ரசிகர்களிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய ராட்ச்சசன்! – ராட்ச்சசன் விமர்சனம்!

Ratsasan tamil movie review

வழக்கம்போல இந்தப் படமும் படுமொக்கையான தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. காரணம் இது அட்டகாசமான திரைப்படம்.

ஒரு சைக்கோ தொடர்ந்து பள்ளி மாணவிகளை கடத்தி போஸ்ட்மார்டம் செய்யும் டாக்டர்களே நடுங்கும்படி கொடூரமாக கொலை செய்கிறான். அவன் ஏன் அப்படி செய்கிறான்? எதற்காக அப்படி செய்கிறான்? என்ற கேள்விகளுக்கு விடை தேடி இறுதியில் அவர்களை பிடித்தார்களா இல்லையா என்பதே ராட்ச்சசன் திரைப்படத்தின் மையக்கதை.

படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை நமக்குள் பதட்டம்… பதட்டம்… பதட்டம்… இந்தப் படத்தை உருவாக்கியதாலோ என்னவோ வில்லன் யார் என்று தெரிந்ததும் அவனை ரசிகர்கள் கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்துவிட்டனர். அதோடு வில்லன் கையில் கிடைத்தபிறகும் அவனை சுடாமல் பம்மி  நிற்கும் காளி வெங்கட்டையும், பிரச்சினை தலைக்கு மேல் போய்க்கொண்டிருக்கும் வேளையில் தன் பிள்ளையிடம் போனில் கொஞ்சி குலாவும் நாயகனுக்கு வாய்த்த ஈகோ பிடித்த பெண் உயர் அதிகாரியையும் ரசிகர்கள் வெளுத்து வாங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு எதிரியின் கதாபாத்திரம் அச்சத்தை உண்டாக்கும் வகையில் எழுதப் பட்டிருக்கிறது.

படத்தின் இன்னொரு பலம் பின்னணி இசை. ஒரு பேய் படத்திற்கு தரும் இசையை தந்து ரசிகர்களின் பிபியை மேலும் எகிறச் செய்கிறார். அமலாபால் பாத்திரம் அறிந்து போதுமான அளவிற்கு நடித்திருக்கிறார். முனிஸ்காந்த் காமெடியனாக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். அதிலும் தன் மகளை இழந்தபிறகு அவர் கொடுக்கும் ரியாக்சன்கள் அல்டிமேட்.

விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் இது முக்கியமான படம். இயக்குனராக முயற்சிக்கும் இடத்திலும், குடும்ப சூழல் காரணமாக எஸ்ஐ வேலைக்குச் சேர்ந்து அவமானம் படும் இடத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிறிஸ்டோபராக வந்தவரின் உடல்மொழியும், இன்பராஜாக வந்தவரின் நடிப்பும் மிரட்டல்!

கட்டாயமாக தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்! 17 ஹீரோக்களின் நிராகரிப்பு, இயக்குனரின் நான்கு வருட காத்திருப்பு என்று இயக்குனரின் பெருவலியை சுமந்து வந்த இந்தப் படத்தை ரசிகர்கள் நிச்சயம் தியேட்டரில் கண்டுகளிக்க வேண்டும்.

படம் பார்க்கும்போது எழுந்த சில கேள்விகள்:

  1. படத்தின் டீடெய்லிங் அற்புதமாக இருந்த போதிலும் ரீசனிங் சரியாக அமையவில்லை என்று தோன்றுகிறது.
  2. கிறிஸ்டோபரை அனைவரும் மொட்ட மொட்ட என்று கூறியது தெரியாமல் அடுத்தநாள் தாமாக முன் வந்து மன்னிப்பு கேட்கும் மாணவியை கொன்றுவிடு என்று ஒரு தாய் சொல்வாளா? அமிதாப்பின் பா படத்தில் வருவது போல் இளம் வயதிலயே முதியவன் போல் தோற்றமளிக்கும் நபர்கள் தங்களை கேலி கிண்டல் செய்தால் இப்படி மாறிவிடுவார்கள் என்று சொல்வது போல் இருக்கிறது.
  3. வாட்சப், பேஸ்புக் போன்றவை வந்த பின்னும் போன் பேசும்போது வாய்ஸ் பிரேக்காகும் சீன்களை வைக்க வேண்டுமா? உடனே சொல்லியாக வேண்டும் என்ற விஷியத்தை போன் காலில் பேசமுடியவில்லை என்றால் உடனே மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்தி இருக்கலாமே.

Related Articles

ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் ச... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சம்ரதா கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. தடபுடலான சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் நிறைந்த அந்தத் திருமணத்தில் பக்...
ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்... சட்ட சபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்த காலத்திலிருந்தே அது குறித்து பல்வேறு விவாதங்கள் க...
கணவர்கள் பார்க்க வேண்டிய படம்! – க... நடிகர் நடிகைகள் : பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீட்டல்இயக்கம் : ஸ்ரீ செந்தில்இசை : விஷால் சந்திரசேகர்ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா ...
ஸ்கெட்ச் – சினிமா விமர்சனம்... தயாரிப்பு: வி கிரியேசன்ஸ், மூவிங் பிரேம்ஸ் எழுத்து இயக்கம்: விஜய் சந்தர் இசை: தமன் ஒளிப்பதிவு: எம். சுகுமார் நடிகர்கள்: விக்ரம், தமன்னா,... தமிழக...

Be the first to comment on "ரசிகர்களிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய ராட்ச்சசன்! – ராட்ச்சசன் விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*