பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இனக்கவர்ச்சியா?

96 Tamil movie review

96 (Tamil Movie) IMBD Rating – 9.4/10

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 96. காதலே காதலே என்ற பாடல் ஏற்படுத்திய அதிர்வுகளே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனலாம். கடந்த சில வருடங்களில் தமிழில் சொல்லிக்கொள்ளும் படி அழகான காதல் படம் எதுவும் வரவில்லை. ஆகவே வறண்ட நிலத்தில் விழுந்த ஒற்றை மழைத்துளி போல அழகான படமாக 96 ரிலீஸ் ஆகியுள்ளது.

ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் பல வருடங்கள் கழித்து ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அசை போடுகிறார்கள். ராம், ஜானு என்ற இருவரும் தங்கள் கன்னுக்குட்டி காதலை நினைவு கூறுகிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் கதைக்களம் என்பது படம் ரிலீசுக்கு முன்பே தெரிந்த விஷியம்.

கன்னுக்குட்டி காதல் சரியானதா?

இந்த சினிமா தான் பள்ளிப்பருவ மாணவ மாணவிகளை வெகுவாகப் பாதிக்கிறது என்று காலங்காலமாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் சினிமாவை திட்டி வருகிறார்கள். சினிமாவினால் காதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறதா?

96 படம் ரிலீசானதில் இருந்து இந்த விவாதம் எழுந்துள்ளது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கட்டாயமாக கன்னுக்குட்டி இருந்திருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்பது படத்தை பார்த்தவர்களின் கருத்தாக இருக்கிறது. அந்தப் பருவத்தில் வருவது எல்லாம் காதலா?

பள்ளிப்பருவத்தில் வருவது காதல் கிடையாது. அது வெறும் இனக்கவர்ச்சியால் வருகின்ற மிக நெருக்கமான நட்பு மட்டுமே. பள்ளிப்பருவத்தில் காதல், பள்ளிப்பருவத்தில் காதல் என்று மாணவ மாணவிகளை கெடுக்காதீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான  சாதாரண நட்பு கூட பிறகு காதல் என்று தான் தெரியும். பிறகு மாணவ மாணவிகள் ஒன்றாக கூடி படிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்கிறது சமூக ஆர்வலர்கள் தரப்பு.

Director: C. Prem Kumar
Music Director: Govind Menon
Cinematography: N. Shanmuga Sundaram
Editing: R. Govindaraj
Producer: S. Nanthagopal

Related Articles

இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில்... கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள...
தினேஷுக்கு தேசிய விருது கிடைக்குமா? இரண்... தயாரிப்பு : நீலம் புரொடக்சன்ஸ்தயாரிப்பாளர் : இயக்குனர் பா. ரஞ்சித்எழுத்து இயக்கம் : அதியன் ஆதிரைஇசை : டென்மாஒளிப்பதிவு : கிஷோர் குமார்...
பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை ஒரு பார்... பாக்கிய லட்சுமி தனது தோழர் தோழிகளுடன் கடற்கரையில் கூத்தடித்துவிட்டு கார் ஓட்டிச் செல்கிறார். எதிர்பாராதவிதமாக கார் ஆக்சிடன்ட் ஆகிறது. விபத்தின் காரணமா...
இன்று திருப்பூர் குமரன் நினைவு தினம் ... தமிழகத்தின் 32வது மாவட்டமான,  7-வது மிகப்பெரிய நகரமான உழைப்பாளிகள் நிறைந்த திருப்பூருக்கு மேலும் பெருமை சேர்த்த கொடிகாத்த குமரனின் நினைவு தினம் இன்று....

Be the first to comment on "பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இனக்கவர்ச்சியா?"

Leave a comment

Your email address will not be published.


*