இன்றைய தண்ணீர் விலை? – லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு?

cost of water per litre in today's date

மனிதர்களாகிய நாம், தனது சுயநலத்துக்காக இயற்கையை கொன்று வருவதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தண்ணீர் விலை? லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விட்டோம். பல நிறுவனங்கள் தண்ணீரை பாட்டிலில் அடைத்து அதை செயலாக நிறைவேற்றீயும் வருகிறார்கள். பேருந்து நிலையங்களில் விற்கும் பத்து ரூபா அம்மா வாட்டர் கேன், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், ஒயின் ஷாப்புகள் என்று பல இடங்களில் விற்றுத் தீர்க்கும் தண்ணீர் பாட்டில்கள் மிகுந்த தீங்கு விளைவிக்க கூடியவை.

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை குளிர் பானங்களை ஆரோக்கியமானது என்று நம்பி காசு கொடுத்து வாங்கி அருந்துகிறோம். ஆனால் அப்படிபட்ட பாட்டில் தண்ணீரில் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அளவு பிளாஸ்டிக்குகள் மிதக்கின்றன ஆய்வுகள் பல சொல்கிறது. எல்லா நாடுகளிலும் ஆண்டுக்கு மூவாயிரம் லட்சம் டன் பிளாஸ்டிக் உற்பத்தி ஆகிறது என்று ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவு மதிப்பிட்டுள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிப்போம் கிழிப்போம் என்று பல விதமான வசனங்கள் பேசிய வண்ணம் இருக்கிறதே தவிர எந்த நாடும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கவில்லை என்பதே உண்மை. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எனப்படும் ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைந்த அளவு உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் தொழிலகங்களில் உற்பத்தி ஆகிறது. தரையைச் சுத்தம் செய்யும் ஸ்கிரப்பர்களிலும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப் படுகிறது. நாம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக்குகள் நுண்ணிய துகள்களாக உடைந்து காற்று, நிலம், நீர் என்று அனைத்திலும் கலந்து உள்ளது. துணிகளை துவைக்கும் போதும் நுண்ணிய துகள்களாக உடைந்து போன பிளாஸ்டிக் கடல் போன்ற பெரிய நீர் நிலைகளிலும் கலந்து உள்ளது.

குடிநீரில் உள்ள பாலிபுரோபிலின், பாலி எத்திலின் டெரப்தலேட் மற்றும் மற்ற ரசாயனங்கள் உணவுகள், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றிலும் கலப்பதால் நஞ்சாக மாறி வருகிறது. இவை எல்லாம் நோய்த்தடுப்பு ஆற்றலை வெகுவாக குறைக்கிறது.

எங்கெங்கு பரிசோதனை நடந்தது?

வாஷிங்டனில் இருந்து செயல்பட்டு வரும் ஓ ஆர் பி என்கிற ஊடக நிறுவனம் இந்தியா, சைனா, இந்தோனிசியா, கென்யா, லெபனான், தாய்லாந்து, மெக்சிகோ, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒன்பது நாடுகளில் தண்ணீர் விற்பனை செய்யும் பண்ணிரெண்டு முன்னணி குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் இருநூறுக்கும் மேற்பட்ட பாட்டில் குடிநீர்களை நியூயார்க்கில் உள்ள பெரிடோனியா பல்கலைக்கழகத்தின் முன்னணி மைக்ரோ பிளாஸ்டிக் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஷெரி மேசன் தலைமையில் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அவருடைய ஆராய்ச்சியின் முடிவுகள் ஒரு லிட்டர் பாட்டிலில் நூறு மைக்ரான் அளவை விட பெரிதாக உள்ள பிளாஸ்டிக் துகள்கள் பத்துக்கும் மேலும், 6.5 முதல் 100 மைக்ரான் அளவு உள்ள 334 துகள்கள்களும் மற்றொரு பாட்டிலில் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட துகள்களும் கலந்து இருப்பது தெரிய வந்து உள்ளது. ஆக மொத்ததில் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட, இருநூறுக்கும்மேற்பட்ட பாட்டில் குடிநீரில் 93% பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் 2.1 பில்லியன் மக்கள் பாட்டில் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். எல்லோரும் கேன்சர், ஆண்மைக் குறைவு, மலட்டுத் தன்மை நோயுடன் சுற்றித் திரிகிறார்கள்.

இத்தனைக்கும் காரணம் வெட்டிக் கௌரவம், படித்த திமிரு. அன்றைக்கு மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தான். இன்றைக்கு செல்போன் யுகத்தில் செல்பி எடுத்துக் கொண்டு செயற்கையாக வாழ்ந்து வருகிறான். அப்படி இருக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் நடப்பது சகஜம் தான். ஆற்றில், கிணற்றில் நீர் எடுத்து மண் பானையிலும் செப்புக் குடத்திலும் வைத்து வேண்டிய போது எடுத்துக் குடித்தான். இன்று நிலைமை அப்படியே தலை கீழாக உள்ளது.

ஆற்று தண்ணீர் பைப் இருந்த இடங்கள் இன்று காணாமலே போய்விட்டது. அண்டாக்கள் இருந்த வீடுகளில் வாட்டர் கேன்கள். சொம்பு இருந்த இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள். இன்னும் ஒரு சில வீடுகளில் வாட்டர் பியூரிபயர்கள் தொங்கி கொண்டு இருக்கிறது. ஆது ஆடம்பரம் தானே தவிர நல்லது எதுவும் நடக்கப் போவது இல்லை.

Related Articles

ஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்... கடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார். அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ...
நீங்க சினிமாவில் கேமரா மேன் ஆக வேண்டுமா?... Technical DetailsClose up - காமிரா கிட்டத்தில் பார்ப்பது Close shot - கொஞ்சம் விலகிப் பார்ப்பது Two shot - இரண்டு தலைகள் Three Shot...
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2018 ஐபிஎல் ...  வரிசை எண் போட்டி எண் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 1 07-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை...
ஹாலிவுட் படத்தில் ஒல்லிப்பிச்சான்! ̵... இவனெல்லாம் ஒரு ஆளா என்று இளக்காரம் பேசிய மனிதர்களை அடேங்கப்பா என்று வியக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டிற்கு சென்ற தமிழ் நடிகர் என்றதும் அவரை ...

Be the first to comment on "இன்றைய தண்ணீர் விலை? – லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு?"

Leave a comment

Your email address will not be published.


*