படம் ரிலீசாகும் வரை ரஜினி பேட்டி கொடுக்க மாட்டார்! – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

படம் ரிலீசாகும் வரை ரஜினி பேட்டி கொடுக்க மாட்டார்! - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

காலா படம் நல்ல விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் வசூலில் சறுக்கியது. காரணம் கபாலி தந்த எபெக்ட் அப்படி. அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு எக்கச்சக்க ப்ரோமசன் செய்து மிரட்டிவிட கபாலிக்காக பலத்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ரசிகர்கள். அந்த பலமான எதிர்பார்ப்பே, ” படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை ” என்று படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வர காரணமாக அமைந்துவிட்டது.

ஓவர் ப்ரோமசன் செய்ய வேண்டாம் என்று காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அடக்கிவாசிக்க எல்லாம் சரியாகப் போய்க்கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் தூத்துக்குடி சம்பவம் குறித்து பேட்டி ஒன்று அளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்படி அவர் அளித்த பேட்டியில், ” சமூக விரோதி ” என்ற வார்த்தை அந்தப் படத்தின் தலையெழுத்தையே அடியோடு மாற்றியது. படத்தில் ஆதிக்க அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் நேர்மையான போராளியாக நடித்திருந்தும் படம் சறுக்கலை சந்தித்து.

தற்போது மீண்டும் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வாரோ என்று அவருடைய நலம் விரும்பிகள் பயந்து கிடக்கின்றனர். காரணம் அவருடைய சமீபத்திய பேட்டி அப்படி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டி அவர் மீதான நன்மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது என்றால் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன் ரிலீசான ஏழு பேர் குறித்து சமீபத்தில்  எழுப்பபட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் மீண்டும் அவரை சறுக்கல் பாதையில் நிறுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து ரஜினியை மீம் கிரியேட்டர்களும் செய்தி ஊடகங்களின் சில நிகழ்ச்சிகளும் கலாய்த்து தள்ள… இன்னும் சிலர் தயவுசெய்து 2.O ரிலீசாகும் வரை ரஜினி அரசியல் குறித்து பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

கிண்டல் ஒருபக்கம் இருக்க பலருடைய உழைப்பை சுமந்து வரும் 2. O படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டது. இயக்குனர் ஷங்கரின் நான்கு வருட உழைப்பு, ஐநூறு ரூபாய் பட்ஜெட் என்று மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் ரஜினியின் அரசியல் பயணத்தால் ஏற்கனவே யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் அரசியல் குறித்து பேட்டி அளித்தால் மக்கள் ரஜினியின் அரசியலைப் பற்றித்தான் பேசுவார்களே தவிர ஐநூறு கோடி ரூபாய் படத்தைப் பற்றி பேசமாட்டார்கள் என்று வருந்துகின்றனர் ரஜினியின் நலம் விரும்பிகள். அதே சமயம் நெட்டிசன்கள் படம் ரிலீசாகும் வரை நான் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று அவருடைய படத்தை வைத்து மீம் போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஆபாச நிகழ்ச்சிகளை விட விஷாலின் ” ... தற்போதைய தமிழ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் தடைசெய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டால் அவற்றில் சன் டிவியின் சன் நாம் ஒருவர் ...
உடலெனும் வெளி! – உருவ கேலி செய்யும... இந்த சமூத்திற்கு எந்த விஷயங்கள் மிக முக்கியமாக தேவைப்படுகிறதோ அந்த விஷயங்களை தான் இந்த சமூகம் புறக்கணித்து தள்ளும், குழி பறித்து புதைக்கும். திடீரென அ...
“ஏழைப் பெண்களுக்கு எல்லாம் கனவு கா... கனவு" என்ற ஒரு வார்த்தை பலவிதமான அர்த்தங்களை, விளக்கங்களை தருகிறது. கனவில் பேய் வருவது, கனவில் பாம்பு கடிப்பது, நாய் துரத்துவது, வெள்ளை உருவம் வந்து க...
நோட்டு கொடுக்கலனா நோட்டாவுக்குத் தான் ஓட... அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்... தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?...

Be the first to comment on "படம் ரிலீசாகும் வரை ரஜினி பேட்டி கொடுக்க மாட்டார்! – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*