96 (Tamil Movie) IMBD Rating – 9.4/10
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 96. காதலே காதலே என்ற பாடல் ஏற்படுத்திய அதிர்வுகளே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனலாம். கடந்த சில வருடங்களில் தமிழில் சொல்லிக்கொள்ளும் படி அழகான காதல் படம் எதுவும் வரவில்லை. ஆகவே வறண்ட நிலத்தில் விழுந்த ஒற்றை மழைத்துளி போல அழகான படமாக 96 ரிலீஸ் ஆகியுள்ளது.
ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் பல வருடங்கள் கழித்து ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அசை போடுகிறார்கள். ராம், ஜானு என்ற இருவரும் தங்கள் கன்னுக்குட்டி காதலை நினைவு கூறுகிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் கதைக்களம் என்பது படம் ரிலீசுக்கு முன்பே தெரிந்த விஷியம்.
கன்னுக்குட்டி காதல் சரியானதா?
இந்த சினிமா தான் பள்ளிப்பருவ மாணவ மாணவிகளை வெகுவாகப் பாதிக்கிறது என்று காலங்காலமாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் சினிமாவை திட்டி வருகிறார்கள். சினிமாவினால் காதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறதா?
96 படம் ரிலீசானதில் இருந்து இந்த விவாதம் எழுந்துள்ளது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கட்டாயமாக கன்னுக்குட்டி இருந்திருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்பது படத்தை பார்த்தவர்களின் கருத்தாக இருக்கிறது. அந்தப் பருவத்தில் வருவது எல்லாம் காதலா?
பள்ளிப்பருவத்தில் வருவது காதல் கிடையாது. அது வெறும் இனக்கவர்ச்சியால் வருகின்ற மிக நெருக்கமான நட்பு மட்டுமே. பள்ளிப்பருவத்தில் காதல், பள்ளிப்பருவத்தில் காதல் என்று மாணவ மாணவிகளை கெடுக்காதீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சாதாரண நட்பு கூட பிறகு காதல் என்று தான் தெரியும். பிறகு மாணவ மாணவிகள் ஒன்றாக கூடி படிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்கிறது சமூக ஆர்வலர்கள் தரப்பு.
Director: C. Prem Kumar
Music Director: Govind Menon
Cinematography: N. Shanmuga Sundaram
Editing: R. Govindaraj
Producer: S. Nanthagopal
Be the first to comment on "பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இனக்கவர்ச்சியா?"