138வது இடத்தில் இந்தியா!"

Leave a comment

Your email address will not be published.


*