ரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்பாக்கம் கிராம மக்கள் ! – 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது!

ரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்பாக்கம் கிராம மக்கள் ! - 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது!Photo Credit: Malai Malar

பூந்தமல்லி அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் வினு என்ற ரவுடியின் பிறந்தநாள் விழாவிற்காக ஒன்றுகூடிய 120 ரவுடிகளில் 72 பேரை போலீஸ் கொத்தாக கைது செய்துள்ளது.

பூந்தமல்லி மாங்காடு பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் மலையம்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. அதன் அருகே வேலு டிரான்ஸ்போர்ட் என்ற இடத்தில் வினு என்ற பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவிற்காக காரில் ஆயுதம் மற்றும் பூங்கொத்துடன் நூற்றி இருபது ரவுடிகள் ஒன்று திரண்டனர். இந்த தகவலை அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவிக்க அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் தலைமையில் அவர்களை கூண்டோடு பிடிக்கும் பணி தொடங்கியது. அதற்காக அப்பகுதி போலீஸ் மற்றும் மக்களால் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். போலீஸ் வாகனத்தில் வந்தால் அவர்கள் தப்பிச்செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் தனியார் வாகனங்களை எடுத்துக்கொண்டு அவர்களை சுற்றி வளைத்தது. போலீஸ்படையை சற்றும் எதிர்பாராத ரவுடி கும்பல் வண்டலூர் – மீஞ்சூர் பகுதிக்கு இடைப்பட்ட  மலையம்பாக்கம் பகுதி குடியிருப்புக்குள் நுழைந்தனர். வடக்கு மற்றும் தெற்கு மலையம்பாக்கம் பகுதி மக்கள் போலீசாருக்கு துணைபுரியும் வகையில் ரவுடிகளை பிடித்துக்கொடுக்க, துப்பாக்கி முனையில் 72 பேர் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இருப்பினும் 50 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து இணை ஆணையர் சம்பத்குமார் கூறியதாவது, ” கைதான 72 ரவுடிகளில் எட்டு பேர் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த ரவுடிகள். மற்றும் சிலர் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்கள் மீது  என்பிடபிள்யு வழக்கு உள்ளது.  சென்னையில் ஏராளமான ரவுடிகள் உள்ளனர். அவர்களை ஏ,பி,சி என்ற தரத்தில் பிரித்துள்ளோம். மலையாம்பாக்கம் மக்கள் உதவியினால் தான் இவ்வளவு பேரை ஒரே சமயத்தில் பிடிக்க முடிந்தது. மேலும் கைதான ரவுடிகளிடமிருந்து 60 செல்போன், 17 வாள், கத்தி, 3 வீச்சருவாள், 45 இருசக்கர வாகனங்கள், 7 விலையுயர்ந்த கார் மற்றும் 1 ஆட்டோ கைப்பற்றப்பட்டுள்ளது. ” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரே சமயத்தில் இவ்வளவு ரவுடிகளை கூண்டோடு பிடிப்பது என்பது அவ்வளவு சாத்தியமில்லை. மலையம்பாக்கம் கிராம மக்களின் உதவியால் தான் இது சாத்தியம். அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். போலீஸ் உங்கள் நண்பன் என்ற வாசகத்தை சரியாக புரிந்திருக்கிறார்கள் இந்த கிராம மக்கள்.

Related Articles

உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்ட... ஒரு பெண்ணோடு முறையற்ற உறவு வைத்திருந்ததாகச் சந்தேகப்படும் இளைஞர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்ப...
புதிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏகப்பட... ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அரசு வழங்கும் அனைத்து ஆவணங்களிலும் ஏகப்பட்ட பிழைகள். தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதால்...
ஒரே ஒரு தமிழ்படம் (2) தான், ஒட்டுமொத்த த... தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சில படங்களையும் தமிழக அரசியலின் சில தவிர்க்க முடியாத சம்பவங்களையும் கலந்து கட்டி கலாய்த்து தள்ளி இருக்கும் தமிழ்ப்படம...
காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சின... இயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு ...

Be the first to comment on "ரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்பாக்கம் கிராம மக்கள் ! – 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது!"

Leave a comment

Your email address will not be published.


*