அவளுக்காக எத்தனை கொலை வேணாலும் பண்ணுவேன்! – கொலைகாரன் விமர்சனம்!

Kolaigaran movie review

இந்தியா பாகிஸ்தான், காளி, எமன், சைத்தான், திமிரு புடிச்சவன் இப்படி தொடர் தோல்வியில் இருந்த விஜய் ஆண்டனிக்கு நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது கொலைகாரன்.விஜய் ஆண்டனி படம்னா கதை நல்லா இருக்கும்ப்பா என்ற மக்களின் நம்பிக்கையை இந்த முறை சிதைக்காமல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வெளியே அனுப்புகிறது கொலைகாரன்.

ஒரு கொலை… அதை யார் செய்தார்கள்… அந்தக் கொலையை இவர் செய்திருப்பாரோ அல்லது அவர் செய்திருப்பாரோ… எப்படி செய்திருப்பார்… ஏன் செய்தார்… என்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்புகிறது ஆண்ட்ரு லூயிஸின் திரைக்கதை.  இந்தப் படத்தை பார்த்த பிறகு இந்தப் படத்தின் மூலமான The devotion of suspect X என்ற ஜப்பான் நாவலை ஒருமுறை படிக்கத் தூண்டுகிறது படம். ஆக இந்தப் படத்தின் முதல் பலம் வலுவான திரைக்கதை.

படத்தின் இன்னொரு பலம் அலட்டல் இல்லாத  நடிப்பை தந்திருக்கும் அர்ஜூன். சின்ன சின்ன ரியாக்சன்களால் தான் ஒரு மெச்சூர்டான ஆக்டர் என்பதை உறுதி செய்கிறார். அர்ஜூனை தவிர வேறு யார் இந்த பாத்திரத்தை செய்தாலும் அர்ஜூன் அளவுக்கு வலுவாக இருக்குமா என்பது சந்தேகமே.

நடிப்பே வராத மூஞ்சி விஜய் ஆண்டனியின் மூஞ்சி என்று பலர் விமர்சனம் செய்தாலும் தன்னுடைய  கதை தேர்வு செய்யும் திறமையால் ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளர் சைமன் கே கிங். கேப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் கெடா வெட்டியிருக்கிறார் சைமன் கே கிங். உறுத்தல் இரைச்சல் என்று சொல்லும் அளவுக்கு அறுத்து தள்ளாமல் போதுமான இசையை போதுமான இடங்களில் தந்துள்ளார். இசையை போலவே ஒளிப்பதிவும் அருமை. திரைக்கதை மட்டும் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்திருந்தால் எளிய மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் அமைந்திருக்கும்.

கொலைகாரன் – பார்வையாளர்களை கொலை செய்யாதவன்!

Related Articles

ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் கெத்து! ப... வடசென்னை படம் நல்ல வசூலைப் பெற்றதோ இல்லையோ மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. காரணம் வடசென்னை மக்களை பற்றி இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் இப்படத...
இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவ... பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் எழுதியுள்ள இரண்டாவது புத்தகம் மறக்கவே நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பே ஆனந்த விகடனில் தொடர...
“ருத்ர தாண்டவம்” படத்தால் உண... எந்தெந்த பத்திரிக்கைகள்"அறம்" தவறாமல் நடந்து கொள்கின்றன... எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்...
ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூ.1லட்... சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் ஆனந்தனை...

Be the first to comment on "அவளுக்காக எத்தனை கொலை வேணாலும் பண்ணுவேன்! – கொலைகாரன் விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*