மூக்குத்தி அம்மன் திரைப்படம் கற்றுத்தந்த நான்கு நல்ல பாடங்கள்!

ஆர் ஜே பாலாஜி யின் இயக்கத்தில் நடிப்பில் உருவான இரண்டாவது படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய பணக்காரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரிளிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சாமானிய மக்களுக்காக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பல சர்ச்சைகளை சந்தித்தது மறுக்க முடியாத உண்மை. 

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா: 

நயன்தாரா நிஜ வாழ்க்கையில் ஒழுக்கம் அற்றவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு போய் அம்மன் கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்றும் சிலர் வருந்தினார்கள்.  ஏற்கனவே நயன்தாரா ஒரு தெலுங்கு படத்தில் சீதையாக நடித்து இருந்ததற்காக நயன்தாரா ஒழுக்கமற்றவர் என்று நிறைய பேர் விமர்சித்திருக்கிறார்கள். அவருக்குப் போய் சீதை கதாபாத்திரம் கொடுக்கிறார்களே என்று திட்டினார்கள்.  அப்படி என்ன நயன்தாரா ஒழுக்கமற்ற ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. முதலில் சிம்புவை காதலித்தார்… பிறகு பிரபுதேவாவை காதலித்தார்… இப்போது விக்னேஷ் சிவனுடன் வாழ்ந்து வருகிறார்… இதில் தவறு என்ன இருக்கிறது  காதலர்கள் சரியில்லை என்றால் அவர்களிடம் இருந்து விலகி வந்து தனக்கு பிடித்த ஒரு ஆணுடன் வாழ்வு வாழ்வது இந்த சமூகத்தில் எப்படி தவறு என்று நாம் சொல்லலாம். காதல் ஒரே ஒருமுறை மட்டும் தான் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் வரும் என்பது முற்றிலும் பொய் என்பதை அட்டகத்தி படத்தில் அழகாக சொல்லி இருப்பார்கள். பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கையில் 16 பெண்களை காதலித்து உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு ஆண் இந்த சமூகத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்று இருக்கும் போது ஒரு பெண் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்பதை ஏன் மனம் விரும்புவதில்லை. காதலித்த நபர்களிடம் இருந்து பணத்தை கறந்து இருந்தால் அவற்றை தவறு என சொல்லலாம். ஆனால் உச்சகட்ட புகழில் இருக்கும் நயன்தாரா மற்றவரை நம்பி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து வருடங்கள் ஒரு நடிகை மார்க்கெட் இழக்காமல் இருப்பதே பெரிய விஷயம் என்ற இந்த சமூகத்தில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக ஒரு நடிகை மார்க்கெட் இழக்காமல் இருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். 

நயன்தாராவை விட்டுவிடுங்கள். அதை (அவருடைய காதல் விவகாரத்தை) பேசினால் பேசிக்கொண்டே போகலாம். இப்போது மூக்குத்தி அம்மன் திரைப்படம் கற்றுத்தந்த பாடங்களைப் பற்றி பார்ப்போம். 

பாடம் 1: 

மூக்குத்தி அம்மன் திரைப்படம் முதலில் கற்றுத் தந்த நல்ல விஷயம் எதுவென்றால் அம்மாக்கள் பொய் பேசக்கூடாது என்பது.  இந்த படத்தைப் பொருத்தவரை இதில் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி சரளமாக… கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் குற்ற உணர்வு இல்லாமல் பொய் பேசும் ஒரு அம்மாவாக நடித்து இருப்பார். வாய தொறந்தா பொய்தான் பொய்யை தவிர வேறு எதுவும் பேச மாட்டார் என்பது போல காட்சிகள் இருக்கும். அதனை அவருடைய மகனாக நடித்திருக்கும் ஆர் ஜே பாலாஜி அடிக்கடி கண்டித்துக் கொண்டே இருப்பார். 

 இன்றைக்கு நிறைய விவாகரத்துகள் நடைபெறும் முக்கிய காரணமாக இருப்பது இந்த அம்மாக்கள் கூறும் பொய்கள் தான். திருமணத்திற்கு முன்பு நிறைய பொய்களைச் சொல்லி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். திருமணம் செய்து வைத்துவிட்டால் அதோடு அவர்களுடைய கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.  ஆனால் இந்தப் பொய்கள் தான் பின்னாட்களில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து ஒரு குடும்பத்தை சிதைக்கிறது. ஆகவே இந்திய அம்மாக்கள் தன் மகனுக்கு பெண் பார்க்க செல்வதற்கு முன் பொய் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் எடுத்துக்கொள்வதில் பல உயிர்களை காப்பாற்றும். 

பாடம் 2: 

இந்த படம் அடுத்ததாக கற்றுத்தந்த பாடம் எது என்று கேட்டால் அது குடும்பஸ்தன் ஒருவன் சந்நியாசம் போகக்கூடாது என்பதுதான்.  இந்த படத்தில்   நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட ஒரு ஆண் குடும்பம் இனி எனக்கு வேண்டாம் குடும்பம் மிகுந்த மன உளைச்சலை தருகிறது இல்லற வாழ்வே வேண்டாமென்று வெறுத்து சன்னியாசம் சென்று விடுகிறான். தன் மகன் தன்னை பார்த்துக் கொள்ளாமல் தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளாமல் சன்னியாசம் சென்று விட்டான் என்பதை நினைத்து அவருடைய அப்பாவே வருந்துவதுபோல் காட்சிகள் இருக்கும். தன் மகனுக்கு பதிலாக தான் பொறுப்பேற்று தன் மருமகள் பேத்திகள் பேரன்கள் ஆகியோரை பார்த்துக்கொள்வார் அந்த அப்பா. சன்னியாசம் செல்லும் ஐடியாவில் இருக்கும் ஆண்கள் எதற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாக கேள்வி கேட்பார்கள் இந்த படத்தில்.  சன்னியாசம் சென்றவரின் மகனாக நடித்திருக்கும் ஆர் ஜே பாலாஜி பல வருடங்களுக்கு பிறகு தன் அப்பாவை ஒரு சாமியார் மடத்தில் பார்க்கிறார். அப்பாவை தன் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். நீங்கள் இல்லாமல் நாங்கள் எவ்வளவு கஷ்டப் பட்டோம் தெரியுமா என்று தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் சொல்லி வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால் வீட்டிற்கு அழைக்கும் தன் மகனை சன்னியாசம் சென்ற அந்த அப்பா எல்லோரும் முன்பும் மிக கேவலமாக அசிங்கப்படுத்தி அனுப்புவார். மகன் கூப்பிட்டு வரவில்லை என்பதை தெரிந்து தாயாக நடித்த ஊர்வசி    சன்னியாசம் சென்ற தன் கணவனை முதலில் கோபத்தில் திட்டுவார். பிறகு அதை உணர்ந்து மன்னிப்பு கேட்டு தன்னுடன் வீட்டுக்கு வந்து விடுமாறு கெஞ்சுவார். நீ வீட்டுக்கு வந்து விட்டால் நான் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன் பழசு எல்லாம் சொல்லி சொல்லி காட்டிக் கொண்டு இருக்க மாட்டேன் என்றும் சொல்கிறார். அப்போதும் அந்த அப்பா வீட்டிற்கு வர மறுக்கிறார். 

பாடம் 3: 

இந்த படம் கற்று தந்த இன்னொரு பாடம் என்னவென்றால் அது யாருடைய கல்வியையும் பாதியில் நிறுத்த கூடாது என்பதுதான்.   இந்த படத்தில் பெண் குழந்தைகளில் மூத்த பெண் குழந்தையாக நடித்திருக்கும் அதாவது ஆர் ஜே பாலாஜியின் மூத்த சகோதரியாக நடித்திருக்கும் பெண் தன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருப்பார். அவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்பத்திற்காக ஓயாமல் வேலை செய்யும் ஒரு அடிமை போல வளர்ந்து கொண்டிருப்பார்.  கடவுளே நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறார் உனக்கு என்ன வரம் வேண்டுமோ அதை கேள் என்று ஆர் ஜே பாலாஜி தன் தங்கையிடம் கேட்கும்போது தங்கை அதற்கு பதிலாக எனக்கு ஒரே ஒரு நாள் இந்த வீட்டு வேலைகளிலிருந்து லீவு வேண்டும் என்று சொல்வார். அந்த காட்சியை பார்க்கும் போது நமக்கு மனம் உறுத்த செய்கிறது.  2021லும் கூட நிறைய பெண்கள் பெண் குழந்தைகளை உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த பெண் குழந்தைகள் வளர்ந்து வீட்டு வேலைகள் செய்வதற்கு தனக்கு உதவியாக இருப்பார்கள் என்பதற்காகவே அவர்களை கள்ளிப்பால் ஊற்றி கொள்ளாமல் உயிருடன் வைத்திருக்கிறார்கள். 

பாடம் 4: 

 அடுத்ததாக இந்த படம் கற்றுத்தந்த மிக முக்கியமான பாடம் என்றால் அது உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். உழைப்பு இல்லாமல் வரக்கூடிய செல்வம் கடவுளாகவே கொடுத்தது என்றாக இருந்தாலும் கூட அது நம் கையில் நிலையாக இருக்காது என்ற மிக அற்புதமான பாடத்தை இந்த படம் சொல்லித் தந்திருக்கிறது.  பேராசை கூடாது அப்படியே நம் பேராசை கொண்டு இருந்தாலும் அந்த ஆசைக்கு தகுந்தது போல் உழைப்பை கொட்ட வேண்டும். அவ்வாறு உழைக்காமல் பேராசை மட்டும் வைத்திருந்தால் அது நம்முடைய மனதை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்பதை இந்தப்படம் சொல்லியிருக்கிறது… 

Related Articles

#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்... நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி ...
புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்... வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உ...
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பற்றிய சில ச... காமராஜ் - ஈஸ்வரி என்ற தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தார். தாய் தந்தை இருவரும் யூனியன் டிஸ்பென்ஸரியில் நர்சிங் அசிஸ்டென்டாக வேலை பார்த்தவர்கள்....
தோழர் வெங்கடேசனை மிஸ் பண்ணாதீங்க! –... போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று பஸ்ஸை காணோம் என்று புகார் தருகிறார் நாயகன். பிளாஸ்பேக் விரிகிறது. லட்சுமி சோடா பேக்டரி நடத்தி வரும் முதலாளி நாயகனின் கதை ச...

Be the first to comment on "மூக்குத்தி அம்மன் திரைப்படம் கற்றுத்தந்த நான்கு நல்ல பாடங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*