இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பலர் வெளி மாநிலங்கள் சென்று தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளனர். உச்ச நீதி மன்றமும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தேர்வு அறைக்கு செல்லும் முன் பரிசோதனை என்ற பெயரில் மாணவ மாணவிகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கினர். இந்த வருடம் வேறு ஒரு உருவில் மாணவ மாணவிகளுக்கு மன அழுத்தம். ஆக மொத்தத்தில் டென்சன் தான்.
இது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேவை அற்ற பதற்றத்தையே உண்டாக்கும். மருத்துவ சீட் வாங்க வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுதி தான் ஆக வேண்டும் என்று உறுதி ஆன பிறகு, தமிழகத்தில் தேர்வு நடத்தப் படும் மையங்கள் அதிகப் படுத்தி இருக்க வேண்டும். அதை செய்ய தவறி விட்டது தமிழக அரசு. தேர்வுக்கு ஆன விண்ணப்பங்கள் இணைய தளங்களில் வெளி ஆனதும் உடனே பயிற்சி மையங்கள் செல்லும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் டக் டக் என்று தேர்வுக்கு விண்ணப்பித்து விட அருகே இருக்கும் தேர்வு மையங்கள் எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகளால் நிரம்பிக் கொண்டது. விண்ணப்பிக்க கையில் காசு இல்லாமல், விண்ணப்பிக்க தெரியாமல், கம்யூட்டர் சென்டர்களின் உதவியை நாடி கடைசி நாளில் விண்ணப்பித்தவர்களுக்கு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மையங்களில் தேர்வு எழுதும் படி அமைந்து உள்ளது.
இதனால் பாதிக்கப் படுவது வழக்கம் போல ஏழை மாணவ மாணவிகள் தான். அதுவும் அவர்கள் எழுத இருக்கும் தேர்வு மையங்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் கொண்டவை. அந்த மையங்கள் இருக்கும் ஊருக்குச் செல்லவே நாட்கள் கணக்கில் ஆகும். அங்கு சென்ற பிறகு, அந்த மையத்தை தேடி அலைந்து திரிய வேண்டும். அங்கு சென்ற பிறகு தங்குவதற்கு அக்காமடேசன் இருக்கிறதோ என்னவோ, வெளியே தங்கிக் கொள்ளும் படி இருந்துவிட்டால் அவ்வளவு தான். அடிக்கற வெயிலுக்கு அந்த பதற்றமான அலைச்சல் உடலை கலங்க அடித்து விடும். பாவம் அந்த சூழலை சமாளிக்க எவ்வளவு பணம் கரைய போகிறதோ? இவை எல்லாம் கிட்டத் தட்ட விரயச் செலவு தான். அரசின் சரியான திட்டமிடலே காரணம். அவர்களின் அலட்சியம் மக்களுக்கு எவ்வளவு சிரமத்தை உண்டாக்குகிறது.
உண்மையை சொல்லப் போனால் இந்தத் தலைமுறை மாணவ மாணவிகள் ரொம்பவே பாவம். சக மனிதனாய் பரிதாபம் கொள்ள மட்டுமே முடிகிறது. ஓட்டு போட்டவனின் நிலை கையறு நிலையாக இருக்கிறது என்று சமூக வலை தளங்களில் மீம்ஸ்கள் பரவி வருகிறது.
Be the first to comment on "தமிழக மாணவர்கள் வெளி மாநிலம் சென்று தான் நீட் தேர்வு எழுத வேண்டுமா?"