இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் நலன் குமாராசாமி, இயக்குனர் பாலாஜி மோகன், இயக்குனர் நித்திலன், இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்று தமிழ் சினிமாவுக்கு நல்ல நல்ல இயக்குனர்களை கொடுத்த நிகழ்ச்சி தான் கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர்.
ஐந்து சீசன்கள் முடிந்து தற்போது ஆறாவது சீசன் நடந்துகொண்டு இருக்கிறது. நான்கு வாரங்களுக்கு மேலாக ஓடியும் நிகழ்ச்சி இன்னும் செலக்சன் ரவுண்டையே தாண்டவில்லை. அந்த அளவுக்கு குறும்படங்கள் குவிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரதாப் போத்தனும் இயக்குனர் வெற்றிமாறனும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியின் தூண்களாக இருந்து வருகிறார்கள் இயக்குனர் வெற்றி மாறனும் இயக்குனர் பிரதாப் போத்தனும். காரணம் அவர்கள் படம் பார்க்கும் விதமும் அதற்கு கமெண்ட் சொல்லும் விதமும் அப்படி. பிரதாப் போத்தன் ஆங்கிலத்தில் சுருக்கமாகவும் வெற்றிமாறன் தமிழில் விளக்கமாகவும் கமெண்ட் தருகிறார்கள். குறிப்பாக வெற்றிமாறன் கமெண்ட் சொல்லும் விதமே பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.
ஒரு படம் ஓடினால் அதை மிக கூர்மையாக கவனிக்கிறார். கன்டினியூட்டி மேக்கப் லாஜிக் டைலாக் உச்சரிப்பு முகபாவனைகள் கேமரா கோணம் என்று அனைத்து தொழில்நுட்பங்களையும் மிக கூர்மையாக கவனித்து விளாவாரியாக கமெண்ட் தருகிறார். அப்படி அவர் தரும் கமெண்ட்டுகள் அனைத்தையும் கவனிக்க தற்போது ஒரு கூட்டமே உருவாகியுள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியும் கமெண்ட்டுக்காக மட்டுமே ஓடியது இல்லை. ஆனால் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி தனித்து தெரிகிறது.
Be the first to comment on "இவருடைய கமெண்டுகளை கேட்க ஒரு கூட்டமே இருக்கு!"