ராஜஸ்தானில் புழுதி புயலுக்கு 27 பேர் பலி, 100 பேர் காயம்

ராஜஸ்தான் மாநிலம் அல்வர், பரத்பூர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களை நேற்று (புதன்கிழமை) புழுதி புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் 27 பேர் பலியாகியும், 100 பேர் காயம்பட்டும் இருக்கிறார்கள். மேலும் நூற்றுக்கும் அதிகமான மரங்கள் வேரோடு விழுந்தன. புழுதி புயலுக்கு ஜெய்ப்பூர் மாவட்டமும் தப்பவில்லை. பரத்பூரில் ஒன்பது பேரும், அல்வர் மாவட்டத்தில் மூன்று பேரும் புயலுக்குப் பலியாகி உள்ளனர்.

கரௌலி பகுதியில் உள்ள சுவர் சேதமடைந்ததில் இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் பலத்த காயமடைந்தார். அவர்கள் உடனடியாக ஹிண்டவுன் நகர அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் ஜுன்ஜுனு பகுதியில் உயிர் இழந்திருக்கிறார்கள். தோல்பூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டிருந்ததாக மாவட்ட நிர்வாகம் வருந்தும் விதமாகச் செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

அல்வர் மாவட்டத்தில் தான் மிக அதிகச் சேதம் ஏற்பட்டுள்ளது. புழுதி புயலால் அங்கே மின்சாரம் முழுவதுமாகத் தடை செய்யப்பட்டு இருக்கிறது. அல்வர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ராகேஷ் ஜங்கித் என்பவர் மரம் விழுந்து உயிரிழந்தார். அதே பகுதியை சேர்ந்த மேலும் காயம்பட்ட 20 பேர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

அல்வர் மாவட்டத்தில் மீட்பு பணிகள்

அல்வர் மாவட்ட ஆட்சியர் ராஜன் விஷால் இது குறித்துப் பேசும் போது ‘புழுதி புயலின் தாக்கத்தால் இதுவரை ஐந்து பேர் உயிர் இழந்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் மின்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களைப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும், சேதமடைந்த பகுதிகளை உடனடியாகச் சீர் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.

அல்வர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தவர் மீது மரம் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அதே போன்று காரில் சென்று கொண்டிருந்த மற்ற ஒருவரின் மீதும் மரம் விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல் துறையினர் கார் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அல்வர் நகருக்குச் சிலைகள் வாங்குவதற்காக ஹிண்டவுன் நகரத்தில் இருந்து வந்த மூன்று பேரில், நாற்பத்து ஐந்து வயதான முகேஷ் அகர்வால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அல்வர் – ராம்கர் இடையேயான சாலையில் மரங்கள் விழுந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. பேறொர் பகுதியில் முஸ்கான் என்ற 12 வயது சிறுமி தலையில் இருப்பு தாள் பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது அப்பா தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

பரத்பூர் மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் இறந்திருக்கிறார்கள். தோல்பூர் மாவட்டத்தில் கட்டிடத்தின் கூரை சரிந்து இரண்டு பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அம்பேத்கார் நகரில் புழுதி புயலின் தாக்கத்தால் நான்கு பேர் பலத்த காயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தோல்பூரில் வீட்டின் கழிவுகளில் சிக்கியிருந்த மூன்று பேர் விடுவிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இரு... முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளு...
மூணாறு – தென்னகத்தின் காஷ்மீர்... மூணாறு, கேரள மாநிலத்தில் உள்ள அழகான மலைவாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருக்கும் இடம். மலையேறுதலுக்கும ஒரு அற்புதமான படம். இயற...
ஊரடங்கு நாட்களில் சினிமா பார்த்து பொழுது... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 15, 2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக நாம் எல்லோரும் வீட்டிலயே முடங்கி கிடக்க வேண்...
மோடி ஆட்சிக்குப் பிறகு சுவிஸ் பேங்கில் இ... இந்தச் செய்தி பார்க்கும் போது போலியாக நினைக்கத் தோன்றும். ஆனால் இது உண்மை செய்தி தான். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் பல தரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும...

Be the first to comment on "ராஜஸ்தானில் புழுதி புயலுக்கு 27 பேர் பலி, 100 பேர் காயம்"

Leave a comment

Your email address will not be published.


*