கடந்த வெள்ளிக் கிழமை அன்று சந்தோஷ் ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சாரா, வைபவி, யாசிகா ஆனந்த், சந்திரிகா ஆகியோரின் நடிப்பில் வெளி வந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. தமிழ் சினிமா துறையின் ஒன்றரை மாத வேலை நிறுத்ததிற்குப் பிறகு ரஜினியின் காலா படம் தான் மக்கள் கூட்டத்தை திரையரங்கிற்கு அழைத்து வரும் என்று கணித்திருந்த நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற கில்மா படம் ரசிகர்களை வெகுவாக திரையரங்கிற்கு வர வைத்து உள்ளது. சென்னையில் மட்டும் வெளியான மூன்று நாட்களில் ஒரு கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளது. தமிழகம் முழுவதும் பத்து கோடிக்கும்மேல் வசூல் அள்ளியுள்ளது. இன்னமும் வசூல் செய்து கொண்டிருக்கிறது. பெண்களை காமப் பொம்மையாகவும், பெண்களின் அங்கங்களை கொச்சையாக வர்ணிக்கும் வசனங்களையும் கொண்டுள்ள படம் தான் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அப்படி என்றெல் அவர்களின் மனநிலை என்ன?`
அவர்களுடைய இந்த வக்கிர மனநிலைக்கு என்ன காரணம் என்று யோசித்தால் வழக்கம் போல சுற்றி இருக்கும் வக்கிர புத்தி கொண்ட சமூகம் தான் காரணம் என்று தெரிய வருகிறது. நம்ம ஊர்களில் நடக்கும் தெருக்கூத்து, கரகாட்டம், ஆடலும் பாடலும் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்களை இழிவு படுத்தும் செயல்களும், வசனங்களும் காலம் காலமாக ( தாரை தப்பட்டை படத்தின் அண்ணன் தங்கை ஆட்டத்தை நினைவு கொள்ளுங்கள் ) நம் மக்களின் மனதில் படிந்து விட்டது. அதை காலங்காலமாக பெருசுகளும் ஆதரித்து வந்துள்ளது. இவை எல்லாம் வெறும் தெரு அளவில் தான் இருந்தது. இன்று திரையில் தலை விரித்தாடுகிறது. இப்படி ஒட்டு மொத்த சமூகத்தை கெடுக்கும் வகையிலான படங்களை எடுக்கக் கூடாது என்பதற்காக பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ” அந்தக் காலத்தில் சினிமா பார்ப்பதை திருவிழா போல் கொண்டாடினான். பத்து பதினொரு தடவை பார்த்து மகிழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்று இருட்டுல குத்து குத்துனா தான் பாக்கப் போறான் ” என்று சங்கிலி முருகன் தனது ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார். அதே போல இயக்குனர் பாரதிராஜா, பொன்வண்ணன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் தமிழ் சினிமாவை விட்டு விலகப் போகிறேன், தெலுங்கு பக்கம் போகப் போகிறேன் என்று தமிழ் சினிமா நடிகர்கள் சம்பள விவகாரம் குறித்து வருத்தப் பட்டார். அந்தக் கடுப்போ என்னவோ மெட்ராஸ் போன்று அழகான படங்களைத் தந்துவிட்டு இப்போது இப்படிப்பட்ட படத்தைக் கொடுத்து உள்ளார். தப்பு யார் மீது?
Be the first to comment on "இருட்டு அறையில் முரட்டு குத்து படம் போல் இன்னும் நாலு படம் வந்தால் தமிழகத்தின் நிலைமை?"